5th Standard Maths Term 1 Unit 4 Measurements: Unit Conversion Guide (Tamil Medium)

5th Maths: Term 1 Unit 4: Measurements - Unit Conversion
அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அலகுகளை மாற்றுதல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

அலகுகளை மாற்றுதல்

மில்லி மீட்டராக மாற்றுக, சென்டிமீட்டராக மாற்றுக, மீட்டராக மாற்றுக, கிலோ மீட்டராக மாற்றுக

அலகுகளை மாற்றுதல்

Measurements Header

தெரிந்து கொள்வோம்

மேலின அலகினை கீழின அலகாக மாற்றுவதற்குப் கொடுக்கப்பட்ட அளவீட்டை பெருக்க வேண்டும்.

கீழின அலகினை மேலின அலகாக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட அளவீட்டை வகுக்க வேண்டும்.

Conversion Rule Diagram

100 சென்டிமீட்டர் = 1 மீட்டர்

\[ \frac{1}{2} \] மீட்டர் = 50 சென்டிமீட்டர்

\[ \frac{1}{4} \] மீட்டர் = 25 சென்டிமீட்டர்

\[ \frac{3}{4} \] மீட்டர் = 75 சென்டிமீட்டர்

1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

செயல்பாடு

கீழ்க்கண்டவற்றை அளவு நாடா மற்றும் அளவுகோல் கொண்டு அளந்து எழுதுக.

Activity Image

எடுத்துக்காட்டு 1

மில்லி மீட்டரில் மாற்றுக

(i) 70 செ.மீ
70 செ.மீ = 70 × 10 மி.மீ
= 700 மி.மீ
1 செ.மீ = 10 மி.மீ

(ii) 65 செ.மீ 6 மி.மீ = (65 × 10) + 6 மி.மீ
= 650 + 6
= 656 மி.மீ

(iii) 7 மீ
7 மீ = (7 × 1000) மி.மீ
= 7000 மி.மீ
1 மீ = 1000 மி.மீ

குறிப்பு

1. மீட்டரை மில்லி மீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட மீட்டரை 1000 ஆல் பெருக்க வேண்டும்.

2. சென்டிமீட்டரை மில்லிமீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட சென்டிமீட்டரை 10 ஆல் பெருக்க வேண்டும்.

இவற்றை முயல்க

மில்லி மீட்டராக மாற்றுக

1) 90 செ.மீ
2) 5 செ.மீ 8 மி.மீ
3) 5 மீ 9 மி.மீ

விடை :

1) 90 செ.மீ
90 செ.மீ = 90 × 10
= 900 மி.மீ

2) 5 செ.மீ 8 மி.மீ
5 செ.மீ 8 மி.மீ = 5 × 10 + 8 மி.மீ
= 50 + 8
= 58 மி.மீ

3) 5 மீ 9 மி.மீ
5 மீ 9 மி.மீ = 5 × 1000 + 9
= 5009 மி.மீ

எடுத்துக்காட்டு 2

சென்டிமீட்டராக மாற்றுக

(i) 5 மீ
5 மீ = (5 × 100) செ.மீ
= 500 செ.மீ

(ii) 7 மீ 40 செ.மீ
7 மீ 40 செ.மீ = (7 × 100) + 40 செ.மீ
= 700 + 40
= 740 செ.மீ

(iii) 110 மி.மீ
110 மி.மீ = 110 ÷ 10 செ.மீ
= 11 செ.மீ
Division Table cm

குறிப்பு

மீட்டரிலிருந்து சென்டி மீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட மீட்டரை 100 ஆல் பெருக்க வேண்டும்,

இவற்றை முயல்க

சென்டிமீட்டராக மாற்றுக

1) 8 மீ
2) 6 மீ 4 செ.மீ
3) 80 மி.மீ

விடை :

1) 8 மீ
8 மீ = 8 × 100 = 800 செ.மீ

2) 6 மீ 4 செ.மீ
6 மீ 4 செ.மீ = 6 × 100 + 4 செ.மீ
= 600 + 4 = 604 செ.மீ

3) 80 மி.மீ
80 மி.மீ = 80 ÷ 10 = 8 செ.மீ

எடுத்துக்காட்டு 3

மீட்டராக மாற்றுக

(i) 7 கி.மீ 50 மீ
7 கி.மீ 50 மீ = (7 × 1000) + 50 மீ
= 7000 + 50
= 7050 மீ
1 கி.மீ = 1000 மீ

(ii) 850 செ.மீ
850 செ.மீ = 850 ÷ 100 மீ
= 8 மீ 50 செ.மீ
Division 100
(iii) 2005 மி.மீ
2005 மி.மீ = 2005 ÷ 1000 மீ
= 2 மீ 5 மி.மீ
Division 1000

குறிப்பு

1. கிலோ மீட்டரை மீட்டாராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கிலோ மீட்டரை 1000 ஆல் பெருக்க வேண்டும்.

2. கொடுக்கப்பட்ட மில்லி மீட்டரை மீட்டராக மாற்ற மில்லி மீட்டரை 1000 ஆல் வகுக்க வேண்டும்.

இவற்றை முயல்க

மீட்டராக மாற்றுக

1. 8 கி.மீ 400 மீ
2. 900 செமீ
3. 3500 மி.மீ

விடை :

1. 8 கி.மீ 400 மீ
8 கி.மீ 400 மீ = ( 8 × 1000) + 400 மீ
= 8000 + 400
= 8400 மீ

2. 900 செ.மீ
900 செ.மீ = 900 ÷ 100
= 9 மீ

3. 3500 மி.மீ
3500 மி.மீ = 3500 ÷ 1000
= 3 மீ 500 மில்லி மீட்டர்

Division Helper

எடுத்துக்காட்டு 4

கிலோ மீட்டராக மாற்றுக

(i) 9000 மீ
1000 மீ = 1 கி.மீ
9000 மீ = 9000 ÷ 1000 மீ
= 9 கி.மீ
Division 9000
(ii) 2300 மீ
2300 மீ = 2300 ÷ 1000 மீ
= 2 கி.மீ 300 மீ
Division 2300

குறிப்பு

மீட்டரிலிருந்து கிலோ மீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட மீட்டரை 1000 ஆல் வகுக்க வேண்டும்.

இவற்றை முயல்க

கிலோ மீட்டராக மாற்றுக

1. 5430 மீ
2. 7500 மீ
3. 8000 மீ

விடை :

1. 5430 மீ
5430 மீ = 5430 ÷ 1000
= 5 கி.மீ 430 மீ

Division Helper 5430

2. 7500 மீ
7500 மீ = 7500 ÷ 1000
= 7 கி.மீ 500 மீ

Division Helper 7500

3. 8000 மீ
8000 மீ = 8000 ÷ 1000
= 8 கி.மீ

Division Helper 8000

Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.

5th Maths : Term 1 Unit 4 : Measurements : Conversion of length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அலகுகளை மாற்றுதல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.