5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்
எடுத்துக்காட்டு 1
ரவீனா தன்னுடைய தோட்டத்தில் 15 வரிசைகளில் தென்னை மரங்களை நட்டார். ஒவ்வொரு வரிசையிலும் 112 மரங்கள் நடப்பட்டன எனில் தோட்டத்தில் நடப்பட்ட மொத்த தென்னை மரங்களின் எண்ணிக்கை யாது?
ரவீனா நட்ட தென்னை மரங்களின் வரிசைகளின் எண்ணிக்கை = 15
ஒரு வரிசையில் நட்ட மரங்களின் எண்ணிக்கை = 112
ஃ 15 வரிசைகளில் நட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை = \( 112 \times 15 \)
= 1680
ஒரு வரிசையில் நட்ட மரங்களின் எண்ணிக்கை = 112
ஃ 15 வரிசைகளில் நட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை = \( 112 \times 15 \)
= 1680
தோட்டத்தில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 1680 ஆகும்.
எடுத்துக்காட்டு 2
ஒரு கி.கி ஆப்பிளின் விலை ₹165 எனில் 12 கி.கி ஆப்பிளின் மொத்த விலை என்ன?
1 கி.கி ஆப்பிளின் விலை = ₹165
12 கி.கி ஆப்பிளின் விலை = \( 165 \times 12 \)
= ₹ 1980
12 கி.கி ஆப்பிளின் விலை = \( 165 \times 12 \)
= ₹ 1980