4th Science Term 3 Unit 1 Green Environment Questions and Answers

4th Science Term 3 Unit 1 Green Environment

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1

பசுமை சுற்றுச்சூழல் (Green Environment)

மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
(அ) கழிவுகளை அகற்றுதல்
(ஆ) கழிவுகளைப் பிரித்தல்
(இ) கழிவு சேகரித்தல்
[விடை : (ஆ) கழிவுகளைப் பிரித்தல்]
2. மட்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
(அ) காகிதக் குவளை
(ஆ) நெகிழித் தட்டு
(இ) தேங்காய் ஓடு
[விடை : (ஆ) நெகிழித் தட்டு]
3. எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் போடுவது முக்கியம். இது ----------- பாதுகாப்பிற்கு அவசியம்.
(அ) கழிவு சேகரிப்பு
(ஆ) சுற்றுச்சூழல்
(இ) குப்பை
[விடை : (ஆ) சுற்றுச்சூழல்]
4. ------------ என்பது 3R இல் உள்ள முதல் R ஆகும்.
(அ) மறுபயன்பாடு
(ஆ) குறைத்தல்
(இ) மறுசுழற்சி
[விடை : (ஆ) குறைத்தல்]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ------------ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (ஊறுகாய்க்குப் பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல் / நெகிழிப்பை வேண்டாம் என்று சொல்வது)
விடை : ஊறுகாய்க்குப் பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்
2. எளிதில் மட்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க பயன்படுகிறது. (நெகிழி / மூங்கில்)
விடை : மூங்கில்
3. -------------- நமது சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும். (நெகிழி மாசுபாடு / ஒளி மாசுபாடு)
விடை : நெகிழி மாசுபாடு
4. ----------- ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள் ஆகும். (கண்ணாடி / பல அடுக்கு நெகிழி)
விடை : பல அடுக்கு நெகிழி
III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையைக் கண்டறியவும்:

எண் கேள்வி
1 நெகிழிக் கழிவுகள்
2 கழிவுகளைப் பிரித்தலின் நான்காம் படி
3 குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம்
4 சில்வர் பாத்திரம்
விடைகள்:
1. நெகிழிக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – 3R கள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது
V. சரியா, தவறா என எழுதுக.
1. 3R செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவதற்குச் செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது.
[சரி]
2. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவை.
[தவறு]
3. நெகிழிப்பை, தெர்மோகோல் மற்றும் பலஅடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சிப் பொருள்களாகும்.
[தவறு]
4. குப்பைகளை முறையாகப் பிரிக்கக்கூடாது.
[தவறு]
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
1. 3R என்றால் என்ன?
விடை:

குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.

2. மட்கும் கழிவு என்றால் என்ன?
விடை:

நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்.

3. கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிநிலைகளை எழுதுக.
விடை:

1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.

4. மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:

காகிதம், அட்டை, PET பாட்டில்கள், உலோகங்கள், கண்ணாடி

VII. பின்வருவனவற்றுக்கு விடை தருக.
1. நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக்கழிவுகளைக் கையாளுவீர்கள்?
விடை:

வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.

2. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை:

நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.

3. மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:

மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.

4. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:

நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செயல்பாடு
கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.

(கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்)

வரிசைப்படுத்தப்பட்ட விடை:

1. கழிவுகளைப் பிரித்தல்
2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்,
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
4. கழிவுகளை அகற்றுதல்

செய்து மகிழ்வோம்

காலியான நீர் குடுவையைப் பயன்படுத்தி பறவை உணவுக்கலன் (Bird Feeder), மலர்க்குவளை (Flower vase), எழுதுபொருள் தாங்கி மற்றும் வீட்டில் தொங்கவிடும் அலங்கார ஜாடி போன்றவற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு தயாரிக்கலாம்.

Activity Image 1
நிரப்புவோம்

நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களைப் பட்டியலிடுக.

3R Diagram
குறைத்தல்: நெகிழிப் பைகள், ஜெல் பேனா, நெகிழி தண்ணீர் பாட்டில்கள்.
மறுபயன்பாடு: சணல் பை, பழைய துணிகள், ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகள், மை பேனா.
மறுசுழற்சி: PET குடுவைகள், பழைய செய்தி, பழைய கண்ணாடி குடுவைகள், குறிப்பு புத்தகம்.
செயல்பாடு

கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.

Activity Grid Image
1. மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் :
விடை:

வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு.

2. மறுசுழற்சி செய்யர் கூடிய கழிவுகள் :
விடை:

காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி.

3. மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் :
விடை:

நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.

முயற்சிப்போம்

பள்ளி மாணவர்களை சிறிய குழுக்களாகப் பிரித்து பள்ளி மைதானத்தில் ஊரின் தெருக்களில் காணப்படும் நெகிழிகளைச் சேகரித்து, 3R இன் படி பிரிக்கச் செய்க.

Students Activity
முயற்சிப்போம்

நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.

விடை:

நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.