4th Social Science Term 3 Unit 2 Questions and Answers - The Story of Madras Presidency

4th Social Science Term 3 Unit 2 Questions and Answers: The Story of Madras Presidency

பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மதராஸ் மாகாணம் ---------------- இல் உருவாக்கப்பட்டது.
அ) 1800
ஆ) 1801
இ) 1802
ஈ) 1803
விடை : ஆ) 1801
2. மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ---------------- இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) 1947
ஆ) 1953
இ) 1956
ஈ) 1969
விடை : 1969
3. மாமல்லபுரம் --------------------- வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.
அ) நாயக்கர்
ஆ) பல்லவ
இ) சோழ
ஈ) ஆங்கிலேய
விடை : ஆ) பல்லவ
4. "தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படுவது எது?
அ) போடிநாயக்கனூர்
ஆ) ஒகேனக்கல்
இ) குற்றாலம்
ஈ) செஞ்சிக் கோட்டை
விடை : இ) குற்றாலம்
5. எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ---------------- ஆவார்.
அ) சரபோஜி மன்னர்
ஆ) சின்ன பொம்மி நாயக்கர்
இ) திம்மா ரெட்டி நாயக்கர்
ஈ) திருமலை நாயக்கர்
விடை : அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

1. மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும். (விடை: சரி)
2. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும். (விடை: தவறு)
3. திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. (விடை: சரி)
4. கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. (விடை: சரி)
5. கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது. (விடை: தவறு)

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

முதலில் சிந்தித்துப் பொருத்திப் பார்க்கவும்:

1. காவலூர்
- கிழக்கின் டிராய்
2. செஞ்சிக் கோட்டை
- ஊட்டி
3. போடிநாயக்கனூர்
- வைணு பாப்பு ஆய்வகம்
4. முத்து நகரம்
- ஏலக்காய் நகரம்
5. ஜான் சல்லிவன்
- தூத்துக்குடி
சரியான விடை: (i) காவலூர் - வைணு பாப்பு ஆய்வகம்
(ii) செஞ்சிக் கோட்டை - கிழக்கின் டிராய்
(iii) போடிநாயக்கனூர் - ஏலக்காய் நகரம்
(iv) முத்து நகரம் - தூத்துக்குடி
(v) ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக? (i) தமிழ்நாட்டிலுள்ள அழகான கோட்டைகளில் ஒன்றாகும்.
(ii) இக்கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
(iii) ஆங்கிலேயர்கள் இதனை 'கிழக்கின் டிராய்' என அழைத்தனர்.
2. திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை? (i) மதுரை மாவட்டத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை அமைந்துள்ளது.
(ii) இது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக் கலைகளின் ஒருமித்த கலவையாகும்.
3. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. (i) ஏற்காடு.
(ii) மேட்டூர் அணை (ஸ்டான்லி நீர்த்தேக்கம்)
(iii) ஒகேனக்கல் அருவி - தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்றாகும்
4. கல்லணை - குறிப்பு வரைக. (i) கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
(ii) கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கரிகாலற்சோழன் கட்டினார்.
5. மலைக் கோட்டை - குறிப்பு வரைக. (i) மலைக்கோட்டை திருச்சியில் உள்ளது.
(ii) 83 மீட்டர் உயரமுள்ள பழமையான பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது.
(iii) இக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்துக் கோயில்கள் உள்ளன.
6. தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. (i) மெரினா கடற்கரை
(ii) மலைக்கோட்டை
(iii) மகாபலிபுரம்
(iv) கொடைக்கானல்
(v) வேலூர்கோட்டை
(vi) விவேகானந்தர் பாறை
(vii) செஞ்சிக்கோட்டை
(viii) இராமேஸ்வரம்
(ix) ஒகேனக்கல் அருவி
(x) குற்றாலம்
(xi) ஏற்காடு
(xii) திருசெந்தூர் முருகன் கோயில்
(xiii) பிரகதீஸ்வரர்கோயில்

செயல்திட்டம்

உங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கிய நினைவுச்சின்னங்கள் / வரலாற்று இடங்களின் படங்களை ஒட்டுக. நினைவுச்சின்னங்கள்
Tags: The Story of Madras Presidency | Term 3 Chapter 2 | 4th Social Science பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.

4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency : Questions with Answers. 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு : வினா விடை.