5th Maths Term 3 Unit 3 | Informal Measurement of Volume of Solids

5th Maths: Term 3 Unit 3: Measurements - Informal Volume
அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல் | 5th Maths : Term 3 Unit 3 : Measurements

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல்

அலகு − 3

அளவைகள்

திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல்

சூழ்நிலை 1

வெண்பாவின் மாமா ஓர் இனிப்புப் பெட்டியை அவளிடம் கொடுத்தார். அந்த இனிப்புப் பெட்டியில் 10 இனிப்புக் கட்டிகள் இருந்தன. இப்போது நாம் அந்த இனிப்புப் பெட்டியின் கொள்ளளவு 10 இனிப்புக் கட்டிகள் எனக் கூறலாம். எனவே இனிப்புப் பெட்டியின் கனஅளவு என்பது 10 இனிப்புக் கட்டிகளால் அடைக்கப்படும் இடம் என நாம் கூறலாம்.

சூழ்நிலை 2

குறளினி தன்னுடைய புத்தகங்களை பள்ளி புத்தகப்பையில் வைத்திருந்தாள். அவள் அந்தப் பையில் 5 புத்தகங்களை வைத்திருந்தாள். எனவே, நாம் அந்தப் பையின் கொள்ளளவு 5 புத்தகங்கள் எனக் கூறமுடியும்.

இங்கு ஒரு பையில் உள்ள இடத்தை 5 புத்தகங்கள் நிரப்பிவிட்டன.

இந்த 5 புத்தகங்களின் கனஅளவு என்பது 1 புத்தகப்பையில் அடைபடும் கொள்ளளவு ஆகும்.

1 புத்தகத்தின் கனஅளவு என்பது Book Icon வது பை ஆகும்.

ஒரு குவளையின் கொள்ளளவு என்பது அது அடைத்து வைத்திருக்கும் பொருளின் அளவு ஆகும்.

ஒரு திண்மத்தின் கனஅளவு என்பது அந்த திண்மத்திற்குள் அடைபடும் இடம் ஆகும்.