5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்
செயல்களை செய்து முடிக்க எளிய மற்றும் கடினமான வழிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு காரணம் கூறுதல்
செயல்களை செய்து முடிக்க எளிய மற்றும் கடினமான வழிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு காரணம் கூறுதல்.
கவிதாவும் பவிதாவும் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். கவிதா இடங்களைச் சுற்றிப் பார்க்க முதலிலேயே வண்டியை முன் பதிவு செய்ய நினைத்தாள் ஆனால், பவிதா அந்த இடத்திற்கு சென்றவுடன் வண்டியை ஏற்பாடு செய்துகொள்ள நினைத்தாள். யாருடைய யோசனை சிறந்தது?
சுற்றுலாவிற்கு திட்டமிட மற்ற வழிகளைக் குறிப்பிடவும்
எண்கள் குறிப்பிடப்பட்ட 50 புத்தகங்களை அடுக்குதல்.
நூலகத்தின் இரண்டு அலமாரிகளில் 50 புத்தகங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளை எழிலன் மற்றும் இனியனிடம் அடுக்குவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில் 1 முதல் 50 வரை எண்கள் இடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அலமாரியிலும் 5 அறைகள் உள்ளன.
எழிலன் பத்து புத்தகங்களை மொத்தமாக ஓர் அறையில் வைத்து அடுக்கினான். ஆனால் இனியன் 5 அறைகளிலும் ஒவ்வொரு புத்தகமாக அடுக்கினான்.
இவ்விரு முறைகளில் எது எளிமையானது? யார் முதலில் புத்தகத்தை அடுக்குவார்?