பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் | 4th Social Science : Term 3 Unit 3 : Rights and Duties of Children
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்:
(ii) குழந்தைகளின் உரிமைகளைப் பட்டியலிடுதல்
(iii) உயிர்வாழ்வதற்கான உரிமையை விவரித்தல்
(iv) வளர்ச்சிக்கான உரிமையை விளக்குதல்
(v) பாதுகாப்பு மற்றும் பங்கேற்பதற்கான உரிமை பற்றிய விவரங்களைக் கொடுத்தல்
அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்
அறிமுகம்
பள்ளியில் ரமேஷுக்கு இன்றைய நாள் ஓர் உற்சாகமான நாளாக அமைந்தது. வகுப்பில் பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை அவன் கற்றுக்கொண்டான். அவனது வகுப்பில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தன் தாயிடம் பகிர்ந்து கொண்டதைக் காண்போம்.
இந்தியக் குடியுரிமையைப் பெற ஒரு வெளிநாட்டவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு வெளிநாட்டவர் இந்தியக் குடியுரிமையைப் பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும்.
(ii) ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு என அழைக்கப்படுகிறது.
(iii) ஒரு நாடு சீராக இணைந்து செயல்பட அரசியலமைப்பு சில விதிமுறைகளை வகுக்கிறது.
இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும். இவற்றின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டதாகும்.
குழந்தைகளின் உரிமைகள்
உலகம் முழுவதும், வெவ்வேறான கொள்கைகள் மற்றும் உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய குழந்தைகளுக்காகச் சில உரிமைகள் உள்ளன. குழந்தைகள் வாழ்வதற்காகவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்காகவும் இவ்வுரிமைகள் நடைமுறையில் உள்ளன. காவ்யாவும் அவளது தந்தையும் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி பேசுவதைப் பார்ப்போம்.
(1) உயிர்வாழ்வதற்கான உரிமை
(2) வளர்ச்சிக்கான உரிமை
(3) பாதுகாப்பு உரிமை
(4) பங்கேற்பதற்கான உரிமை
உயிர்வாழ்வதற்கான உரிமை
வளர்ச்சிக்கான உரிமை
ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி செல்லவும், தன் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உரிமை உண்டு. குழந்தைகளின் வளர்ச்சிக்கான உரிமை பற்றி ஆசிரியர் விஜயா அவர்கள் இன்று கற்பிக்கிறார்.
செயல்பாடு - சிந்தித்து எழுதுக
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?
2. -------------------------------------------------------------
3. -------------------------------------------------------
செயல்பாடு - குறிப்பு
உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.
2. குழந்தையின் வயது: ------------------------------
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம் / இல்லை
4. பள்ளிக்குச் செல்லாததற்கான காரணம்: ----------------------
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? ------------------------------
இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும். ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.
பாதுகாப்பு உரிமை
அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற உரிமை குழந்தைகளுக்கு உள்ளது. இந்திய அரசு இதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளது. இராமன் மற்றும் கவிதாவின் தாய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பற்றி, அக்குழந்தைகளிடம் கலந்துரையாடுவதைக் கேட்போம்.
பங்கேற்பதற்கான உரிமை
குழந்தைகள், அவர்களுக்குத் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உரிமை உள்ளது. அவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டல், பகிர்தல் அவர்களைப் பாதிக்கக்கூடிய அவர்களே. முடிவெடுத்தல் ஆகியன அடங்கும். இவை குறித்து வகுப்பில் நடைபெறும் கலந்துரையாடலைக் கவனிப்போம்.
(1) நம் பள்ளியில் ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்க வேண்டும்.
(2) ஒவ்வொரு நான்கு வகுப்பறைகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும்.
(3) நாங்கள் அனைவரும் விளையாடுவதற்கு ஏதுவாக, விளையாட்டு அறையில் கேரம் போர்டுகள் (Carrom boards), சதுரங்கப் பலகைகள் (Chess boards), பந்துகள் மற்றும் பூப்பந்து இறகுகள் (Badminton racquets) அதிக அளவில் வேண்டும்.
குழந்தைகளுக்கு அவர்கள் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளிலும் கலந்துரையாடவும் அவற்றைச் செயல்படுத்தவும் உரிமை உண்டு.
சொற்களஞ்சியம்
(2) உயிர் வாழ்தல் - தொடர்ந்து வாழ்வதற்கான நிலை
(3) தடுப்பூசி - சில நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும் மருந்து
(4) பாதுகாப்பு - சில தீமைகளிலிருந்தும் காயங்களிலிருந்தும் காத்தல்
(5) பொருத்தமற்றது – சரியானதன்று
நினைவு கூர்க
(ii) குழந்தைகளுக்குச் சிறப்பு உரிமைகள் உள்ளன.
(iii) குழந்தைகள் தம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பதற்கான உரிமை உண்டு.
(iv) குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லவும், நல்ல கல்வியைப் பெறவும் உரிமை உண்டு.
(v) ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற உரிமை குழந்தைகளுக்கு உண்டு.
(vi) குழந்தைகள் தொடர்பான செயல்களில் பங்கேற்க, அவர்களுக்கு உரிமை உண்டு.