4th Science Term 2 Unit 1 Food Questions and Answers (Tamil Medium)

4th Science : Term 2 Unit 1 : Food

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு

கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இவற்றுள் எந்த உணவை சமைக்காமல் உண்ணலாம்?
அ) இறைச்சி
ஆ) கேரட்
இ) மீன்
ஈ) உருளைக்கிழங்கு
[விடை : ஆ) கேரட்]
2. சமைக்காத உணவு என்பது ------------
அ) துரித உணவு
ஆ) ஆரோக்கியமான உணவு
இ) பச்சையான உணவு
ஈ) சமைத்த உணவு
[விடை : இ) பச்சையான உணவு]
3. சூரிய அடுப்பு ----------- மாசுபாட்டைக் குறைக்கிறது.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) ஒளி
[விடை : அ) காற்று]
4. கீழுள்ளவற்றுள் எதனை 'உலரவைத்தல்' முறையில் பாதுகாக்க முடியாது?
அ) நெல்
ஆ) பயறு வகைகள் மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
இ) மீன்
ஈ) வாழைப்பழம்
[விடை : ஈ) வாழைப்பழம்]
5. நாம் ------------ மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்
ஆ) நம் தேவைக்கு மேல் உண்பதன்
இ) அதிகமான உணவை வாங்குவதன்
ஈ) குப்பைத்தொட்டியில் வீசுவதன்
[விடை : அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. --------- (பச்சையான உணவு / துரித உணவு) நமக்கு வேலை செய்யவும், விளையாடவும் ஆற்றலைத் தருகிறது.
விடை : பச்சையான உணவு
2. சமைத்த உணவு எளிதாக ----------- (செரிக்கும் / செரிக்காது].
விடை : செரிக்கும்
3. அழுத்த சமையற்கலன் ஒரு ------ சமையல் பாத்திரமாகும் (நவீன / பழங்கால).
விடை : நவீன
4. நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது சுத்தமான காற்று, பாதுகாக்கப்பட்ட நீர் மற்றும் _____________ (துரித / சுகாதாரமான) உணவு ஆகும்
[விடை : சுகாதாரமான]
5. நாம் இடியாப்பத்தை ------------ (வேக வைத்தல் / நீராவியில் வேக வைத்தல்) முறையில் தயாரிக்கிறோம்.
விடை : நீராவியில் வேக வைத்தல்
பொருத்துக.

கேள்விகள்:

1. திராட்சை - நவீன பாத்திரம்
2. காய்கறிக்கலவை - உடல் நலமில்லாதபோது எடுத்துக் கொள்ளும் உணவு
3. மின் அழுத்த சமையற்கலன் - பழங்கால பாத்திரம்
4. மண்பானை - பச்சை உணவு
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – சாலட்

விடைகள்:

1. திராட்சை – பச்சை உணவு
2. காய்கறிக்கலவை – சாலட்
3. மின் அழுத்த சமையற்கலன் – நவீன பாத்திரம்
4. மண்பானை – பழங்கால பாத்திரம்
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு
IV. சரியா அல்லது தவறா என எழுதுக.
1. பிரியாணி ஒரு பச்சை உணவு.
விடை : தவறு
2. வறுத்தல் என்பது சமையலின் ஒரு வகையாகும்.
விடை : சரி
3. நம்மால் தோசைக்கல்லில் சோறு சமைக்க முடியும்.
விடை : தவறு
4. சூரிய அடுப்பின் மூலம் சமைப்பதற்கு, சூரிய ஒளி தேவை.
விடை : சரி
5. அதிகமான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடல்நலத்திற்குக் கேடு தரும்.
விடை : சரி
V. சுருக்கமாக விடையளி.
1. எவையேனும் மூன்று சமைக்கும் முறைகளின் பெயர்களை எழுதுக.
விடை: வேகவைத்தல், பொரித்தல், வறுத்தல்
2. உடல் நலமில்லாதபோது நீங்கள் உண்ணவேண்டிய எவையேனும் இரண்டு உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை: தானியக் கஞ்சி, இட்லி
3. உங்களுக்குப்பிடித்த ஏதேனும் ஒரு பச்சை உணவின் படத்தை வரைந்து அதற்கு வண்ணம் தீட்டுக.
விடை:
Raw food drawing
4. உணவுப் பாதுகாப்பு முறைகள் எவையேனும் இரண்டு பற்றி எழுதுக.
விடை: உப்பில் ஊறவைத்தல், உலர வைத்தல்
5. உங்கள் வீட்டில் உணவு வீணாவதை நீங்கள் எவ்விதம் குறைப்பீர்கள்?
விடை: தேவைப்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதிகமாக இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்வேன்.
VI. விரிவாக விடையளி.
1. எவையேனும் நான்கு உணவு பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை :
1. உப்பில் ஊறவைத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் – போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.
2. குளிரூட்டுதல் : உணவைப் பாதுகாக்க குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.
3. உலர வைத்தல் : உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்
4. புட்டியில் அடைத்தல் : காற்றுப்புகாத இறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர். எ.கா.ஜாம்.
2. எவையேனும் நான்கு சமைக்கும் முறைகளை விவரி.
விடை:
வேகவைத்தல் : இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை .
ஆவியில் வேகவைத்தல் : இது பாத்திரத்தில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரின்மேல் எழும்பி வரும் நீராவியில் வைத்து சமைக்கும் முறையாகும். எ.கா. இட்லி, இடியாப்பம்.
வறுத்தல் : இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடாக்கிச் சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை.
பொரித்தல் : இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.
3. சுகாதாரமாக சமைக்கும் வழிமுறைகள் எவையெவை?
விடை:
● சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
● நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
● சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
● அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உண வில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
● உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதிக்குப்பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதன்று.
VII. செயல்திட்டம்.

காகித அட்டை ஒன்றைத் தயார் செய்யவும். உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் பழங்களின் வடிவங்களை களிமண் கொண்டு செய்து அவற்றை அட்டையில் ஒட்டவும்.

Activity Image
செய்து கற்போம்
கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.
(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)

தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்

கேரட், தேங்காய் எண்ணெய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கத்தரி, வெண்டைக்காய், முருங்கைக்காய், வெங்காயம், வெள்ளரிக்காய்

விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்

முட்டை, பால், இறைச்சி, தயிர், மீன், வெண்ணெய், மோர், நெய்

சிந்தித்து விடையளி
எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?
செய்து கற்போம்

சில பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளை மேசையின் மீது காட்சிப்படுத்தி, ஒவ்வொரு மாணவனையும் ஓர் உணவை எடுத்துக் கொள்ளுமாறு கூறவும். மாணவர்கள் எடுக்கும் உணவுப் பொருள்களுக்கு ஏற்ப பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் கொட்டைகள் என நான்கு குழுக்களாக அவர்களைப் பிரிக்கவும்.

உருவாக்குவோம்
காய்கறி / பழக் கலவை (சாலட்) உருவாக்குவோமா? Salad Activity

உங்கள் பகுதியில் கிடைக்கக்கூடியபச்சையாக உண்ணும் உணவுப் பொருள்கள் சிலவற்றைச் சேகரிக்கவும் அவற்றை சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (கொட்டைகளை முழுதாக வைக்கவும்) அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, பின்னர் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது உங்கள் சுவையான காய்கறி / பழக் கலவை (சாலட்டை) உண்டு மகிழுங்கள்!

விடையளிப்போம்
எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.

அ. பச்சையான உணவு : பழங்கள், கொட்டைகள், காய்கறிகள், சாலட்

ஆ. சமைத்த உணவு : மீன், இட்லி, கிக்கன், பிட்சா, பூரி, பிரியாணி

சிந்தித்து விடையளி

குழந்தைகளே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலைப் பாருங்கள். அதில் பல்வேறு உணவு வகைகளை நீங்கள் காணலாம். இந்த உணவுப்பொருள்கள் அனைத்தும் ஒரே முறையில் சமைக்கப்படுகின்றன. என்று நினைக்கிறீர்களா?

Food Types
செய்து கற்போம்
கொடுக்கப்பட்டுள்ள உணவுப்பொருள்களை அவை சமைக்கும் முறைகளின்படி அட்டவணைப்படுத்துக.
அரிசி, பூரி, முறுக்கு, சோளப்பொரி, இட்டலி, மீன், புட்டு, பருப்பு, இடியாப்பம், நிலக்கடலை
Table to fill
விடையளிப்போம்
1. உன் வீட்டில் பின்பற்றப்படும் இரண்டு சமையல் முறைகளை எழுதுக:
வேகவைத்தல், நீராவியில் வேகவைத்தல்
2. சரியா அல்லது தவறா என எழுதுக.

அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும். சரி

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும். தவறு

செய்து கற்போம்
அட்டவணையில் கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் சமைக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.
(வாணலி, பானை, அழுத்த சமையற்கலன், தோசைக்கல், இட்லி குக்கர்)
Utensils Activity
விடையளிப்போம்
சரியா அல்லது தவறா என எழுதுக.

1. முற்காலத்தில் மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர். [தவறு]

2. சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது. [சரி]

3. அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை. [தவறு]

சிந்தித்து விடையளி

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பாருங்கள். உடல்நலத்திற்கு எவை நல்லவை? ஏன்?

Think and Answer Image

விடை

இரண்டாவதாக இருக்கும் படம் உடல் நலத்திற்கு நல்லது ஏனெனில் உணவு பொருட்கள் தூசி மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன

செய்து கற்போம்
பொருத்தமான ஒன்றிற்குக் குறியீடு (✔) செய்யவும். Checkmark Activity
விடையளிப்போம்
ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்.

1. துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது. இல்லை

2. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும். ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.

Lunchbox Activity

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?

விடை : இல்லை. இதிலுள்ள அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்கள் அல்ல

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உங்கள் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க நந்தினிக்கு பரிந்துரை செய்யவும். அதற்கான காரணத்தையும் கூறவும்..

விடை : சிப்ஸ் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக காய்கறி கலவையை (சாலட்) சேர்க்கலாம்
காரணம் : சிப்ஸ் ஆரோக்கியமற்ற உணவு ஆகும். காய்கறி கலவை (சாலட்) உடல் நலத்திற்கு நல்லது ஏனெனில் அதில் அனைத்து உட்டசத்துகளும் உள்ளன.
சிந்தித்து விடையனி

நீங்கள் நோயுற்றிருக்கும்போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?

விடை: அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.
செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு

சிறு காகிதத் துண்டுகளை எடுத்து அவற்றை சுருளாகச் சுருட்டவும். ஒவ்வொரு தாளிலும் ஓர் உணவுப்பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றை மேசையின் மேல் வைக்கவும். தரையில் இரு பெரிய வட்டங்கள் வரைந்து ஒருவட்டத்திற்கு 'உடல் நலமில்லாத போது தவிர்க்க வேண்டியவை" என்றும் மற்றொரு வட்டத்திற்கு "உடல் நலமில்லாத போது எடுத்துக் கொள்ள வேண்டியவை" என்றும் பெயரிடவும் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து ஒரு காகிதச் சுருளை எடுத்து, வாசித்த பிறகு அதற்குரிய வட்டத்தில் நிற்கச் சொல்லவும்.

விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ---------- (இட்டலி / பிரியாணி) எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும்.

விடை : இட்டலி

2. நாம் --------- (துரித / புதிய) உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

விடை : புதிய
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைபிடிக்கப்படும் நாள் மே 28

2. ஊறுகாய் உப்பில் ஊறவைத்தல் முறையில் பாதுகாக்கப்படுகிறது.

விவாதிப்போம்

உங்கள் வீட்டில் ஒருவாரத்தில் வீணாக்கப்படும் அனைத்து உணவுகளையும் பட்டியலிடவும். வீணடிப்பதைக் குறைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் என்று நண்பர்களுடன் விவாதிக்கவும்.