5th Standard Maths Term 1 Unit 6 Information Processing - Bar Graphs Study Guide

5th Maths: Term 1 Unit 6: Information Processing - Bar Graphs

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - செவ்வக விளக்கப்படம் | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

செவ்வக விளக்கப்படம்

செவ்வக விளக்கப்படம் என்பது பல்வேறு வகைப்பட்ட தகவல்களை செவ்வக வடிவில் உள்ள பட்டைகளை கொண்டு ஒப்பிடுவது ஆகும்.

செவ்வக விளக்கப்படம்

செவ்வக விளக்கப்படம் என்பது பல்வேறு வகைப்பட்ட தகவல்களை செவ்வக வடிவில் உள்ள பட்டைகளை கொண்டு ஒப்பிடுவது ஆகும்.

எடுத்துக்காட்டு 1

ஒரு குறிப்பிட்ட கடையில் ஜனவரி மாதத்தில் விற்ற பொருள்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு செவ்வகக் விளக்கப்படம் வரைக.

Example 1 Bar Chart Table
செயல்பாடு 1
1. உன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிடித்தமான விலங்கு எது என்று அறிந்து செவ்வக விளக்கப்படம் வரைக. 2. உன் பள்ளி நண்பர்களுக்கு பிடித்த நிறங்களை அறிக (ஊதா, பச்சை, சிவப்பு, பழுப்பு, நீலம்) இதற்கு செவ்வக விளக்கப்படம் வரைக.
செயல்பாடு 2

ஐந்தாம் வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை (Progress report) கீழே கொடுக்கப்பட்டுள்ளது பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.

Activity 2 Progress Report
எடுத்துக்காட்டு 2

திருச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 வகையான மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மன்றத்திலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு செவ்வக விளக்கப்படம் வரைந்து கீழ்கண்ட வினாவிற்கு விடையளிக்க.

Example 2 Clubs Table
1. எந்த மன்றத்தில் மிக குறைவான மாணவர்கள் உள்ளனர்? எவ்வளவு?

ஓவியமன்றம் 28

2. ஓவியம் மற்றும் வழக்காடு மன்றங்களில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

\[28 + 80 = 108\]

3. விளையாட்டு மன்றத்தில் நாடக மன்றத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

20

4. அனைத்து மன்றங்களிலும் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

478

செயல்பாடு 3

உன் சக மாணவர்களிடையே உள்ள விருப்பமான பிடித்த பொழுது போக்கினை அறிந்து அதற்கு செவ்வக விளக்கப் படம் வரைக. (குறிப்பு: வாசித்தல், வரைதல், தோட்டக்கலை, சமையற்கலை, மீன் பிடித்தல்)