5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
கற்கண்டு
சொற்றொடர் அமைப்பு முறை
எழுவாய்
ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்)
எடுத்துக்காட்டு :
தென்றல் நடனம் ஆடினாள்
செயப்படுபொருள்
ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள்
எடுத்துக்காட்டு :
தென்றல் நடனம் ஆடினாள்
பயனிலை
ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.
எடுத்துக்காட்டு :
தென்றல் நடனம் ஆடினாள்
ஆடினாள் – என்பது வினைமுற்று
(i)
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.
(ii)
எழுவாயோ, செயப்படுபொருளோ இல்லாமலும் தொடர் அமையும்.
எ.கா. நடனம் ஆடினாள் - இத்தொடரில் எழுவாய் இல்லை.
(iii)
தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை
(iv)
ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.