5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்
புள்ளி, கோடு, கோட்டுத்துண்டு, கதிர்
அலகு −1
வடிவியல்
புள்ளி, கோடு, கோட்டுத்துண்டு, கதிர்
புள்ளி ●
ஒரு தளப்பரப்பில் சரியான இடத்தை குறிப்பது புள்ளியாகும்.
கோடு
முடிவில்லாமல் இருபுறமும் நீட்சியடையும் நேர் தடத்தில் இருக்கும் ஒரு தொகுதிப் புள்ளிகள் கோடாகும்.
கோட்டுத்துண்டு
இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு இடையே உள்ள கோட்டின் ஒரு பகுதி கோட்டுத்துண்டு எனப்படும்.
கதிர்
ஓர் ஆரம்பப் புள்ளியுடன் ஒரு திசையில் முடிவில்லாமல் நீட்சியடையும் கோட்டின் ஒரு பகுதி கதிர் ஆகும்.
கோணங்களின் வகைகள்
முயன்று பார்
1. சரியானவற்றை (✓) குறியிடுக.
(i)
C மற்றும் D புள்ளிகளுக்கு இடையேயுள்ள மிகக் குறைந்த நீளத்தைக் காட்டுவது கோட்டுத்துண்டு CD / வரைவளைக்கோடு CD ✓
(ii)
கோடு PQ மற்றும் கோடு QP குறிப்பது வெவ்வேறு கோடுகள் / ஒரே கோடு ✓
(iii)
C என்ற புள்ளி இருப்பது கதிர் AB ✓ / கதிர் BD.
(iv)
MN என்ற கோட்டுத்துண்டின் நீளம் அளக்கக்கூடியது ✓ / அளக்க முடியாதது.
(v)
கதிர் RT என்பது கோடு TR −இன் ஒரு பகுதி ஆகும் ✓ / பகுதி ஆகாது.
2. பின்வரும் கோணங்களின் வகையை எழுதுக.
(i)
விடை :
கோண வகை : செங்கோணம்
(ii)
விடை :
கோண வகை : குறுங்கோணம்.
(iii)
விடை :
கோண வகை : நேர்கோணம்
(iv)
விடை :
கோண வகை : விரிகோணம்.