5th Standard Maths Term 2 Unit 5 | Comparing Time Money Distance Guide

5th Standard Maths Term 2 Unit 5 - Comparing Time, Money, and Distance
பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5

5 ஆம் வகுப்பு கணக்கு: நேரம், பணம், தொலைவு ஆகியவற்றை ஒப்பிடுதல்

ஒரு முழுப்பாகத்தைச் சமபாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களைக் குறிப்பது பின்னம் எனப்படும்.

நேரம், பணம், தொலைவு ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் கணக்குகளுக்குத் தீர்வு மற்றும் காரணம் கூறும் திறன் வளர்த்தல்

நினைவுகூர்தல்:

ஆசிரியர் : வணக்கம். குழந்தைகளே சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தடைந்தீர்களா?

குழந்தைகள் : ஆமாம், ஆசிரியரே.

ஆசிரியர் : நீங்கள் நேரம், பணம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பை அறிவீர்களா? நாம் அவற்றைப் பற்றி விவாதிக்கலாமா? பிரபு, நீ எங்கிருந்து வருகிறாய்? நீ பயணத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறாய்? நாள்தோறும் பள்ளிக்கு வர எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்கிறாய்?

பிரபு : நான் காலையில் நாள்தோறும் 8.30 மணிக்குப் புறப்பட்டு ₹ 8 செலவு செய்து, 3 கி.மீ பயணம் செய்து பள்ளியை 8.45 மணிக்கு வந்தடைகின்றேன் .

ஆசிரியர் : ஆகவே, நாள்தோறும் 3 கி.மீ தூரத்தை ₹ 8 செலவு செய்து 15 நிமிடங்களில் பயணிக்கின்றாய்.

ஆசிரியர் : சரி குழந்ததைகளே, நாம் நேரம், பணம் மற்றும் தொலைவு பற்றி கற்கலாம்.

தெரிந்து கொள்வோம்

1 மைல் = 1.610 கி.மீ (தோராயமாக)

செயல்பாடுகள் 1, 2

(1) உன் நகரத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்திற்கு உள்ள தொலைவு, பயணச்செலவு மற்றும் பயணநேரம் ஆகியவற்றை எழுதுக.

நம் அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளில் தொலைவு, நேரம் மற்றும் பணம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உங்களால் விவாதித்து நிரப்ப முடியுமா?

Activity Table 1
(2) சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Distance Map

கீழ்க்காண்பனவற்றை முழுமைப்படுத்துக:

(i) சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: 125 கி.மீ
(ii) சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: 172 கி.மீ
(iii) சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: 332 கி.மீ
(iv) திருச்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: (462 – 332) = 130 கி.மீ
(v) மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: (624 – 462) = 162 கி.மீ
(vi) சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: 707 கி.மீ
(vii) திருச்சிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: (707 – 332) = 375 கி.மீ
(viii) சென்னைக்கும் மதுரைக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை: 462 கி.மீ
(ix) மிக நீண்ட தொலைவு சென்னையிலிருந்து திருச்சியா அல்லது சென்னையிலிருந்து மதுரையா?
விடை: சென்னையிலிருந்து மதுரை