5th Standard Maths Term 1 Unit 2 Numbers Exercise 2.9 Division Guide

5th Maths: Term 1 Unit 2 Exercise 2.9 - Numbers
எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2.9
1. பின்வரும் வினாக்களுக்கு விடையளி,
அ) ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஒரு மாதத்தில் (30 நாள்கள்) 37500 சிமெண்ட் பைகள் தயாரிக்கின்றது எனில் ஒரு நாளில் தயாரிக்கும் சிமெண்ட் பைகளின் எண்ணிக்கையைக் காண்க.
விடை:
ஒரு மாதத்தில் தயாரித்த சிமெண்ட் பைகளின் எண்ணிக்கை = 37500
ஒரு நாளில் தயாரித்த பைகளின் எண்ணிக்கை = 37500 ÷ 30
Division Step 1
= 1250 பைகள்
ஆ) ஒரு மாந்தோப்பிலிருந்து 8075 மாங்காய்கள் அறுவடையாகிறது. அவற்றை ஒரு பெட்டிக்கு 95 மாங்காய்கள் வீதம் எத்தனை பெட்டிகளில் நிரப்ப முடியும்?
விடை:
மொத்த மாங்காய்களின் எண்ணிக்கை = 8075
ஒரு பையில் உள்ள மாங்காய்களின் எண்ணிக்கை = 95
பைகளின் எண்ணிக்கை = 8075 ÷ 95
Division Step 2
= 85 பைகள்
இ) ஒரு தெருவில் 25 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1625 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது எனில் ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கண்டுபிடி.
விடை:
தெருவில் உள்ள மொத்தக் குடும்பங்கள் = 25
தேவைப்படும் குடிநீரின் அளவு = 1625
ஒரு குடும்பத்திற்கு தேவையான குடிநீரின் அளவு = 1625 ÷ 25
Division Step 3
= 65 லிட்டர்
ஈ) ஒரு சரக்கு வண்டியில் 6750 வாழைப்பழங்கள் ஏற்றப்படுகிறது. இதை 15 கூடைகளில் சமமாக அடுக்கினால் 1 கூடையில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?
விடை:
மொத்த வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6750
சமமாக அடுக்கப்பட்ட கூடைகளின் எண்ணிக்கை = 15
கூடையில் உள்ள பழங்களின் எண்ணிக்கை = 6750 ÷ 15
Division Step 4
= 450
2. கீழ்க்காண்பவற்றை வருக்க
அ) 4525 ÷ 15
ஆ) 3448 ÷ 24
இ) 7342 ÷ 18
ஈ) 3626 ÷ 37
உ) 4872 ÷ 56
விடை :
Division Calculations All