பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நேரம், பணம் மற்றும் தொலைவு தொடர்புடைய கணக்குகளை உருவாக்க அறிதல் | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து
நேரம், பணம் மற்றும் தொலைவு தொடர்புடைய கணக்குகளை உருவாக்க அறிதல்
நேரம், பணம் மற்றும் தொலைவு தொடர்புடைய கணக்குகளை உருவாக்க அறிதல்
(i) ராஜீ ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ தூரமும், தீனு அரை மணி நேரத்தில் 5 கி.மீ தூரமும் பயணிக்கிறார்கள் எனில், யார் விரைவாக பயணித்தார்கள்?
(ii) மெட்ரோ இரயிலில் பயணிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு ₹ 60 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தீபாவிடம் ₹ 180 உள்ளது எனில், அவர் எத்தனை மணிநேரம் மெட்ரோ இரயிலில் பயணிக்க முடியும்?
(iii) செந்தில் 5 கி.மீ தூரத்தைக் கடக்க ₹ 80 செலவு செய்கிறார். கௌதம் 30 கி.மீ தூரத்தைக் கடக்க ₹ 50 செலவு செய்கிறார். குறைந்த செலவில் பயணம் செய்தது யார்?
மேலே குறிப்பிட்ட கேள்விகளிலிருந்து, காலம், தொலைவு, பணம் இவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பினை தீர்மானிக்க முடிகிறது. இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
\[ \text{வேகம்} = \frac{\text{தொலைவு}}{\text{நேரம்}} \]
\[ \text{நேரம்} = \frac{\text{தொலைவு}}{\text{வேகம்}} \]
\[ \text{தொலைவு} = \text{வேகம்} \times \text{நேரம்} \]
எடுத்துக்காட்டு
சபரி என்பவர் 5 கி.மீ/ மணி வேகத்தில் 5 மணி நேரம் நடந்தார் எனில், அவர் கடந்த தூரம் எவ்வளவு?
தீர்வு:
(i) தொலைவு = வேகம் × நேரம்
(ii) = 5 × 5
(iii) சபரி கடந்த தொலைவு = 25 கி.மீ
(ii) = 5 × 5
(iii) சபரி கடந்த தொலைவு = 25 கி.மீ