நீர் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்வி பதில் | 5th Science : Term 2 Unit 2 : Water
5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்
கேள்வி பதில்
மாணவர்கள் முதலில் கீழ்க்கண்டவற்றை சிந்தித்து பொருத்த முயலவும்:
(1) எண்ணெய்க்கசிவு
(2) நீர்த் தேக்கம்
(3) பின்னக்காய்ச்சி வடித்தல்
(4) மழை நீர் சேகரிப்பு
(5) பன்றிக் காய்ச்சல்
அ. மேகம்
ஆ. தாவர வளர்ச்சி
இ. கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
ஈ. இன்புளூயன்சா வைரஸ்
உ. அணைக்கட்டு
(i) எண்ணெய்க்கசிவு – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
(ii) நீர்த் தேக்கம் – அணைக்கட்டு
(iii) பின்னக்காய்ச்சி வடித்தல் – மேகம்
(iv) மழை நீர் சேகரிப்பு – தாவர வளர்ச்சி
(v) பன்றிக் காய்ச்சல் – இன்புளுயன்சா வைரஸ்
(i) ஆவியாதல்
(ii) ஆவி சுருங்குதல்
(iii) வீழ்ப்படிவாதல்
(iv) கடலை நோக்கிச் செல்லுதல்
(i) வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(ii) அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்.
(iii) வீட்டைச்சுற்றிலும் கொசுக்களைத் தடுக்கும் திரவத்தைத் தெளிக்க வேண்டும்.
(iv) உடல் பகுதிகளை மூடியிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும்.
(i) நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
(ii) புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
(iii) தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.
(iv) நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.
(v) நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.
(i) முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
(ii) குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும்.
(iii) நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும்.
(iv) தொற்று நோய் ஏற்பட்ட காலங்களில் கூடுதல் கவனம் தேவை.
ஒரு தம்ளரில் அரைபாகம் நீரை எடுத்துக் கொள்ளவும். அதன் வெளிப்பாகத்தை ஒரு துணி கொண்டு நன்கு துடைக்கவும். அதனுள் சில பனிக்கட்டித் துண்டுகளை இட்டு ஐந்து முகல் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இப்பொழுது தம்ளரின் வெளிப்புறம் நீர்த் துளிகள் தோன்றுவதை நீங்கள் காணமுடியும். இது நடைபெறுவதற்கான காரணம் வளிமண்டலத்திலுள்ள நீராவியானது தம்ளரின் குளிர்ந்த பரப்பின்மீது ஒடுக்கமடைந்து நீர்த்துளிகளாக மாறுவதே ஆகும்.
உங்கள் வீட்டில் பாத்திரம் கழுவுதல், குடித்தல், பல்துலக்குதல், குளித்தல், துணிதுவைத்தல், சமைத்தல், தாவரங்களுக்கு நீர் ஊற்றுதல், காலைக்கடன் முடித்தல் மற்றும் வீட்டின் தரையைச் சுத்தம் செய்தல் போன்ற செயல்களுக்கு எவ்வளவு நீர் செலவு செய்யப்படுகிறது என்று ஒரு மதிப்பீடு செய்யவும் அதில் எந்த செயலுக்கு அதிக அளவில் நீர் செலவாகிறது என்பதைக் கண்டறிக. அதை எவ்வாறு குறைக்கலாம் என்பதையும் ஆராய்க.
உங்கள் அறிவியல் ஆசிரியரின் உதவியுடன் அருகிலுள்ள தொழிற்சாலையைப் பார்வையிட்டு, அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் செயல்முறையைக் கவனிக்கவும்.
உனக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்தச் சென்று உனது ஊர் மக்களிடையே காணப்படும் நீரால் பரவும் நோய்களைக் கண்டறிக. அதற்கான காரணத்தையும் அறிக.