5th Standard Maths Term 3 Unit 3 Measurements - Measuring Water Volume (Tamil Medium)

5th Standard Maths Term 3 Unit 3 - Measuring Water Volume (Tamil Medium)
அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நீரின் அளவை அளத்தல் | 5th Maths : Term 3 Unit 3 : Measurements

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

நீரின் அளவை அளத்தல்

குடுவையில் ஒரு பொருளை இடுவதன்மூலம் அதிகரிக்கும் நீரின் அளவை அளத்தல்.

செயல்பாடு 1

குடுவையில் ஒரு பொருளை இடுவதன்மூலம் அதிகரிக்கும் நீரின் அளவை அளத்தல்.

Water level measurement intro

ஒரு கண்ணாடிக் குடுவையில் சென்டிமீட்டர் மற்றும் மில்லி மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்திக் குறிக்க. 20 செ.மீ அளவில் தண்ணீர் நிரப்புக

ஒரு கோலிக்குண்டைக் குடுவையினுள் இடுக நீர் அதிகரிக்கும் அளவை குறித்துக் கொள்க. அதேபோல், அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக் குடுவையினுள் இட்டு, நீர் அதிகரிக்கும் அளவைக் குறித்துக் காட்டுக.

Activity 1 data table
செயல்பாடு 2 (i) ஒரு குடுவையில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு அதன் அளைவக் குறித்துக் கொள்க. (ii) திண்மப் பொருளை எடுக்க அதாவது, உருளைக்கிழங்கை தண்ணீர் உள்ள குடுவையில் மூழ்கும்படி இடுக.
கேள்வி: நீங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள்?
Potato water level experiment

விடை: நீரின் அளவு உயரும்.

செயல்பாடு 3 (i) ஒரே அளவுள்ள இரண்டு தாள்களை எடுத்துக்கொள்க. (பழைய தாளாகக் கூட இருக்கலாம்) (ii) கத்தரிக்கோல், பசையைப் பயன்படுத்தி உருளை மற்றும் கனச்சதுர வடிவ பெட்டிகளை உருவாக்குக.
Shapes construction
(iii) இரண்டையும் மண் கொண்டு நிரப்பி மூடவும்.
Filling shapes with sand
(iv) ஒரு வாளியை எடுத்துக்கொள்ளவும். பகுதியளவு நீரால் நிரப்பவும், அதனை குறித்துக் கொள்ளவும்.
Bucket water level
(v) இப்போது, நாம் மண்ணால் நிரப்பப்பட்ட உருளையை வாளியினுள் மூழ்க வைத்தால், நீர்மட்ட அளவில் ஏதேனும் மாற்றம் வருமா? வரும் எனில், நீரின் மட்டம் அதிகரிக்குமா? குறையுமா?
Final experiment step

விடை: நீரின் மட்டம் அதிகரிக்கும்.

(vi) மண்ணால் நிரப்பப்பட்ட உருளையை நீரில் மூழ்கவிட்ட பின், நீரின் மட்டத்தை 'A' என குறிக்க.

அதிகரிக்கும் நீரின் அளவைக் குழந்தைகளைக் கவனிக்கக் கூறிவிட்டு கீழ்க்காணுமாறு அவர்களிடம் கேட்கலாம்.

(i) நீங்கள் என்ன உற்றுநோக்கினீர்கள்? நீரின் மட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்ததா?

விடை: ஆம்.

(ii) நீரின் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன?

விடை: பொருள் மூழ்கி உள்ளது.

(iii) உருளை வடிவ பெட்டி நீரினுள் அடைத்துக்கொள்ளும் இடத்தை உங்களால் காண முடியுமா?

விடை: இயலும்.

Tags : Measurements | Term 3 Chapter 3 | 5th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு.

5th Maths : Term 3 Unit 3 : Measurements : Finding volume using water Measurements | Term 3 Chapter 3 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : நீரின் அளவை அளத்தல் - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.