5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி
அகரமுதலி
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி : அகரமுதலி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
(i)
அம்மி - அரைக்கும் கல்
(ii)
அலுப்பு - களைப்பு
(iii)
ஆல் - ஆலமரம்
(iv)
இளகிய - இரக்கமுள்ள
(v)
இம்மை - இப்பிறப்பு
(vi)
இன்னல் - துன்பம்
(vii)
எஞ்சியிருந்த - மீதியிருந்த
(viii)
கலகம் - சண்டை
(ix)
களர்நிலம் - பயிர் செய்ய உதவாத நிலம்
(x)
கழை - கரும்பு
(xi)
குயவர் - மண்பாண்டம் செய்பவர்
(xii)
குளிரிள - குளிர்ச்சியான
(xiii)
சாதம் - சோறு
(xiv)
செருக்கு - தலைக்கனம்
(xv)
நனிபசு - மிகுதியாகப் பால் தரும் பசு
(xvi)
நெசவாளர் - துணி நெய்பவர்
(xvii)
பஞ்சம் - வறட்சி
(xviii)
பாண்டம் - பாத்திரம்
(xix)
புரவி - குதிரை
(xx)
மகரம் - மீன்
(xxi)
முற்றல் - முற்றிய காய்
(xxii)
விவாதம் - சொற்போர்