5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்
மொழியை ஆழ்வோம்
தன்னானே தானே நன்னே
பச்சை வண்ண காட்டை
நீ பாரு நீ பாரு
அது சொல்லும் வார்த்தை ஆயிரம் அய்யா!
இவனப் போல அழகானவன் தான் யாரு.
ஆமா ! நீ கூறு…
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்.
அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும்.
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.
ஆ. பேசுதல்
(ii) பழமொழிக் கதைகளை உம் சொந்த நடையில் கூறுக. விடை: பேராசைக்காரன்
காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.
மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது.
ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை . அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
கதை உணர்த்தும் பழமொழி: பேராசை பெருநஷ்டம்.
கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.
பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம். பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.
வாழை : எனக்குச் சாவு என்பதே கிடையாது. நான் வெட்டினாலும் முளைத்துக் கொண்டுதான் இருப்பேன். பூவும், காயும், கனியும், நாரும், மட்டையும், இலையும் என எனது உடல் முழுவதும் மக்களுக்காகவே தருகின்றேன். ‘வாழையடி வாழை’ என்ற சொல்லுக்கு ஏற்பதலைமுறை தலைமுறையாக பயன்படுவது நான் தான்.
பனை : நான் பனம் நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை எனப் பலவிதமாக மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளேன். வெயில் காலங்களில் தாகம் தீர்க்கும் பானமாக என்னை அருந்துகின்றனர். பனை ஓலை, மரம் ஆகியவற்றை எடுத்து வீடு கட்டி பலரும் பயனடைகின்றனர். எனவே, அதிக பலன் தருவது நான் தான்.
வேம்பு : வேப்பம்பூ, இலை, கிளை, பட்டை, காய், கனி என அனைத்து பாகங்களையும் எடுத்து மருந்துப் பொருட்கள் தயாரிக்க என்னைப் பயன்படுத்துகின்றனர். என் மரத்தடியில் அமர்ந்தால் நோயே வராது. ஆகவே மனிதர்களைப் பாதுகாக்கும் கவசமாக நான் இருக்கிறேன்.
முருங்கை : நான் சத்து மிக்க முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப் பூ. ஆகியவற்றை மனிதனுக்குத் தருகின்றேன். உணவாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறேன். ஆகவே, அதிகமாக பயன்தருவது நான்தான்.
இ. படித்தல்
2. சிறுதுளி பெருவெள்ளம்.
3. பணம் பத்தும் செய்யும்.
4. கூழானாலும் குளித்துக் குடி.
5. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
6. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
8. செய் அல்லது செத்து மடி.
9. நூல் பல கல்.
10. நாய் விற்ற காசு குரைக்குமா.
2. திரி இல்லாத விளக்கு, உலகமெல்லாம் தெரியுது. அது என்ன? விடை : சூரியன்
3. மூடாத வாய்க்கு முழு வால். அது என்ன? விடை : அகப்பை
4. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைகிறான். அது என்ன? விடை : ஊசி
5. மண்டை உண்டு. கட்டை இல்லை. பூ உண்டு. மணமில்லை. அது என்ன? விடை : வாழை
ஈ. எழுதுதல்
2. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
3. பழமொழி ஒன்று சொல்
4. கண்ணிமைக்கும் நேரம்
2. தருகிறேன் – தினமும் ஏழைக்கு உணவு தருகிறேன்.
3. சிறுவர்கள் – சிறுவர்கள் பூங்காவில் விளையாடுகின்றனர்.
4. முழக்கம் – பாரதி தமிழ் முழக்கம் செய்தார்.
5. தங்கம் – தங்கம் மிகவும் விலை உயர்ந்தது.
6. விளைவு – தீமைக்குத் தீய விளைவே கிடைக்கும்.
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா
விடைவிமலா : எனக்கு பல்வலி ஐயா,
மருத்துவர் : எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.
விமலா : அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?
மருத்துவர் : இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாக இருக்கும்.
விமலா : நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.
ஒரு நாள் அந்த நாட்டின் அரசர் குதிரையின் மேல் வலம் வந்து கொண்டிருந்தார். வயதான மனிதர் ஒருவர், தம்முடைய தள்ளாத வயதிலும் சாலையின் ஓரங்களில் குழிகளைத் தோண்டி, விதைகளையும் செடிகளையும் நட்டுத் தண்ணீர் ஊற்றியதைப் பார்த்தார். அரசர் அந்த வயதானவர் செய்யும் செயல்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். ஒரு நாள்...
விடைஆனால் முதியவர் எனக்குத் தண்ணீர் வேண்டாம். இந்த மரத்திற்கு ஊற்றுங்கள். நான் செத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த மரம் செத்தால், இந்த நாட்டுக்கே பாதிப்பு. ஆகவே அதனைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி தன் உயிரை விட்டார். அரசர் அந்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார். நாடே மரங்கள் பெருகி வளம் மிக்கக் காடானது.
6. விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க.
பேசும் கிளி! தீ வளையத்திற்குள் பாயும் புலி! பார் விளையாட்டில் பறக்கும் தேவதைகள்! கூண்டுக்குள் உருண்டோடும் குல்லா மனிதர்! வெள்ளைப் புறாக்களின் எல்லையில்லா ஆட்டம்! கோமாளிக் குள்ளர்களின் கும்மாள விளையாட்டு! குதிரையேறும் கொஞ்சும் மழலைகள்!
வாருங்கள்! வண்ணவொளியில் காணுங்கள்! விளம்பரம் படி ! விடையைக் கொடு
7. இணைத்துக் கூறுவோம்
மழையில் நனைந்ததால் சட்டை ஈரமானது.
8. தடித்த சொல் விடையாக வருமாறு வினா அமைக்க.
9. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
ஒரு நாள் மாலை முத்துவின் வீட்டிற்கு அவனுடைய நண்பர்களான கென்னடியும் அன்வரும் விளையாட வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன நான்கு நாய்க் குட்டிகளைத் தோட்டத்தில் கண்டனர். நாய்க் குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர். இருவரும் ஆளுக்கொரு நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டனர். முத்து அவர்களிடம், "நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்துபிரிக்க வேண்டா. நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்" என்று கூறினான். நண்பர்கள் அமைதியாக நாய்க்குட்டிகளைக் கீழே இறக்கி விட்டனர். நாய்க் குட்டிகள் மகிழ்ச்சியாகத் தம் தாயோடு விளையாடுவதை நண்பர்கள் மூவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
மொழியோடு விளையாடு
2. சிலந்திக்கு எத்தனை கால்கள்? விடை : எட்டு
3. பந்தை அடிக்க உதவுவது ………………… விடை : மட்டை
4. பசுவின் உணவு ………………… விடை : புல்
5. மீன் பிடிக்க உதவும் ………………… விடை : வலை
6. ஒரு தின்பண்டம் …………….. விடை : அப்பம்
2. Morning – காலை
3. Field – களம், நிலம்
4. Mango tree – மாமரம்
5. Cyclone – புயல்
6. Nature – இயற்கை
7. Pearl – முத்து
8. Farmer – விவசாயி
9. Project – செயல்திட்டம்
10. Circus – வித்தை
எ.கா 1. கலம்
விடை :கதை தொடர் 1: அன்று காட்டு அரசன் சிங்கத்திற்குப் பிறந்த நாள்.
விடை :கதை தொடர் 2: இன்சுவை பள்ளி செல்லும் வழியில் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தாள்.
விடை :கதை தொடர் 3: கவியரசன் நாய், பூனை போன்ற விலங்குகளைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சியடைவான்.
விடை :கதை தொடர் 4: நரி ஒன்று கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த மான்களைக் கண்டது.
விடை :
விடை
2. பவளம்
3. மீன்
4. முத்து
5. சங்கு
6. ஆமை
2. உயிர் கொடுப்பான் தோழன் (தோழன் / தோலன்)
3. நேர்மை எப்போதும் நன்மை தரும். (நண்மை / நன்மை)
4. கொடுத்து இன்பம் மகிழ்வது (மகிழ்வது / மகிழ்வது / மகிள்வது)
5. குழந்தை இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். (குழந்தை / குலந்தை)
எ.கா: மழை - மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்
மலை - உயர்ந்து நிற்பது மலை
கறி – சந்தையில் உள்ளது காய்கறி.
2. தவளை – நிலத்திலும் நீரிலும் வாழ்வது தவளை.
தவலை - தவலையில் தண்ணீர் பிடித்தேன்.
3. வழி – ஊருக்கு வழி காட்டு.
வலி – எனக்குத் தலைவலி.
4. அரை – ஒன்றில் பாதி அரை.
அறை – இது சமையல் அறை.
5. மனம் – அவன் மனம் நல்ல மனம்.
மணம் – மல்லிகை மலர் மணமுடையது.
அறிந்து கொள்வோம்: கடலைக் குறிக்கும் வேறு பெயர்கள்
2. ஆழி
3. சாகரம்
4. சமுத்திரம்
5. பௌவம்
6. வேலை
7. முந்நீர்
8. நீராழி
9. பெருநீர்
நிற்க அதற்குத் தக...
(ii) எனது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்ப்பேன்
(iii) எனது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பேன்
செயல் திட்டம்
(2) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
(3) பணம் பத்தும் செய்யும்.
(4) கூழானாலும் குளித்துக் குடி.
(5) ஒற்றுமையே உயர்வு.
(6) சிறுதுளி பெருவெள்ளம்.
(7) விளையும் பயிர் முளையிலே தெரியும்.
(8) நாய் விற்ற காசு குரைக்குமா?
(9) தனி மரம் தோப்பாகாது.
(10) தன் வினை தன்னைச் சுடும்.
(11) தோல்வியே வெற்றியின் முதல் படி.
(12) பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
(13) இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே!
(14) அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
(15) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
(16) பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
(17) பாம்பின் கால் காம்பறியும்.
(18) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
(19) ஆழமறியாமல் காலை விடாதே.
(20) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
(ii) ஒற்றைக் கால் குள்ளனுக்கு எட்டு கை. அது என்ன? விடை : குடை
(iii) அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன? விடை : தண்ணீர்
(iv) ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? விடை : மரம்
(v) வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? விடை : மழை
(vi) பூமியிலே பிறக்கும் புகையாய் போகும். அது என்ன? விடை : பெட்ரோல்
(vii) முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன? விடை : நாக்கு
(viii) மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அது என்ன? விடை : தேங்காய்
கற்பவை கற்றபின்
(ii) எழுவாய் இல்லாமல் தொடர் அமையும். எ.கா: நடனம் ஆடினாள்.
(iii) செயப்படுபொருள் இல்லாமல் தொடர் அமையும். எ.கா. தென்றல் ஆடினாள்.
(iv) பயனிலை இல்லாமல் தொடர் அமையாது.