5th Standard Maths Term 3 Unit 5 Money: Multiplication and Division Guide

5th Maths: Term 3 Unit 5: Money - Multiplication and Division
பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பணத்தில் பெருக்கலும் வகுத்தலும் | 5th Maths : Term 3 Unit 5 : Money

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்

பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்
சூழல் 1

பள்ளி மாணவர்களுக்காக ஒரு புத்தக நிறுவனம் அகராதிகளின் மீது தள்ளுபடியை அறிவித்தது. தள்ளுபடிக்குப் பிறகு, ஒர் அகராதியின் விலை ₹ 425 ஆகும். இதனை 25 மாணவர்கள் பெற விரும்பினர். அவர்கள் அதனை வாங்க, எவ்வளவு பணம் தேவைப்படும்?

இதற்கு நாம், மாணவர்களின் எண்ணிக்கையும் அகராதியின் விலையையும் பெருக்க வேண்டும்.

ஒவ்வொரு அகராதியின் விலை = ₹ 425

ஆகவே, 25 அகராதிகளின் விலை = 25 × ₹ 425

= ₹ 10,625

சூழல் 2

ஒரு பன்னாட்டுப் போட்டியில், ஒரு பள்ளியின் 8 மாணவர்கள் பங்கேற்று, ₹ 5,000 ஐ ரொக்கப் பரிசாக வென்றனர். இந்தத் தொகையினை அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள விரும்பினர். ஒவ்வொருவரும் எவ்வளவுப் பங்கினைப் பெறுவர்?

இதற்கு நாம், மொத்தத் தொகையினை மாணவர்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

₹ 5,000 ÷ 8 = ₹ 625

ஆகவே, ஒவ்வொருவரின் பங்கானது ₹ 625 ஆகும்.

எடுத்துக்காட்டு 5.5

ஒரு நாற்காலியின் விலை ₹ 520 ஆகும் எனில், 9 நாற்காலிகளின் விலை என்னவாக இருக்கும்?

தீர்வு

ஒரு நாற்காலியின் விலை = ₹ 520

9 நாற்காலிகளின் விலை = ₹ 520 × 9

= ₹ 4680

எடுத்துக்காட்டு 5.6

இராணி என்பவர் ₹ 675.50 மதிப்பிலான ஒரு சேலையை வாங்குகிறார். அவர் அதுபோன்று 12  சேலைகளை வாங்க விரும்புகிறார். 12 சேலைகளின் விலை என்னவாக இருக்கும்?

தீர்வு

ஒரு சேலையின் விலை = ₹ 675.50

∴ 12 சேலைகளின் விலை = ₹ 675.50 × 12

= ₹ 8106

(i) பைசாக்களைப் பெருக்கவும்

50 × 12 = 600 காசுகள்

பைசாக்களை ரூபாய்களாக மாற்றவும். 600 பைசாக்கள் = ₹ 6

(ii) ரூபாய்களைப் பெருக்கவும்

675 × 12 = ₹ 8100

இப்போது i மற்றும் ii ஐ கூட்டக் கிடைப்பது

= ₹ 8100 + ₹ 6

= ₹ 8106

எடுத்துக்காட்டு 5.7

₹ 65,295 ÷ 9 என்பதற்கான விடையைக் காண்க.

தீர்வு
Division Workings Example 5.7

எனவே, ₹ 65295 ÷ 9 = ₹ 7,255

எடுத்துக்காட்டு 5.8

7 எழுதுகோல்களின் மொத்த விலை 105 எனில், ஓர் எழுதுகோலின் விலை என்ன?

தீர்வு

7 எழுதுகோல்களின் விலை = ₹ 105

Division Workings Example 5.8

ஓர் எழுதுகோலின் விலை = ₹ 105 ÷ 7

= ₹ 15

ஆகவே, ஓர் எழுதுகோலின் விலை ₹ 15 ஆகும்.

நாம் சிந்திப்போம் !

1000 காசுகளை 5 மாணவர்களுக்கு சமமாக பங்கிட ஒவ்வொரு மாணவனும் எவ்வளவு ரூபாயினை பெறுவான்?

தீர்வு:

மொத்த காசுகள் = 1000 காசுகள்

மாணவர்களின் எண்ணிக்கை = 5

ஒரு மாணவனுக்கு கிடைத்த தொகை = 1000 ÷ 5

= 200 காசுகள்

= ரூ.2

செயல்பாடு

₹ 10,000 இல் உள்ள ₹ 1, ₹ 2, ₹ 5, ₹ 10, ₹ 20, ₹ 50, ₹ 100, ₹ 200, ₹ 500 மற்றும் ₹ 2,000 என்ற மதிப்பு வகைப்பாடுகளின் எண்ணிக்கை எத்தனை எனக் காண்க.

Denomination Activity Table
Tags: Money | Term 3 Chapter 5 | 5th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு. 5th Maths : Term 3 Unit 5 : Money : Multiplication and Division in Money.