4th Science Term 2 Unit 3 Plants Questions and Answers

4th Science Term 2 Unit 3 Plants

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள்

கேள்விகள் மற்றும் பதில்கள் (Questions and Answers)

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இலையின் முனைப்பகுதி ---------------- ஆகும்.
(அ) இலைத்தாள்
(ஆ) இலை நுனி
(இ) மைய நரம்பு
(ஈ) நரம்புகள்
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : ஆ. இலை நுனி
2. பின்வருவனவற்றுள் எது முதன்மை உற்பத்தியாளர்?
(அ) தாவரம்
(ஆ) விலங்கு
(இ) மனிதன்
(ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : அ. தாவரம்
3. குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?
(அ) மல்லிகை
(ஆ) மணிப்பூ
(இ) டிசம்பர் பூ
(ஈ) கனகாம்பரம்
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : இ) டிசம்பர் பூ
4. அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(அ) பார்த்தீனியம்
(ஆ) மாங்காய்
(இ) விசிறி வாழை
(ஈ) நிலக்கடலை
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : இ. விசிறி வாழை
5. பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?
(அ) காலிபிளவர்
(ஆ) உருளைக்கிழங்கு
(இ) புதினா
(ஈ) முட்டைக்கோஸ்
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : அ. காலிபிளவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒளிச்சேர்க்கையின் போது --------- உற்பத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : உணவு
2. பசுந்தாவரங்கள் ---------- எனும் நிறமியைக் கொண்டுள்ளன.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : பச்சையம்
3. வெங்காயம் தாவரத்தின் ---------- பகுதியாகும்.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : தண்டுப்
4. மலரின் ஆண் பகுதி --------------- ஆகும்.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : மகரந்தம்
5. உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு -------------.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : அரிசி

III. ஓரிரு வார்த்தையில் விடையளி

1. தாவரத்தின் பெண் பகுதி எது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : சூலகம்
2. உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : கொத்தமல்லி
3. உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : கிராம்பு
4. தானியங்களில் காணப்படும் சத்துகள் யாவை?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : கார்போஹைட்ரேட், புரதங்கள்.
5. கோடை காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : ரோஜா

IV. சுருக்கமாக விடையளி

1. இலையின் பாகங்களை எழுதுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.
2. ஒளிச்சேர்க்கை - வரையறு.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.
3. அயல் தாவரங்களின் பெயர்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.
4. நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டுகளின் பெயர்களை எழுதுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: இஞ்சி, உருளைக் கிழங்கு.
5. நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.

V. விரிவாக விடையளி

1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து அவற்றை விளக்குக. Leaf Diagram
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
Leaf Parts Answer

இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).

இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.

மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.

நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும்.

இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.

2. மலரின் படம் வரைந்து அதன் பாகங்களை விவரி.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
Flower Parts

அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே தேன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள் வட்டம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.

சூலகம்: மலரின் நடுப்பகுதியில் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.

VI. செயல்திட்டம்

1. உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு தாவரங்களின் உண்ணக்கூடிய பாகங்களைச் சேகரித்து, அவற்றை உங்களது வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.
2. மலர்கள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் பாகங்கள் குறித்து உங்களது நண்பர்களுடன் கலந்துரையாடவும்.

சிந்தித்து விடையளி

● எப்பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு இலையினுள் செல்கிறது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: இலைத்துளைகள்.
● இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: இலை நரம்புகள்
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் உயிர் வாழ முடியாது?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
தாவரங்களே முதன்மை உற்பத்தியாளர்கள். அவை உணவு மற்றும் ஆக்சிஜனை வழங்குகின்றன. எனவே, தாவரங்கள் இல்லாமல் பிற உயிரினங்கள் வாழ இயலாது.

விடையளிப்போம் (எழுத்துகளை ஒழுங்குபடுத்தி நிரப்புக)

அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடுவது. (ன்சி ஆஜக்)
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: ஆக்சிஜன்
2. முதல் நிலை உற்பத்தியாளர் என்பது . (ம்ரவதா)
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: தாவரம்
3. இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (டிஅ).
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: அடி
4. உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி. ___________ பகுதியில் காணப்படுகின்றன (சைம்ச்பய).
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: பச்சையம்

செய்து கற்போம்

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள். Experiment
உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக. List Plants
பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.

விடையளிப்போம் (கோடிட்ட இடங்களை நிரப்புக)

1. ---------- ஒரு பூவாத் தாவரமாகும்.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: பெரணி
2. தாவரங்கள் ------- மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: மலர்
3. ---------- தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறுவதற்கும் பிற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: பச்சையமற்ற
4. ஆட்டோட்ரோப் தாவரங்கள் -----------, ----------- மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: காற்று, சூரிய ஒளி

விடையளிப்போம் (மலர் பாகங்கள்)

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனைப் பாதுகாக்கிறது.
2. மகரந்தத்தாள் வட்டத்தில் மகரந்தத் துகள்கள் உள்ளன.
3. சூலகம் என்பது மலரின் பெண் பகுதியாகும்.
ஆசிரியர்களுக்கான குறிப்பு:

சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்தபின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள்.

மலரின் பாகங்கள் நிறம்: Flower Parts Color

சிந்தித்து விடையளி

நான்கு பருவ காலங்களின் பெயர்கள் உனக்குத் தெரியுமா?
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை: வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், குளிர்காலம்.

மேலும் அறிந்து கொள்வோம்

கனகாம்பரம் அனைத்துப் பருவங்களிலும் மலரும்.

Flower

குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்.

Kurinji Flower

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

1. டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூனிப்)
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : சம்பங்கி பூ
2. குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : ரோஜா
3. ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை : ரோஜா

செய்து கற்போம்

பல்வேறு அலங்காரத் தாவரங்களைச் சேகரித்து உங்கள் பள்ளித் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ வளர்க்கவும்.

விடையளிப்போம் (கோடிட்ட இடங்களை நிரப்புக)

1. மலர் உணவாகப் பயன்படுகின்றது.
2. உருளைக்கிழங்கின் -------- பகுதி உணவாகப் பயன்படுகிறது.
3. ------- தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
4. விதைகளில் ---------- மற்றும் --------- போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
செய்து கற்போம் (தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து அட்டவணையை நிரப்புக) Food Parts Table