4th Standard Maths Term 2 Unit 1 Geometry : Iterative Patterns

4th Standard Maths Term 2 Unit 1 Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்
முப்பரிமாண மற்றும் இருபரிமாண துருவங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

இயல் 1: வடிவியல்

4th Maths Term 2 Unit 1 Intro

முப்பரிமாண மற்றும் இருபரிமாண துருவங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

Shapes difference
வடிவங்களில் மீள் அமைப்புகள் Patterns in nature

நாம் மரங்கள், ஆறுகள், மலைகள், ஓடுகள், மேகங்கள், இலைகள் மற்றும் பலவற்றில் அமைப்பைக் காண்கிறோம். மறுசெய்கை என்பது ஒரு செயல் முறையின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகும். மீள் அமைப்புகளை உருவாக்க வடிவங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இங்கே பார்க்கப் போகிறோம்.

1. வட்டங்கள், சுருள்கள், நீள்வட்டங்கள் ஆகியவற்றை வரைதல்

நீங்கள் முன் வகுப்பிலேயே வட்டம் வரைய கற்றுக் கொண்டீர்கள்.

Drawing circles செயல்பாடு

மேலே உள்ள வடிவங்களை வரைந்து வண்ணம் தீட்டுக.

மேலே உள்ள வடிவங்களைப் பயன்படுத்தி மீள் அமைப்புகளை உருவாக்கப் போகிறோம்.

எடுத்துக்காட்டுகள் Examples of patterns
செயல்பாடு

தேவையான பொருட்கள்: காகிதம், கரிக்கோல் (Pencil), பயன்படுத்தப்படாத பாட்டில் மூடி, செலோடேப்.

ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் செலோடேப்பை வைக்கவும். பாட்டில் மூடியில் 2 (அ) மூன்று துளைகள் போடவும். பாட்டில் மூடியை செலோடேப்பினுள் வைக்கவும். அதில் கரிக்கோலை சொருகவும். செலோடேப்பை அழுத்தமாக பிடிக்கவும். செலோடேப்பினுள் கரிக்கோலை இங்குமங்குமாக இழுத்துஸ்பைரோகிராப் வரையவும். நமக்கு ஸ்பைரோகிராப் கிடைக்கப் பெற்றது.

Spirograph activity

ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் மாணவர்களை செலோடேப்பிற்கு பதிலாக வளையலை பயன்படுத்துமாறு ஊக்குவித்தல்.

இவற்றை முயல்க.

கொடுக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டு அமைப்புகளை நிறைவு செய்க மற்றும் அதற்கு உன் விருப்பத்திற்கேற்ற வண்ணம் தீட்டுக.

Try this pattern
2. வரைந்த வடிவங்களை ஒப்பிடுதல் மற்றும் வேறுபடுத்துதல்.

மாணவர்களே வட்டங்கள், சுருள்கள் மற்றும் நீள் வட்டங்கள் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த அமைப்புகளை தயார் செய்து. அதனை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடவும்.

Shapes comparison
3. சூழ்நிலையில் பார்க்கும் மீள் அமைப்புகளில் எடுத்துக்காட்டுகளை ஆராய்ந்து வெளிப்படுத்துதல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை உற்றுநோக்கவும்.

Cactus Pattern

சப்பாத்திக் கள்ளி நீள்வட்ட வடிவ அமைப்பிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

Snail Shell Pattern

ஒரு நத்தையின் ஓடு சுருள் வடிவ அமைப்பிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

Bangle Pattern

வளையல் வட்ட வடிவ அமைப்பைக் குறிக்கிறது.

உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள மீள் அமைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் சில கீழே கொடுக்கப்பட்டன.

Pattern creation

சுற்றுப்புற சூழலில் உள்ள அமைப்புகளை உற்று நோக்கவும். கோலங்களை பூக்களின் இதழ்கள் மற்றும் மரங்களில் இருந்து விழுந்த இலைகளைப் பயன்படுத்தி உங்களுடைய படைப்புத்திறனைப் பயன்படுத்தி வண்ணங்களால் நிரப்புக. வட்டங்கள், சுருள்கள் மற்றும் நீள்வட்டங்களை சார்ட் அல்லது வண்ணக்காகிதம் அல்லது நூல்களைப் பயன்படுத்தி ஸ்பைரோகிராப் அமைப்புகள் உருவாக்கபடுகின்றன. இவ்வமைப்புகளை வண்ணங்கள் கொண்டும் அமைக்கலாம்