5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
தரவுகளை நேர்கோட்டுக் குறிகள் மூலமாக குறிப்பிடுதல்
சேகரிக்கப்படும் எந்த ஒரு தகவல்களும் எண் வடிவங்களில் கொடுக்கப்பட்டால் அத்தகவல்கள் தரவு என அழைக்கப்படும்.
தரவுகளை நேர்கோட்டுக் குறிகள் மூலமாக குறிப்பிடுதல்
சேகரிக்கப்படும் எந்த ஒரு தகவல்களும் எண் வடிவங்களில் கொடுக்கப்பட்டால் அத்தகவல்கள் தரவு என அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு 1
5 ஆம் வகுப்பு இராமானுஜம் அணியினர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடந்து செல்லும் வாகனங்களின் தகவல்களை சேகரித்து பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
“|” நேர்க்கோட்டு குறியாகும். அதிக எண்ணிக்கையில் உள்ள கோடு நேர் கோட்டுக் குறியீடுகளை எண்ணுவதற்கு கடினமாதலால் பின்வருமாறு குறிக்கப்படுகிறது.
தீர்வு
பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
(i) எண்ணிக்கையில் அதிகப்படியாக பள்ளியைத் தாண்டி சென்றுள்ள வாகனம் எது?
(ii) குறிப்பிட்ட நேரத்தில் தாண்டி சென்ற வண்டிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
குறிப்பு:
பெரிய எண்ணிக்கையில் கொடுக்கப்படும் பல்வேறு தரப்பட்ட தகவல்களை நேர்க்கோட்டு குறி பயன்படுத்தி குறிக்கலாம்.
எடுத்துக்காட்டு 2
பாலு வகுப்பிலுள்ள 20 மாணவர்களிடம் (5 ஆம் வகுப்பு) விருப்பமான தின்பண்டங்களின் விவரங்களைக் கேட்டு சேகரித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்களை நேர்க்கோட்டு குறியீட்டை கொண்டு அட்டவணைப்படுத்துக. இங்கு அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு தின்பண்டத்தை உட்கொள்கிறார்கள்.
செயல்பாடு 1
ஒரு இரு சக்கர வாகன விற்பனையகத்தில் ஒரு வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் தகவல்களை அட்டவணைப்படுத்தி நேர்க்கோட்டு குறியிடுக.
(i) ஞாயிறு - 6
(ii) திங்கள் – 11
(iii) செவ்வாய் – 3
(iv) புதன் - 5
(v) வியாழன் - 16
(vi) வெள்ளி - 16
(vii) சனி - 4
விடை:
செயல்பாடு 2
ஒரு கணித தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வரிசைப்படுத்தி நேர்க்கோட்டு குறியை பயன்படுத்தி அட்டவணைப்படுத்துக.
(அ) எத்தனை மாணவர்கள் மதிப்பெண் 8 மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ளார்கள்?
(ஆ) எத்தனை மாணவர்கள் 4 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றுள்ளனர்?
இவற்றை முயல்க
உனது பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையை சேகரித்து நேர்க்கோட்டுக் குறியை பயன்படுத்தி அட்டவணைப்படுத்துக.
இவற்றை முயல்க
எவையேனும் ஐந்து மாநகரங்களின் ஏதேனும் ஒரு நாளில் பதிவான வெப்பநிலையை தொலைக்காட்சி அல்லது தின இதழ் மூலம் பட்டியலிடுக.
இவற்றை முயல்க
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தரவுகளை சேகரித்து நேர்க்கோட்டு குறியீடு கொண்டு அட்டவணைப்படுத்துக.
(அ) எந்த கதைப் புத்தகம் உன்னுடைய சக மாணவர்களுக்கு பிடிக்கும்?
குறிப்பு: கற்பனைக் கதைகள், அறநெறிக் கதைகள், சிரிப்புக்கொத்துகள், படக்கதைகள், கற்பனை மற்றும் விலங்கு கதைகள்.
(ஆ) உன் சகமாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள்?
குறிப்பு: மருத்துவர், விவசாயி, பொறியாளர், விமானி, அரசியல்வாதி