5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு
5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகச் செய்யும் உயிரிசார் காரணி
அ) காய வைத்தல்
ஆ) வெப்பநிலை
இ) ஈரப்பதம்
ஈ) பாக்டீரியா
2. தானியங்கள் ---------- மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
அ) காய வைத்தல்
ஆ) உறைய வைத்தல்
ஐ) சர்க்கரை சேர்த்தல்
ஈ) உப்பு சேர்த்தல்
3. -------- குறைபாடு காரணமாக இரத்தசோகை நோய் தோன்றுகிறது.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் பி
இ) இரும்பு
ஈ) வைட்டமின் டி
4. அதிகப் படியான கொழுப்பு உடலில் சேர்வது -------------- என அழைக்கப்படுகிறது.
அ) உடல்பருமன்
இ) காய்ச்சல்
ஆ) தலைவனி
ஈ) வயிற்று வலி
5. கார்போஹைட்ரேட்டுகள் எதில் அதிகம் காணப்படுகின்றன?
அ) நெய்
ஆ) பழங்கள்
இ) அரிசி
ஈ) எண்ணெய்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. மாலைக்கண் நோய் --------------- சத்துக் குறைவினால் ஏற்படுகிறது ,
2. மராஸ்மஸ் என்பது ----------- குறைபாட்டு நோய் ஆகும்.
3. உணவில் ஏற்படும் கெட்ட வாசனைக்குக் காரணம் ------------
4. காற்றில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுப்போவதற்கான ஓர் --------- காரணி ஆகும்.
5. தரம் குறைந்த வாயுக்குழாய்களை உபயோகிப்பது ---------- கசிவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
III. பொருத்துக. (வினாக்கள்)
1. புரதக்குறைபாடு – வைட்டமின் டி
2. ரிக்கட்ஸ் – உடல் செயல்பாடு
3. உடல் பருமன் – தீப்பிடிக்கும் பொருள்கள்
4. மண்ணெண்ணெய் — பழங்கள்
5. உறைதல் – குவாஷியோர்கர்
பொருத்துக விடை:
1. புரதக்குறைபாடு – குவாஷியோர்கர்
2. ரிக்கட்ஸ் – வைட்டமின் டி
3. உடல் பருமன் – உடல் செயல்பாடு
4. மண்ணெண்ணெய் – தீப்பிடிக்கும் பொருள்கள்
5. உறைதல் – பழங்கள்
IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.
1. ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க வினிகர் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
2. கதிர்வீச்சு பதனம் உணவுப் பொருள்களின் சுவையைப் பாதிக்கும்.
3. வாயுக்கசிவு ஏற்பட்டாலும் நாம் மின் சாதனங்களை உபயோகிக்கலாம்.
4. அயோடின் குறைவினால் பெரிபெரி நோய் தோன்றுகிறது.
5. வளரும் குழந்தைகளின் உணவில் புரதம் அதிக அளவு தேவை.
V. சுருக்கமாக விடையளி.
1. குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?
2. சரிவிகித உணவு என்றால் என்ன?
3. உடல் பருமனை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
(1) துரித உணவு, பொரித்த உணவு வகைகள் மற்றும் அதிகக் கொழுப்புடைய இறைச்சி ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
(2) பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் மற்றும் உலர் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(3) முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
(4) எப்பொழுதும் கணினி அல்லது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது.
(5) போதுமான அளவு தூக்கம் அவசியம்.
4. சிறிய அளவிலான தீக்காயத்திற்கு நாம் என்ன செய்யலாம்?
5. கெட்டுப் போன உணவு - வரையறு.
6. உணவுப் பாதுகாப்பின் நோக்கம் என்ன?
(1) உணவின் நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு மாறாமல் இருக்க.
(2) உணவுப் பொருள்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க.
(3) பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினைத் தடுக்க.
(4) உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க.
(5) உணவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் நமது உடல்நலத்தைக் பேணுவதோடு, உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கவும் முடிகிறது.
VI. விரிவாக விடையளி.
1. உணவுப் பாதுகாப்பு முறைகள் பற்றி எழுதுக.
உலர வைத்தல் : இது உணவுப் பொருள்களை சூரிய ஒளியில் உலர வைப்பதன்மூலம், அவற்றிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கும் முறையாகும். எ.கா. தானியங்கள்.
உப்பிடல் : உணவுப் பொருள்களுடன் உப்பு சேர்க்கப்படும்போது, அவற்றிலுள்ள நீர் அகற்றப்படுகிறது. எ.கா. மீன், ஊறுகாய்.
சர்க்கரை சேர்த்தல் : சர்க்கரையை உணவுப் பொருள்களுடன் சேர்க்கும் போது, அது அவற்றிலுள்ள நீரில் கரைந்து அவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. எ.கா. பழக்கூழ், பழரசம்.
உறைதல் : இம்முறையின் மூலம் உணவுப் பொருள்களின்மீது நடைபெறும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் நொதிகளின் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். எ.கா. பழங்கள், காய்கறிகள்.
கொதிக்க வைத்தல் : உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் கொதிக்க வைத்தல் மூலம் அழிக்கப்படுகின்றன. எ.கா. பால், தண்ணீர்.
டப்பா மற்றும் புட்டிகளில் அடைத்தல் : இந்த முறையில் காற்றுப்புகாத டப்பா மற்றும் புட்டிகளில் உணவுப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டு, நுண்கிருமிகள் அவற்றைப் பாதிக்காவண்ணம் அவை காக்கப்படுகின்றன. எ.கா. பால்பொடி (Milk powder).
பாதுகாக்கும் வேதிப்பொருள்களைச் சேர்த்தல் : உணவுப் பொருள்களில் ஏற்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக சில வேதிப் பொருள்கள் அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக, சோடியம் பென்ஸோயெட் பழங்களோடும், சல்பர் டை ஆக்ஸைடு காய்ந்த பழங்களோடும், வினிகர் ஊறுகாயோடும் சேர்க்கப்படுகின்றது.
2. பல்வேறு உணவு வகைகளை விளக்குக.
3. சமையலறை பாதுகாப்பு பற்றி எழுதுக.
(1) மின் சாதனங்களை ஈரமான கைகளால் தொடக்கூடாது. ஏனெனில் இது சில வேளைகளில் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
(2) நெருப்பு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களான மண்ணெண்ணெய் போன்றவற்றை எரியும் அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
(3) ஒருவேளை ஒருவர் மீது தீப்பற்றிக்கொண்டால் அவர் மேல் கம்பளி அல்லது தடிமனான தரைவிரிப்பால் மூடவேண்டும்.
(4) மண்ணெண்ணெய் அல்லது பிற எண்ணெய் மூலம் தீப்பிடித்தால் தீயை அணைக்க மணலைப் பயன்படுத்த வேண்டும்.
(5) திடப் பொருள்களான மரம் போன்றவை தீப்பிடித்தால், தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த வேண்டும்.
(6) மின் சாதனங்கள் தீப்பிடித்தால் அனைத்து மின் சாதனங்களின் இணைப்பையும் அகற்றி, மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். சரியான தீ அணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும்.
செயல்பாடு 1
கீழ்க்காணும் உணவுப் பொருள்களை கெட்டுப்போகக் கூடியவை மற்றும் கெட்டுப்போகாதவை என வகைப்படுத்தவும்.
உப்பு, சர்க்கரை, ஆப்பிள், சோளம், ஆரஞ்சு, கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, பப்பாளி, அரிசி, வெள்ளரிக்காய்.
கெட்டுப்போகக் கூடியவை : ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, வெள்ளரிக்காய்.
கெட்டுப்போகாதவை : சர்க்கரை, சோளம், கோதுமை, பருப்பு வகைகள்
செயல்பாடு 2
உனது வீட்டில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உற்று நோக்குக. அவை அழுகி இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிக.
செயல்பாடு 3
உனது உடல் நிறை குறியீட்டெண்ணைக் கணக்கிடு.
$$எனது B.M.I = \frac{எனது எடை (கி.கி.)}{எனது உயரம் (மீ)^2}$$
செயல்பாடு 4
உனது பகுதியில் பரவலாகக் காணப்படும் நோய்களைக் கண்டறிக. அவற்றிற்கான காரணங்களை அறிந்து, அவற்றைத் தீர்ப்பதங்களை வழிமுறைகளை உனது ஆசிரியருடன் கலந்துரையாடு.