பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : மரபுச்சொற்கள் | 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி
இலக்கணம் : மரபுச்சொற்கள்
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : இலக்கணம் : மரபுச்சொற்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
கற்கண்டுமரபுச்சொற்கள்
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
ஒலி மரபுச் சொற்கள்
(i) குரங்கு அலப்பும்
(ii) புலி உறுமும்
(iii) குயில் கூவும்
(iv) யானை பிளிறும்
(v) ஆடு கத்தும்
(vi) ஆந்தை அலறும்
(vii) சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்
(viii) மயில் அகவும்
(ix) நாய் குரைக்கும்
(x) பாம்பு சீறும்
விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள்
(i) ஆட்டுக் குட்டி
(ii) யானைக் கன்று
(iii) கோழிக் குஞ்சு
(iv) சிங்கக் குருளை
(v) குதிரைக் குட்டி
(vi) புலிப் பறழ்
(vii) குரங்குக் குட்டி
(viii) கீரிப் பிள்ளை
(ix) மான் கன்று
(x) அணிற்பிள்ளை
வினைமரபுச் சொற்கள்
(i) அம்பு எய்தார்
(ii) ஆடை நெய்தார்
(iii) சோறு உண்டான்
(iv) கூடை முடைந்தார்
(v) பூ பறித்தாள்
(vi) மாத்திரை விழுங்கினான்
(vii) நீர் குடித்தான்
(viii) சுவர் எழுப்பினார்
(ix) முறுக்கு தின்றாள்
(x) பால் பருகினான்
தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்
(i) மா, பலா, வாழை - இலை
(ii) ஈச்சம், தென்னை, பனை - ஓலை
(iii) கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
(iv) நெல், புல், தினை - தாள்
(v) அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
பூச்சிகள், பறவைகள், விலங்குகள் - இருப்பிட மரபுச் சொற்கள்
(i) கரையான் புற்று
(ii) மாட்டுத் தொழுவம்
(iii) கோழிப் பண்ணை
(iv) சிலந்தி வலை
(v) நண்டு வளை
(vi) ஆட்டுப் பட்டி
(vii) குதிரைக் கொட்டில்
(viii) குருவிக் கூடு
(ix) எலி வளை
(x) யானைக்கூடம்