5th Maths Term 2 Unit 2: Factors and Multiples | Numbers Tamil Medium Guide

5th Maths: Term 2 Unit 2: Numbers - Factors and Multiples

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

காரணிகளும் மடங்குகளும்

கவிதா தன் வீட்டிலிருந்து 12 லட்டுகள் கொண்டு வந்திருந்தாள். அவள் தன் நண்பர்களுக்கு ஆளுக்கொரு லட்டு கொடுத்தாள். லட்டுகள் மீதமில்லாமல் 12 நண்பர்களுக்குக் கொடுக்க முடிந்தது.

அவள் ஒருவருக்கு 2 லட்டுகள் வீதம் கொடுத்திருந்தால் மீதமில்லாமல் 6 நண்பர்களுக்குக் கொடுக்க முடியும்.

அவள் ஒருவருக்கு 3 லட்டுகள் வீதம் கொடுத்திருந்தால் மீதமில்லாமல் 4 நண்பர்களுக்குக் கொடுக்க முடியும். இதுபோல் லட்டுகள் மீதமில்லாதவாறு எத்தனை நண்பர்களுக்கு அவளால் பகிர்ந்தளிக்க முடியும்? இதுபோல் அவளால் ஒவ்வொருவருக்கும் 4 லட்டுகள், 6 லட்டுகள் அல்லது 12 லட்டுகள் கொடுத்திருக்க முடியும்.

ஆகவே, 12 ஐ மீதமில்லாமல் வகுக்ககூடிய எண்கள் 1, 2, 3, 4, 6 மற்றும் 12 ஆகும்.

ஓர் எண்ணை மீதமின்றி வகுக்கும் எண்கள் அவ்வெண்ணின் காரணிகள் எனப்படும்
முயன்று பார்

காரணிகளைக் கண்டறிக.

(i) 4 இன் காரணிகள் 1, 2 மற்றும் 4

(ii) 10 இன் காரணிகள் 1, 2 , 5 மற்றும் 10

(iii) 16 இன் காரணிகள் 1, 2 , 4, 8 மற்றும் 16

(iv) 18 இன் காரணிகள் 1, 2 , 3, 6 ,9 மற்றும் 18

(v) 20 இன் காரணிகள் 1, 2 , 4, 5, 10 மற்றும் 20

(vi) 24 இன் காரணிகள் 1, 2 , 3, 4, 6, 8, 12 மற்றும் 24

(vii) 42 இன் காரணிகள் 1, 2 , 3, 6, 7, 14, 21 மற்றும் 42

மற்றொரு முறை

18 இன் காரணிகளைக் கண்டறிக.

Finding factors of 18

1, 2, 3, 6, 9 மற்றும் 18 ஆகியன 18 இன் காரணிகள்.