நேரம் | பருவம் 1 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இரயில்வே நேரம் | 5th Maths : Term 1 Unit 5 : Time
பொதுவாக நாம் 12 மணி நேரத்தை உபயோகிக்கிறோம். முற்பகல் மற்றும் பிற்பகல் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, இரயில் நிலையம், பாதுகாப்பு துறை, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் இரயில்வே நேரத்தை பயன்படுத்துகிறோம்.
பொதுவாக நாம் 12 மணி நேரத்தை உபயோகிக்கிறோம். முற்பகல் மற்றும் பிற்பகல் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, இரயில் நிலையம், பாதுகாப்பு துறை, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் இரயில்வே நேரத்தை பயன்படுத்துகிறோம். இரயில்வே நிலையங்களில் மு.ப, பி.ப என இரயில்வே அட்டவணையில் பார்க்கவோ அல்லது அறிவிப்புகளில் கேட்கவோ இயலாது. ஏனெனில் இரயில்வே நேரம் 24 மணிகளில் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக இரயில்வே நேரம் நான்கு இலக்கங்களாக எழுதப்பட்டிருக்கும். முதல் 2 இலக்கங்கள் மணியையும் அடுத்த 2 இலக்கங்கள் நிமிடத்தையும் குறிக்கும்.
நாம் பின்வருமாறு எழுதலாம்,
12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரமாக மாற்றும் பொழுது பிற்பகல் நேரத்துடன் 12 ஐ கூட்டி நிமிடத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.