அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் கூட்டல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
அளவைகளில் கூட்டல்
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் கூட்டல்
எடுத்துக்காட்டு 1
1. கூடுதல் காண்க.
(i) 7 மீ 25 செ. மீ + 15 மீ 50 செ. மீ
கூடுதல் = 22 மீ 75 செ. மீ
படி: 1 சென்டி மீட்டரை முதலில் கூட்டுக
25 செ. மீ + 50 செ. மீ = 75 செ. மீ
படி: 2 மீட்டரை கூட்டுக
7 மீ + 15 மீ = 22 மீ
(ii) 5 கி. மீ 700 மீ + 12 கி. மீ 450 மீ
கூடுதல் = 18 கி. மீ 150 மீ
படி: 1
மீட்டரை கூட்டுக 700 + 450 = 1150
படி: 2
மீட்டரை கிலோ மீட்டராக மாற்றுக
\[ 1150 \div 1000 = 1 \text{ கி. மீ } 150 \text{ மீ} \]
படி: 3
1 கி. மீ + 5 கி. மீ + 12 கி. மீ = 18 கி. மீ
1 + 5 + 12 = 18 கி. மீ 150 மீ
1 + 5 + 12 = 18 கி. மீ 150 மீ
எடுத்துக்காட்டு 2
2. 1 மீ 20 செ.மீ 2 மீ 15 செ.மீ. மற்றும் 1 மீ 25 செ.மீ. நீளமுள்ள மூன்று கயிறுகள் உள்ளன எனில் 3 கயிறுகளின் மொத்த நீளம் என்ன
கயிறுகளின் மொத்த நீளம் = 4 மீ 60 செ.மீ.