5th Standard Tamil Term 1 Chapter 3 Grammar: Sentence Structure Questions and Answers

5th Standard Tamil Term 1 Chapter 3 Grammar: Sentence Structure Questions and Answers

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை

இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை: கேள்விகள் மற்றும் பதில்கள்

புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. எழுவாய் எப்போதும் ------------ லாகவே இருக்கும்.
அ) வினைச்சொல்
ஆ) இடைச்சொல்
இ) பெயர்ச்சொல்
ஈ) உரிச்சொல்
[விடை : இ) பெயர்ச்சொல்]
2. பாடல் பாடினாள் – இத்தொடரில் ---------- இல்லை.
அ) எழுவாய்
ஆ) பயனிலை
இ) செயப்படுபொருள்
ஈ) சொல்
[விடை : அ) எழுவாய்]
3. அமுதன் ஓடினான் – இத்தொடரில் --------- இல்லை
அ) பயனிலை
ஆ) செயப்படுபொருள்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
[விடை : ஆ) செயப்படுபொருள்]

ஆ. எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

1. மாதவி சித்திரம் தீட்டினாள்
2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
4. கிளி பழம் தின்றது.

விடை

Sentence Structure Table

இ. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

விடை

அமுதா திருக்குறள் படித்தாள்.

முகிலன் கவிதை எழுதினான்.

அன்பழகன் பேச்சுப்போட்டியில் பேசினான்.

ஈ. பயனிலை, செயப்படு பொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

விடை

ஆட்டம் ஆடினான்.

வண்ண ம் தீட்டினாள்.

கவிதை பொழிந்தான்.

மொழியை ஆழ்வோம்

Icon

அ. கேட்டல்

1. இயற்கை சார்ந்த பாடல்களை வகுப்பறையில் பாடச் செய்து கேட்டு அதுபோலப் பாடி மகிழ்க.
விடை தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
பச்சை வண்ண காட்டை
நீ பாரு நீ பாரு
அது சொல்லும் வார்த்தை ஆயிரம் அய்யா!
இவனப் போல அழகானவன் தான் யாரு.
ஆமா ! நீ கூறு…
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
3. இயற்கையைக் காக்க வேண்டியதன் அவசியம் பற்றிய உரைகளைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
விடை இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம். வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும்.

ஆ. பேசுதல்

(i) இயற்கை சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்க.
(ii) பழமொழிக் கதைகளை உம் சொந்த நடையில் கூறுக.
விடை : பேராசைக்காரன் ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான். காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. அகிலன் பேராசை கொண்டு மரத்தை வெட்டி ஏமாந்து போனான். முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
கதை உணர்த்தும் பழமொழி: பேராசை பெருநஷ்டம்.
(iii) நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் பேசுக.
விடை நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். பல நாடுகளிலிருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்கு ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும்.

இ. படித்தல்

(i) பழமொழிகளைப் படித்துத் தொகுப்பு தயார் செய்க.
விடை 1. ஒற்றுமையே பலம்.
2. சிறுதுளி பெருவெள்ளம்.
3. பணம் பத்தும் செய்யும்.
4. கூழானாலும் குளித்துக் குடி.
5. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
(ii) சிறந்த புதிர்களைப் படித்துச் சேகரித்துத் தொகுப்பு தயார் செய்க.
விடை 1. சின்னத்தம்பி குனிய வச்சான். அது என்ன? விடை : முள்
2. திரி இல்லாத விளக்கு, உலகமெல்லாம் தெரியுது. அது என்ன? விடை : சூரியன்
3. மூடாத வாய்க்கு முழு வால். அது என்ன? விடை : அகப்பை
Book Content

ஈ. எழுதுதல்

1. சொல்லக் கேட்டு எழுதுக.
1. மாங்காய் பறித்துத் தருகிறேன்
2. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
3. பழமொழி ஒன்று சொல்
4. கண்ணிமைக்கும் நேரம்
2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. அமைதியாக – ஆசிரியர் பாடம் நடத்தும் போது அமைதியாகக் கேட்க வேண்டும்.
2. தருகிறேன் – தினமும் ஏழைக்கு உணவு தருகிறேன்.
3. சிறுவர்கள் – சிறுவர்கள் பூங்காவில் விளையாடுகின்றனர்.
3. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
விடை என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருந்தாலும், எனது பெயரின் முன் பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?

6. விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க.

Circus Advertisement

வாருங்கள்! வண்ணவொளியில் காணுங்கள்!

1. சர்க்கஸ் நடைபெறும் இடம் எது? விடை : நேரு விளையாட்டரங்கம், விழுப்புரம்.
2. விளையாடுபவர்கள் யார்? விடை : கோமாளிக் குள்ளர்கள்.
3. குதிரையேறுபவர்கள் யார்? விடை : கொஞ்சும் மழலைகள்.

மொழியோடு விளையாடு

Play Icon

1. கண்டுபிடித்து எழுதுக.

1. மணம் மிக்க மலர் ………………… விடை : மல்லிகை
2. சிலந்திக்கு எத்தனை கால்கள்? விடை : எட்டு
3. பந்தை அடிக்க உதவுவது ………………… விடை : மட்டை

2. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எழுதுக.

1. Seashore – கடற்கரை
2. Morning – காலை
3. Nature – இயற்கை
4. Farmer – விவசாயி

நிற்க அதற்குத் தக...

Values Icon
(i) என்னால் இயன்றவரை இயற்கையைக் காப்பேன்
(ii) எனது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்ப்பேன்
(iii) எனது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பேன்

செயல் திட்டம்

Project Icon
1. கடல் படம் வரைந்து கடலின் பயன்களைப் பட்டியலிட்டு வருக.
விடை : பழமொழிகள் (1) நூல் பல கல்.
(2) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
(3) பணம் பத்தும் செய்யும்.
(4) கூழானாலும் குளித்துக் குடி.
(5) ஒற்றுமையே உயர்வு.

கற்பவை கற்றபின்

Learning Icon
1. தொடரின் அமைப்பு முறையை அறிந்து கூறுக.
விடை தொடர் அமைப்பில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் கட்டாயம் இடம்பெற வேண்டும். பயனிலை இல்லாமல் தொடர் சில நேரத்தில் அமையலாம். எ.கா. தரணி பாடல் பாடினான்.
2. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் சில இடங்களில் வருவதையும், அவை வராமல் தொடர் அமைவதையும் குறித்துக் கலந்துரையாடுக.
விடை (i) தென்றல் நடனம் ஆடினாள் என்ற தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் வரும்.
(ii) எழுவாய் இல்லாமல் தொடர் அமையும். எ.கா: நடனம் ஆடினாள்.
(iii) செயப்படுபொருள் இல்லாமல் தொடர் அமையும். எ.கா. தென்றல் ஆடினாள்.
(iv) பயனிலை இல்லாமல் தொடர் அமையாது.