5th Standard Science Term 2 Unit 2 Water Guide Tamil Medium

5th Standard Science: Term 2 Unit 2 - Water (நீர்)

பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு அறிவியல்

நீர் (Water)

5 ஆம் வகுப்பு அறிவியல் - நீர்

கற்றல் நோக்கங்கள்

இப்படத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

(i) நீரின் மூலங்கள் பற்றி அறிந்து கொள்ளல். (ii) நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்ளல். (iii) நீர் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு பெறுதல். (iv) நீர்மூலம் பரவும் நோய்கள் பற்றி அறிதல்.

முன்னுரை

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - திருக்குறள்

“ஒருவர் யாராக இருந்தாலும் நீர் இல்லாமல் வாழ முடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது" என்று திருக்குறள் கூறுகிறது. ஒரு காலத்தில் இயற்கையில் தாராளமாக நீர் கிடைத்தது. ஆனால், அது இன்று கடைகளில் விலைக்கு விற்கப்படுகிறது. தற்போது நமக்குக் கிடைக்கும் நீரின் அளவும் மிகவும் குறைந்து வருகிறது. எனவே, நமது அடிப்படைத் தேவைகளுக்காகவும், எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காகவும் நீரைப் பாதுகாத்திட வேண்டும். இப்பாடத்தில் நீரின் ஆதாரங்கள், நீரை எவ்வாறு மேலாண்மை செய்வது, நீர் எவ்வாறு மாசுபாடு அடைகிறது மற்றும் மாசுபட்ட நீர் எவ்வாறு நோய்கள் உருவாகக் காரணமாகிறது என்பவற்றைக் குறித்து நாம் அறிவோம்.

I. நீர் ஆதாரங்கள்

புவியின் மேற்பரப்பில் அதிக அளவில் காணப்படும் பொருள் நீர் ஆகும். புவிப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கில் நீர் காணப்படுகிறது. இது கடல், ஆறு மற்றும் ஏரிகளில் காணப்படுகிறது. மலைப் பகுதிகளில் இது பனியாகவும், பனிக்கட்டியாகவும் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் அதிக அளவு நீர், நீராவி மற்றும் மேகங்களாகக் காணப்படுகிறது. நீர் ஆதாரங்களை நாம் கீழ்க்காணும் தலைப்புக்களில் வகைப்படுத்தலாம்.

1. ஆற்று நீர் மற்றும் ஏரி நீர் 2. கடல் நீர் 3. நிலத்தடி நீர் 4. கிணற்று நீர் 5. ஊற்று நீர்

1. ஆற்று நீர் மற்றும் ஏரி நீர்

ஆற்று நீர்

நன்னீர் செல்லக்கூடிய கால்வாய் அல்லது பாதையே ஆறு ஆகும். பொதுவாக மலை அல்லது குன்றிலிருந்து ஆறு உற்பத்தியாகிறது. இது பெருங்கடல், கடல் அல்லது ஏரிகளை நோக்கிப் பாய்கிறது. ஏரி என்பது நீர் நிரம்பிய பெரிய நீர்ப் பரப்பாகும். ஆற்றின் குறுக்காக அணை கட்டப்படுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் தோன்றுகின்றன. இவை நீர்த்தேக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நீர் நிரம்பிய சிறு பகுதி குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆறுகள், ஓடைகள், நிலத்தடி நீர், மழைநீர், உருகிய பனிப்பாறை ஆகியவை தனித்தோ அல்லது சேர்ந்தோ ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் குட்டைகளில் காணப்படும் நீரின் ஆதாரங்களாக உள்ளன. இந்த நீரில் குறைந்த அளவில் உப்பு கலந்துள்ளதால், இது குடிப்பதற்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஏற்றதாக உள்ளது.

2. கடல் நீர்

கடல் நீர்

கடல் நீரானது 3.5% அல்லது ஆயிரத்தில் 35 பங்கு உப்புத்தன்மை கொண்டது அதாவது. ஒவ்வொரு 1000 மி.லி கடல்நீரிலும் 35 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) கரைந்துள்ளது. அதிகளவு தாது உப்புக்கள் இதில் கலந்துள்ளதால் இது உவர்நீர் என்று அழைக்கப்படுகிறது. இது நீர்ப் பாசனத்திற்கோ அல்லது குடிப்பதற்கோ ஏற்றதல்ல.

3. நிலத்தடி நீர்

மழைப்பொழிவின்போது மழையின் ஒரு பகுதி புவியினுள் உறிஞ்சப்படுகிறது. இது பலவகையான மண் அடுக்குகள் வழியாக ஊடுருவிச் சென்று கடினமான பாறையை அடைந்து, பின்னர் அங்கு ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்த்தேக்கமே நிலத்தடிநீர் ஆகும். இது கரையக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களைக் கொண்டுள்ளது. நிலத்தடி நீரானது கிணற்று நீராகவோ அல்லது ஊற்று நீராகவோ மனிதர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

4. கிணற்று நீர்

கிணற்று நீர்
உங்களுக்குத் தெரியுமா? நிலத்தடி நீரில் மாசுக்கள் காணப்படுவதில்லை. ஏனெனில், அது மண்ணின் பல்வேறு அடுக்குகள் வழியே ஊடுருவிச் செல்லும்போது இயற்கையாகவே வடிகட்டப்படுகிறது.

5. ஊற்று நீர்

ஊற்று நீர்

சில நேரங்களில் பாறைகளின் அடியில் தேங்கியுள்ள நீர் அவற்றின் மீது அதிக அழுத்தம் கொடுத்து புவியின் மேற்பரப்பில் ஊற்றாக வெளிவரும். இதுவே ஊற்று நீர் எனப்படுகிறது. பொதுவாக ஊற்று நீரானது, உப்புக்கள் மற்றும் தாதுப் பொருள்களைக் கொண்டிருக்கும். ஆனால், இதில் மாசுக்கள் காணப்படாது.

II. நீர் சுழற்சி

புவியின் மேற்பரப்பிலிருந்து வளிமண்டலத்திற்கும், மீண்டும் வளிமண்டலத்திலிருந்து புவிக்கும் செல்லும் நீரின் தொடர்ச்சியான இயக்கமே நீர் சுழற்சி அல்லது நீரியல் சுழற்சி எனப்படுகிறது. இது நான்கு படிநிலைகளைக் கொண்டது.

(i) ஆவியாதல் (Evaporation): நீரானது சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும். இந்நிகழ்வு ஆறு, கடல், ஏரி மற்றும் குளங்களின் மேற்பரப்பில் நடைபெறுகிறது. தாவரங்களும் நீராவிப்போக்கு மூலம் நீரை வெளியேற்றுகின்றன.

(ii) ஆவி சுருங்குதல் (Condensation): நீராவியானது குளிர்தல் மூலமாக நீராக மாறும் நிகழ்வு ஆவி சுருங்குதல் எனப்படுகிறது. வளிமண்டலத்திலுள்ள நீராவியானது இலேசாக இருப்பதால் மேலே சென்று குளிர்ச்சி அடைகிறது. இது மேலும் ஒடுக்கமடையும்போது சிறு நீர்த்துளிகளாக மாறுகின்றது.

நீர் சுழற்சி

(iii) வீழ்படிவாதல் (Precipitation): இந்த சிறு நீர்த் துளிகள் இணைந்து மேகத்தை உண்டாக்குகின்றன. இந்த மேகங்கள் மேலும் குளிர்வடையும்போது நீர்த்துளிகளின் அளவு பெரிதாகி, எடை அதிகரித்து மழையாகப் பெய்கின்றது. காற்றானது அதிகளவு குளிர்வடையும் பொழுது இவை மேலும் உறைந்து பனிக்கட்டி அல்லது ஆலங்கட்டி மழையாக விழுகின்றன.

(iv) கடலை நோக்கிச் செல்லுதல்: மழை நீரானது நீரோடை மற்றம் ஊற்றுக்களை உருவாக்குகிறது. இவை இணைந்து ஆறுகளை உருவாக்குகின்றன. இறுதியாக நீரானது கடல் மற்றும் பெருங்கடலைச் சென்றடைந்து நீர்ச் சுழற்சியை நிறைவு செய்கிறது.

செயல்பாடு 1: ஒரு தம்ளரில் அரைபாகம் நீரை எடுத்துக் கொள்ளவும். அதன் வெளிப்பாகத்தை ஒரு துணி கொண்டு நன்கு துடைக்கவும். அதனுள் சில பனிக்கட்டித் துண்டுகளை இட்டு ஐந்து முகல் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இப்பொழுது தம்ளரின் வெளிப்புறம் நீர்த் துளிகள் தோன்றுவதை நீங்கள் காணமுடியும். இது நடைபெறுவதற்கான காரணம் வளிமண்டலத்திலுள்ள நீராவியானது தம்ளரின் குளிர்ந்த பரப்பின்மீது ஒடுக்கமடைந்து நீர்த்துளிகளாக மாறுவதே ஆகும்.

III. நீர் மேலாண்மை

புவியால் கிடைக்கும் நீரில் 97% நீரானது அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. மீதமுள்ள 3% நீர் நன்னீர் ஆகும். இதில் 68.7% உறைந்த நிலையிலும், 30.1% நிலத்தடி நீராகவும் உள்ளது. வெறும் 0.3% நீர் மட்டுமே ஆறு மற்றும் ஏரிகளில் உள்ளது. இது மொத்த நீரின் \( \frac{1}{700} \) பாகமாகும்.
நீர் சதவீதம்

1. நன்னீர் மேலாண்மை

நீர் மேலாண்மை என்பது நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை திட்டமிட்டு, மேம்படுத்தி, பங்கிட்டு, மேலாண்மை செய்யும் செயல்முறையாகும். நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு நீரை நாம் மேலாண்மை செய்வது அவசியமாகும்.

(i) மழைநீர் சேகரிப்பு: கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து வரும் மழைநீரைச் சேகரிக்கும் முறையே மழைநீர் சேகரிப்பு எனப்படும். இந்தியாவிலுள்ள மாநிலங்களுள் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:

(i) நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. (ii) புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது. (iii) தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது. (iv) நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது. (v) நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.
முக்கியத் தகவல்: மார்ச் 22ஆம் நாள் உலக நீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

(ii) பண்ணைக்குட்டை: பண்ணைக்குட்டை என்பது புவியின் மீது தோண்டப்படும் ஒரு நில அமைப்பாகும். இது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்கும் இதில் மழைநீரானது பாசனத்திற்காக சேமித்து வைக்கப்படுகிறது.

பண்ணைக்குட்டை

2. கழிவுநீர் மேலாண்மை

வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் உபயோகப்படுத்தப்பட்ட நீர் கழிவுநீர் எனப்படுகிறது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் நீரை மாசுபாடின்றி பாதுகாப்பதும், சுத்திகரிப்பு செய்வதும் கழிவுநீர் மேலாண்மையின் இலக்காகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

3. கடல்நீரைக் குடிநீராக்குதல்

கடல்நீரைக் குடிநீராக்குதல் என்பது கடல்நீரை தூயநீராக மாற்றும் செயற்கையான செயல்முறையாகும். பொதுவான செயல்முறைகளாவன:

(i) காய்ச்சி வடித்தல் (Distillation) (ii) தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis)
RO System

IV. நீர் மாசுபாடு

மனித செயல்பாடுகளால் நீர் நிலைகள் அசுத்தம் அடைவதை நீர் மாசுபாடு என்கிறோம். சாக்கடை நீர், தொழிற்சாலைக் கழிவுகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள் போன்றவை நீர் நிலைகளை மாசுபாடு அடையச் செய்கின்றன.

நீர் மாசுபாட்டு மூலங்கள்:

(i) தொழிற்சாலைக் கழிவுகள்: சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக்கழிவுகளை அப்படியே ஆறு மற்றும் ஏரிகளில் வெளியேற்றுவதே நீர் மாசுபாடு அடைவதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

Industrial Waste

(ii) கழிவு நீர் மற்றும் வீட்டுக் கழிவுகள்: நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் கொட்டப்படுவது நீர் மாசுபடுதற்கான முக்கியக் காரணமாகும்.

Sewage Pollution

(iii) வேதி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்: DDT போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் நீர்வாழ் விலங்குகளின் உடலில் புகுந்து உணவுச் சங்கிலி மூலமாக மனிதர்களின் உடலைச் சென்றடைகின்றன.

Chemical Fertilizers

(iv) எண்ணெய்க் கசிவு: பெட்ரோலியம் எண்ணெய் கடலில் கசியும்போது அது கடல்நீர் மற்றும் அதில் வாழும் உயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.

Oil Spill

V. நீர் மூலம் பரவும் நோய்கள்

சுத்திகரிக்கப்படாத நீர் அல்லது அசுத்தமான நீரில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் பரவும் நோய்கள் நீர் மூலம் பரவும் நோய்கள் எனப்படுகின்றன. உலகிலுள்ள 80% நோய்களுக்கு சுகாதாரமற்ற நிலையும், மாசுபட்ட நீருமே முக்கியக் காரணம்.

Waterborne Diseases Table

நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகள்:

(i) முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். (ii) குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும். (iii) நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும். (iv) தொற்று நோய்களைப் பரப்பும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

VI. பிற நோய்கள்

1. டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல், ஃபிளேவி வைரஸால் ஏற்படும் நோய் ஆகும். இது பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஸ் கொசுவால் பரப்பப்படுகிறது.

Dengue Mosquito

அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, தசை மற்றும் மூட்டுகளில் வலி, இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல்.

2. பன்றிக் காய்ச்சல் (\( H_1N_1 \))

பன்றிக் காய்ச்சல் ஒரு சுவாச நோய் ஆகும். இது இன்புளுயன்சா வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பன்றியின் சுவாசக் குழாய்களில் தொற்றை உருவாக்கி அதன் மூலம் குத்து இருமலை உருவாக்கும்.

Swine Flu
Prevention