5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
அறிமுகம்
தகவல் செயலாக்கத்தின் முக்கிய குறிக்கோள் கற்பவர்களை குறிப்பிட்ட தகவல்களைச் சேகரிக்கச் செய்வதும், அவற்றை பகுத்து ஆராயச் செய்வதும், தரவுகளிலிருந்து சரியான முடிவுகளை எடுக்கச் செய்வதும் ஆகும்.
அலகு – 6
தகவல் செயலாக்கம்
அறிமுகம்
தகவல் செயலாக்கத்தின் முக்கிய குறிக்கோள் கற்பவர்களை குறிப்பிட்ட தகவல்களைச் சேகரிக்கச் செய்வதும், அவற்றை பகுத்து ஆராயச் செய்வதும், தரவுகளிலிருந்து சரியான முடிவுகளை எடுக்கச் செய்வதும் ஆகும்.
எடுத்துக்காட்டு
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் தீனா என்கிற மாணவனிடம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளின் படங்களை எடுத்து வரும்படி கூறினார். அவனும் குறுகிய காலத்தில் படங்களைச் சேகரித்து ஆசிரியரிடம் ஒப்படைத்தான் . இது எப்படி குறுகிய காலத்தில் சாத்தியமானது என்பதைப் பார்ப்போம்.
தீனா சேகரித்த தகவலில் இருந்து ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டார். தீனாவால் அந்த கேள்விகளுக்கு வேகமாக விடையளிக்க முடிகிறது. தீனா கேள்விகளுக்கு எளிமையாக விடையளிக்க என்ன செய்தார் என்பதை காண்போம்.
தீனா தான் சேகரித்த தகவல்களை மேலே உள்ளது போல் வகைப்படுத்திய பின் பின்வரும் கேள்விகளுக்கு விடையளித்தான்.
1. எத்தனை படங்கள் உள்ளது என்பதை கண்டுபிடி? : 7
2. எத்தனை மாணவர்களுக்கு மட்டை பந்து விளையாட பிடிக்கும்? : 1
3. எத்தனை மாணவர்கள் கால்பந்து விளையாட விருப்பமாக உள்ளனர்? : 8
4. எத்தனை மாணவர்கள் சுண்டாட்டப்பலகை விளையாட விருப்பமாக உள்ளனர்? : 10
5. எத்தனை மாணவர்கள் ஹாக்கி மட்டை வேண்டும் என விரும்பி கேட்டனர்? : 35