எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - சதுர எண்கள் | 5th Maths : Term 2 Unit 2 : Numbers
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
சதுர எண்கள்
ஒரு எண்னை மீண்டும் அதே எண்ணுடன் பெருக்கும் போது சதுர எண் உருவாகிறது.
அலகு – 2
எண்கள்
சதுர எண்கள்
4
2 × 2 = 4
9
3 × 3 = 9
16
4 × 4 = 16
25
5 × 5 = 25
36
6 × 6 = 36
உங்களுக்குத் தெரியுமா?
2 × 2 என்பதை \(2^2\) என எழுதலாம். இதனை இரண்டின் அடுக்கு இரண்டு எனக் கூறலாம்.
3 × 3 என்பதை \(3^2\) என எழுதலாம். இதனை மூன்றின் அடுக்கு இரண்டு எனக் கூறலாம்.
வரையறை
முயன்று பார்
செயல்பாடு 1
அ. கட்டங்களை எண்ணி எழுதவும்.
செயல்பாடு 2
ஆ. சதுர எண்களை வட்டமிட்டு வண்ணமிடவும்.
செயல்பாடு 3
கட்டகத்தாள் அல்லது வரைபடத்தாளில் வரைந்து மகிழ்வோம்.
செயல்பாடு 4
ஆசிரியர் 1 முதல் 9 வரை எண் கொண்ட அட்டைகளையும் அவற்றின் சதுர எண்கள் (1, 4, 9, 16,...) கொண்ட அட்டைகளையும் செய்து தனித்தனி குடுவைகளில் வைக்கவும்.
ஒரு குழந்தையை அழைத்து 1 முதல் 9 வரை உள்ள எண் குடுவையிலிருந்து ஓர் எண் அட்டையை எடுக்கச் சொல்லி அதனை அனைவருக்கும் காண்பிக்க சொல்லவும். இப்பொழுது அந்தக் குழந்தை அடுத்த குடுவையிலிருந்து அந்த எண்ணுக்குரிய சரியான சதுர எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அக்குழந்தைச் சரியான சதுர எண்ணைத் தேர்ந்தெடுத்தால் வெற்றியாளராகக் கருதப்படுவார்.
பயிற்சி 2.1
1. 2 இன் சதுர எண் ………………………………
விடை : 2 × 2 = 42. 5 இன் சதுர எண் …………………………….
விடை : 5 × 5 = 253. 
இந்தச் சதுரங்கள் ஒரு சதுர எண்ணை குறிக்கின்றன. அந்த சதுர எண் ………………………….. ஆகும்.
விடை : 9 குறிப்பு: சதுரங்களின் எண்ணிக்கை : 94. பின்வரும் எண்களில் எந்த எண் சதுர எண் ஆகும் …………………..
(i) 23
(ii) 54
(iii) 36
(iv) 45
விடை : (iii) 365. 49 −க்கு அடுத்த சதுர எண் எது?
(i) 76
(ii) 95
(iii) 64
(iv) 54
விடை : (iii) 64