4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்
நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்
ஆசிரியர் செயல்பாடு:
ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.
அலகு - 5 : நேரம்
நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்
நினைவு கூர்வோம்
ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.
ஞாயிறு, ஞாயிறு, மகிழ்ச்சியாக இருக்கலாம்.
திங்கள், திங்கள், பள்ளிக்குச் செல்லலாம்
செவ்வாய், செவ்வாய், சிரித்து விளையாடலாம்
புதன், புதன், புத்தியை தீட்டலாம்
வியாழன், வியாழன், விண்ணில் பறக்கலாம்
வெள்ளி, வெள்ளி, சத்தாக சாப்பிடலாம்
சனி, சனி, சட்டென உட்காரலாம்.
எழு, எழு, எழுந்திரு புதிய நாள் உதித்தது, சுற்றுது, சுற்றுது, பூமி சூரியனைச் சுற்றுது பூமி உருவாகுது புதிய நாள்கள்.