5th Standard Maths Term 2 Unit 5: Fractions and Concepts - Detailed Questions and Answers

5th Standard Maths - Fractions and Concepts

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பின்னங்கள் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பின்னங்கள்

ஒரு முழுப்பாகத்தைச் சமபாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களைக் குறிப்பது பின்னம் எனப்படும்.

அலகு − 5

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பின்னங்கள்

ஒரு முழுப்பாகத்தைச் சமபாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களைக் குறிப்பது பின்னம் எனப்படும்.

எடுத்துக்காட்டு 5.1

கீழே கொடுக்கப்பட்டுள்ளது 7 நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும்.

Stars Example

இந்த நட்சத்திரங்களில் நிழலிடப்பட்ட மற்றும் நிழலிடப்படாதவைகளை பின்னங்களாக எவ்வாறு குறிப்பிடுவீர்கள்?

தீர்வு

மொத்த நட்சத்திரங்கள் = 7

நிழலிடப்பட்ட நட்சத்திரங்கள் = 5

நிழலிடப்படாத நட்சத்திரங்கள் = 2

நிழலிடப்பட்ட நட்சத்திரங்களின் பின்னம் =

நிழலிடப்படாத நட்சத்திரங்களின் பின்னம் =

முயன்று பார்

(i) அடிக்கப்பட்ட சதுரத்ததைப் பின்னமாகக் குறிப்பிடுக.

Squares Exercise

(ii) வட்டத்திற்கு வெளியே இருக்கும் வடிவங்களைப் பின்னமாக குறிப்பிடுக.

Shapes Exercise

தொகுதி மற்றும் பகுதியை அடையாளம் காணுதல்.

Numerator and Denominator

கோட்டிற்கு மேலே இருக்கும் எண் தொகுதி ஆகும். கோட்டிற்கு கீழே இருக்கும் எண் பகுதி ஆகும்.

முயன்று பார்

(i) இல் தொகுதி ………. மற்றும் பகுதி ………. ஆகும்.

விடை: தொகுதி 3 பகுதி 7

(ii) இல் தொகுதி ………. மற்றும் பகுதி ………. ஆகும்

விடை: தொகுதி 6 பகுதி 10

எளியப் பின்னங்களை ஒப்பிடுதல்

ஒரு கேக்கினை 8 சம பாகங்களாக வெட்டிய போது இராதிகா 6 துண்டுகளையும், தருண் 2 துண்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

இராதிகாவின் பங்கு =

தருணின் பங்கு =

யாருக்கு அதிக கேக் துண்டுகள் கிடைத்தது?

இராதிகாவிற்கு அதிக கேக் துண்டுகள் கிடைத்தது.

இது உங்களுக்கு எவ்வாறு தெரிந்தது?

இரண்டு பின்னங்களின் பகுதிகள் சமமென்பதால் தொகுதியை ஒப்பிடுவதன் வழியாக தெரிந்து கொண்டோம்.

தொகுதியை சோதிக்கவும்: 2 < 6 (அல்லது) 6 > 2.

எனவே,

< (அல்லது) >

எடுத்துக்காட்டு 5.2

பின்வரும் படங்களை பின்னங்களாக குறிப்பிட்டு அவற்றை ஒப்பிட்டு, அவற்றில் எது பெரியது எனக் குறிப்பிடுக.

தீர்வு

Comparison Example 1

படம் (i) இல் குறிப்பிடப்பட்ட பின்னம் மற்றும்

படம் (ii) இல் குறிப்பிடப்பட்ட பின்னம்

இவ்விரண்டு பின்னங்களின் பகுதி சமம். எனவே, தொகுதியை ஒப்பிடும் போது நமக்கு 3 > 2 எனக் கிடைக்கிறது. எனவே,

>

எடுத்துக்காட்டு 5.3

பின்வரும் படங்களில் நிழலிடப்பட்டப் பகுதிகளை பின்னங்களில் எழுதி எது சிறியது எனக் கூறவும்.

Comparison Example 2

தீர்வு

படம் (i) இல் குறிப்பிட்ட பின்னம்

படம் (ii) இல் குறிப்பிட்ட பின்னம்

இரண்டு பின்னங்களிலுள்ள பகுதிகள் சமம் என்பதால் தொகுதியை ஒப்பிடும் போது 1 < 3 எனக் கிடைக்கிறது. எனவே,

<

Tags : Fractions | Term 3 Chapter 6 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு. 5th Maths : Term 3 Unit 6 : Fractions : Compare fractions Fractions | Term 3 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers.