4th Standard Maths Term 3 Unit 6 Fractions - Understanding Equivalence

4th Maths Term 3 Unit 6 Fractions

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

சமானத்தை உணர்தல்

2/4 மற்றும் 1/2 மேலும் 2/2, 3/3, 4/4 மற்றும் 1 ஆகியவற்றின் சமானத்தை உணர்தல்.

செயல்பாடு 3

பழைய செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்க.

(1)
விளையாட்டு என்னவென்றால் நீங்கள் அதை உங்களால் நிரப்ப வேண்டும், நீங்கள் அதை முயற்சி செய்ய முடியுமா?
குறிப்பு: அமர்க
(2)
இரண்டு சம அரைப் பகுதிகளாக மடிக்கவும். இந்த இடத்தை நிரப்புவதற்கு தங்களுடைய திட்டம் என்ன?
குறிப்பு: நில்
(3)
மேலும், இரண்டு சம அரைப் பகுதிகளாக மடிக்கவும். நீங்கள் அதை முயற்சி செய்ய முடியுமா?
குறிப்பு: ஒரு காலில் நிற்கவும்
(4)
மேலும், இரு சம அரைபாகங்களாக மடிக்கவும், உன்னால் முடியுமா?
குறிப்பு: பெருவிரலில் நிற்கவும்

மேலும் இதை செய்ய விருப்பமா?

தர்பூசணி மற்றும் பின்னங்கள்

நண்பர்கள் நால்வர் கோடை வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அனைவருக்கும் தாகம் எடுக்க அருகில் உள்ள பழக்கடையில் ஒரு தர்பூசணி வாங்கினர். அதை நான்கு சமபாகமாக வெட்டி ஆளுக்கு ஒரு பாகமாக உண்டனர். அவர்கள் பங்கு பிரித்த முறையை காண்போமா?

Watermelon Fraction

காகித மடிப்பு - முறை 1

ஒரு சதுர வடிவத்தாளை எடுத்து இரண்டாக மடிக்கச் செய்து, அதில் ஒரு பகுதிக்கு வண்ண மடிக்கச் செய்தல்.

Paper folding half

வண்ணமடிக்கப்பட்ட பகுதியின் பின்னம் = 1/2

காகித மடிப்பு - முறை 2

இப்போது மீண்டும் ஒரு முறை தாளை மடிக்கச் செய்து, நான்கு சமபாகமாக ஆக்குதல்.

Paper folding 4 parts

இப்போது கவனிக்க நான்கு சமபாகமாக மடிக்கப்பட்ட தாளில் வண்ணமடிக்கப்பட்ட பாகத்தின் பின்னம் = 2/4

தாளின் அளவு மாறவில்லை.

சமானத்தை உணர்தல்

Comparison of fractions

இரண்டு பாகமானது நான்காக மாறியிருக்கிறது. வண்ணமடிக்கப்பட்ட ஒரு பாகம் இரண்டாக மாற்றமடைந்துள்ளது.

2/4 மற்றும் 1/2 மேலும் 2/2, 3/3, 4/4 மற்றும் 1 ஆகியவற்றின் சமானத்தை உணர்தல்.

2/4 மற்றும் = இவ்வாறு இருப்பதற்கு சமானம் என்று பெயர்.