5th Maths Term 1 Unit 2: Dividing 4-Digit Numbers by 2-Digit Numbers (Tamil Medium)

5 ஆம் வகுப்பு கணக்கு - இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்
எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்

முந்தைய வகுப்பில் ஒரு எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுப்பதைப் பற்றி கற்றோம். தற்போது 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுக்கும் வழிமுறையை கற்போம்.

இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்

முந்தைய வகுப்பில் ஒரு எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுப்பதைப் பற்றி கற்றோம். தற்போது 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுக்கும் வழிமுறையை கற்போம்.

Division illustration

அன்றைய நாள் 5 - ம் வகுப்பு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏனென்றால் கல்வி சுற்றுலா செல்வதற்கான பேருந்து பள்ளிக்கு வந்தது. வகுப்பு ஆசிரியர் மாணவர்களை பேருந்திற்குள் செல்ல அனுமதித்தார். மாணவர்கள் பேருந்திற்குள் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டே உள்ளே ஏறினார். பேருந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சென்றடைந்தது. வகுப்பாசிரியர் மாணவர்களின் அனுமதிக் கட்டணமாக ₹1530 செலுத்தினார். மொத்த மாணவர்கள் 34 எனில், ஒரு மாணவனின் அனுமதிக் கட்டணம் எவ்வளவு?

எனவே நாம், மொத்தத் தொகை ₹1530 ஐ 34 ஆல் வகுப்போம்.

$$1530 \div 34$$

படி : 1
Division Step 1

2 இலக்க எண்ணால் வகுக்கும்போது வகுபடும் எண்ணின் முதல் இரண்டு எண்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Initial numbers

ஆனால் 15 என்ற எண் 34 ஐ விட சிறியது, எனவே பத்தாம் இடமதிப்பிலுள்ள 3-யும் எடுத்து வகுக்க வேண்டும்.

Include 3rd digit
படி : 2
Division Step 2

இப்போது 153 ஐ 34 ஆல் வகுப்போம்.

153 − ல் எத்தனை 34 உள்ளது?

$$4 \times 34 = 136$$

படி : 3
Division Step 3

அடுத்து, ஒன்றாம் இடமதிப்பில் 0 எழுத வேண்டும். 170 ஆகிறது.

170 - ல் எத்தனை 34 உள்ளது?

$$5 \times 34 = 170$$

எனவே ஒரு மாணவனின் அனுமதிக் கட்டணம் ₹45 ஆகும்.

ஈவு = 45,
மீதி = 0

வகுத்து ஈவு மற்றும் மீதி கண்டுபிடி,

எடுத்துக்காட்டு 1
Example 1 Calculation
எடுத்துக்காட்டு 2

ஒரு கார் தொழிற்சாலை ஒரு மாதத்திற்கு (30 நாள்கள்) 3750 கார்களைத் தயாரிக்கிறது. எனில், ஒரு நாளில் அந்தத் தொழிற்சாலையில் எத்தனை கார்கள் தயாரிக்கப்படும்?

3750 ஐ 30 நாள்களால் வகுக்க

$$3750 \div 30$$

படி : 1
Ex 2 Step 1

வகுபடும் எண்ணிலிருந்து முதல் இலக்கமான 37 ஐ தெரிந்து கொள்வோம். 37 – ல் எத்தனை 30 உள்ளன?

$$1 \times 30 = 30$$

படி : 2
Ex 2 Step 2

37 லிருந்து 30 ஐக் கழித்தால் 7 கிடைக்கும். இப்போது பத்தாம் இடமதிப்பு 5 ஐ கீழே எழுதுக.

படி : 3
Ex 2 Step 3

75 ஐ 30 ஆல் வகுக்க. 75 - ல் எத்தனை 30 உள்ளன?

$$2 \times 30 = 60$$

75 லிருந்து 60 ஐக் கழித்தால் 15 கிடைக்கிறது.

படி : 4
Ex 2 Step 4

அடுத்தபடியாக ஒன்றாம் இடமதிப்பான '0' வை கீழே எழுதவும். 150 – ல் எத்தனை 30 – கள் உள்ளன?

$$5 \times 30 = 150$$

ஈவு = 125
மீதி = 0

எடுத்துக்காட்டு 3

4327 ஐ 18 ஆல் வகுத்து ஈவு மற்றும் மீதி காண்க.

தீர்வு :

Ex 3 Solution

வகுபடும் எண் = 4327
வகுக்கும் எண் = 18
ஈவு = 240
மீதி = 7