எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) | 5th Maths : Term 2 Unit 2 : Numbers
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம)
மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் மீ.பொ.ம என்பது கொடுக்கப்பட்ட அனைத்து எண்களாலும் வகுபடக்கூடிய மிகச்சிறிய எண்ணாகும்.
மடங்குகள்ஒரு முயல் முறைக்கு 4 படிகள் என 10 முறை தாவினால் எத்தனை படிகள் தாவியிருக்கும்?
4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36,
ஒவ்வொரு எண்ணுடனும் 4 ஐ பத்து முறை கூட்டிக் கொண்டே வந்தால் நமக்கு 40 கிடைக்கிறது.
(i) ஒவ்வொரு எண்ணும் தன்னுடைய முதல் மடங்கு ஆகும்.
(ii) ஒரு எண்ணின் மடங்குகளுக்கும் அதன் பெருக்கல் வாய்ப்பாட்டிற்கும் ஒரு தொடர்பு உண்டு.
5, 10, 15, 20 , 25 , 30 , 35 , 40 ,
இரு எண்களுக்கும் பொதுவாக உள்ள மடங்குகள் பொது மடங்குகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு9, 12 இக்கும் உள்ள பொது மடங்குகளைக் காண்க.
9 மற்றும் 12 இன் பொது மடங்குகள் 36, 72, … ஆகும்.
எடுத்துக்காட்டு4 மற்றும் 6 இன் மீ.பொ.ம காண்க.
4 மற்றும் 6 இன் பொது மடங்குகள் 12, 24, 36 … ஆகவே, 4 மற்றும் 6 இன் மீ.பொ.ம 12 ஆகும்.
பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம காண்க.
(i) 10 மற்றும் 15
(ii) 8 மற்றும் 6
(iii) 4 மற்றும் 10
(iv) 6 மற்றும் 16
(i) 10 மற்றும் 15
10 இன் மடங்குகள் − 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ...
15 இன் மடங்குகள் − 15, 30, 45, 60, 75, 90, 105, ....
விடை :
10 மற்றும் 15 இன் பொது மடங்குகள்: 30, 60, 90
மீ.பொ.ம = 30
(ii) 8 மற்றும் 6
8ன் மடங்குகள் − 8, 16, 24, 32, 40, 48, 56, 64,…
6ன் மடங்குகள் − 6, 12, 18, 24, 30, 36, 42, 48, …
விடை :
8 மற்றும் 6 இன் பொது மடங்குகள்: 24, 48,
மீ.பொ.ம = 24
(iii) 4 மற்றும் 10
4ன் மடங்குகள் − 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40,…
10ன் மடங்குகள் − 10, 20, 30, 40, 50, 60, 70, …
விடை :
4 மற்றும் 10 இன் பொது மடங்குகள்: 20, 40
மீ.பொ.ம = 20
(iv) 6 மற்றும் 16
6ன் மடங்குகள் − 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, 78, 84, 90, 96, …
16ன் மடங்குகள் − 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144, …
விடை :
6 மற்றும் 16 இன் பொது மடங்குகள்: 48, 96
மீ.பொ.ம = 48
8 மற்றும் 12 இன் மீ.பொ.ம காண்க:
8 மற்றும் 12 இன் மீ.பொ.ம = \(2 \times 2 \times 2 \times 3 = 24\) ஆகும்.
இரு எண்களின் மீ.பொ.ம வைப் பெற அவ்வெண்களின் பொது காரணிகளையும் மற்ற காரணிகளையும் பெருக்க வேண்டும்.
ஒரு எண் மற்றொரு எண்ணின் மடங்காக இருந்தால் பெரிய எண் மீ.பொ.ம ஆகவும், சிறிய எண் மீ.பொ.வ ஆகவும் இருக்கும்.
(i) 4 மற்றும் 16 இன் மீ.பொ.ம 16
(ii) 4 மற்றும் 16 இன் மீ.பொ.வ 4
5th Maths : Term 2 Unit 2 : Numbers : Least Common Multiple (L.C.M ) Numbers | Term 2 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.