5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
5th Maths : Term 1 Unit 6 : Information Processing
முறைப்படுத்தப்பட்ட பட்டியல்
எண் புதிர் கணிதத்தில் தனித்துவம் மிக்க விளையாட்டாக கருதப்படுகிறது. இம்மாதிரியான விளையாட்டுகள் மாணவர்களிடையே கணிதத்தின் மேல் ஆர்வமும் எளிய முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டும்.
எண் புதிர் கணிதத்தில் தனித்துவம் மிக்க விளையாட்டாக கருதப்படுகிறது. இம்மாதிரியான விளையாட்டுகள் மாணவர்களிடையே கணிதத்தின் மேல் ஆர்வமும் எளிய முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டும். அனைத்து வகையான எண் புதிர்களும் அடிப்படை கணித அறிவைக் கொண்டு தீர்க்க முடிவதால் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இங்கு ஒரு கணிதப் புதிர் முறைப்படுத்தபட்ட விதி மற்றும் பண்புகளுடன் உள்ளது.
தெரிந்து கொள்வோமா?
மேற்கண்ட படத்தில் கிடைமட்ட சதுரங்கள் நிரை எனவும் நிலைகுத்து சதுரங்கள் நிரல் எனவும் அழைக்கப்படுக்கிறது.
எடுத்துக்காட்டு 1
\(3 \times 3\) சுடோகு
கொடுக்கப்பட்டுள்ள காலியான சதுரங்களில் 1 லிருந்து 3 வரை எண்களை ஒரே ஒரு முறை பயன்படுத்தி நிரல் மற்றும் நிரைகளை நிரப்புக
[விடை : (1 2 3), (1 3 2), (2 1 3), (2 3 1), (3 1 2)]
இவற்றை முயல்க
1 முதல் 3 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை : 6 முறைகளில்
எடுத்துக்காட்டு 2
\(4 \times 4\) சுடோகு
இவற்றை முயல்க
1 முதல் 4 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை : 24 முறைகளில்
இவற்றை முயல்க
5, 3, 2 = 15 10 22
9, 2, 4 = 18 36 52
8, 6, 3 = 48 24 66
5, 4, 5 = 20 25 41
எனவே 7, 2, 5 = ?
விடை : 14 35 47
குறிப்பு