5th Tamil Term 1 Chapter 1 Grammar Marabu Sorkgal Questions and Answers

5th Tamil Term 1 Chapter 1 Grammar Marabu Sorkgal Questions and Answers

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி

இலக்கணம் : மரபுச்சொற்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : இலக்கணம் : மரபுச்சொற்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது
அ) பழைமை ஆ) புதுமை இ) மரபு ஈ) சிறப்பு
[விடை : இ) மரபு]
2. யானை -------------
அ) கத்தும் ஆ) பிளிறும் இ) கூவும் ஈ) அலறும்
[விடை : ஆ) பிளிறும்]
3. 'ஆந்தை அலறும்' – என்பது ------------
அ) ஒலி மரபு ஆ) வினை மரபு இ) இளமைப்பெயர் மரபு ஈ) இருப்பிடப் பெயர் மரபு
[விடை : அ) ஒலி மரபு]
4. புலியின் இளமைப் பெயர் ………………….
அ) புலிப்பறழ் ஆ) புலிக்குட்டி இ) புலிக்கன்று ஈ) புலிப்பிள்ளை’
[விடை : அ) புலிப்பறழ்]
5. 'பூப்பறித்தாள்' என்பது ----------
அ) வினை மரபு ஆ) பெயர் மரபு இ) ஒலி மரபு ஈ) இளமைப்பெயர் மரபு
[விடை : அ) வினை மரபு]

ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக.

சிந்திப்பதற்கான வினாக்கள் (பொருத்துக):
1. சிங்கம் – கூவும்
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
விடை:
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்

இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக.

உயிரினங்களின் ஒலிமரபு பயிற்சி
விடை: விடை

ஈ. வினை மரபுகளைப் பொருத்துக.

1. நீர் – பறித்தாள்
2. முறுக்கு – எய்தான்
3. உணவு – குடித்தான்
4. அம்பு – தின்றான்
5. பூ – உண்டான்
விடை:
1. நீர் – குடித்தான்
2. முறுக்கு – தின்றான்
3. உணவு – உண்டான்
4. அம்பு – எய்தான்
5. பூ – பறித்தாள்

உ. ஒலிமரபுச் சொற்களை எழுதுக

ஒலிமரபுச் சொற்கள் பயிற்சி

ஊ. வினாக்களுக்கு விடையளிக்க

1. மரபு என்றால் என்ன?
விடை : நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
2. பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச் சொற்கள் இடம்பெற்றுள்ளன?
விடை : பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
3. ஒலி மரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
(i) குயில் – கூவும்
(ii) மயில் – அகவும்
(iii) நாய் – குரைக்கும்
(iv) ஆடு – கத்தும்.

மொழியை ஆழ்வோம்

மொழியை ஆழ்வோம்

அ. கேட்டல்

(i) எளிய, இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப்பாடல்களைக் கேட்டு மகிழ்க.
(ii) தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்க.

ஆ. பேசுதல்

(i) உமக்குப் படித்த தலைப்புகளில் வகுப்பறைப் பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசுக.
தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? நடுவர் : தமிழாசிரியர் | உறவினர்கள் : வித்யா, காயத்ரி | நண்பர்கள் : சுந்தர், பெருமாள் நடுவர் – சே. சாந்தி : நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழும் காலத்தில் என்று எடுத்துக்கொண்டால் உறவினர்களும் தேவை, நண்பர்களும் தேவை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கையும் உறவினர்கள் இல்லாத உறவும் ஒரு போதும் எதற்கும் பயன்படாது. இப்போது உறவினர்கள் என்ற குழுவிலிருந்து வந்து பேசுமாறு அழைக்கிறேன். உறவினர்கள் – வித்யா : நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானவர்கள் உறவினர்கள்தாம். உறவினர்கள் இல்லாமல் வாழ முடியாது. அப்படி வாழ்பவர்கள் அநாதைகளாகத்தான் இருப்பார்கள். ஒரு மகனைத் தாயும் தந்தையும் சேர்ந்து வளர்த்து ஆளாக்கி, அவன் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என நினைத்து அவன் வளர்ச்சிக்கு மிகவும் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்கள். நண்பர்கள் – சுந்தர் : உறவினர்கள் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் இருந்தாலும் அவன் வாழ்க்கையில் தோல்வியுறும்போது, அவனுக்குத் தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. வறுமையால் புத்தகங்கள் கூட வாங்க முடியாத பிள்ளைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நண்பர்களின் புத்தகங்களையும் நோட்டுகளையும் பார்த்தும் படித்தும்தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள்தாம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உறவினர்கள் – காயத்ரி : ஒரு மனிதன் வாழ்க்கையில் தோல்வி பெறும்போது தோள்கொடுப்பது உறவினர்கள்தாம் என்பது மிகையாகாது. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்ற உறவினர்கள் இல்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் மதிக்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என நினைப்பவர்கள்தான் உறவினர்கள். எனவே ஒரு மனிதனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்கள்தாம். நண்பர்கள் – பெருமாள் : உறவினர்கள் இருந்தும் இளைஞர்கள் பலர் இன்று தெருவில் அநாதைகளாக சுற்றுகிறார்கள். காரணம் உறவினர்களிடம் அன்பும் அரவணைப்பும் இல்லை. ஆனால் அன்பையும் அரவணைப்பையும் தரும் ஒரே இடம் நட்பு மட்டுமே. நண்பர்கள் இல்லை என்றால் இன்று 90 சதவீத மக்கள் அநாதைகளாகத்தான் சுற்றுவார்கள். நடுவர் – சே. சாந்தி : ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? என்ற விவாதத்தில் இரு தரப்பினரும் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தங்களுடைய வாதத்தை எடுத்து வைத்தார்கள். மிக அருமை. ஆனால் தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு உறவினர்களும் நண்பர்களும் உதவக் கூடியவர்கள்தான். ஆனால் தன்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள் என்பதே என்னுடைய கருத்து. எனவே நண்பர்கள்தாம் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள் என்பதே என்னுடைய இறுதி தீர்ப்பாகும்.

(ii) உமக்குப் பிடித்த பறவைகளுள் ஏதேனும் ஒன்றுபற்றி ஐந்து மணித்துளி பேசுக.

விடை: வணக்கம். எனக்குப் பிடித்த பறவை காகம் பற்றிச் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். அதிகாலையில் எழுந்து கரைதல். உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல். காகத்திடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும். நன்றி!

இ. படித்தல்

(i) இனிய, எளிய தமிழ்ப்பாடல்களைப் படித்து மகிழ்க.
(ii) சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஏதேனும் ஒன்றைப் படித்துக்காட்டுக.

ஈ. எழுதுதல்

1. சொல்லக்கேட்டு எழுதுக.
1. குளிரிள நீர் 2. யானை பிளிறும் 3. பனிமலர் 4. நற்பண்பு 5. திருவள்ளுவர் 6. பறைசாற்றுதல் 7. ஞாயிற்றுக்கிழமை 8. இறக்கைகள் 9. சீறியது 10. கொக்கரக்கோ

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

(i) நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.
(ii) தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
(iii) கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.
(iv) நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.

மேரி ஆடினாள் | ஈ பறந்தது | புலி உறுமியது | பாட்டி தும்மினார் | குழந்தை சிரித்தது | பூனை தூங்கியது
1. குழந்தை என்ன செய்தது? விடை : குழந்தை சிரித்தது
2. மேரி என்ன செய்தாள்? விடை : மேரி ஆடினாள்
3. பாட்டி என்ன செய்தார்? விடை : பாட்டி தும்மினார்
4. எது பறந்தது? விடை : ஈ பறந்தது
5. தூங்கியது எது? விடை : பூனை தூங்கியது
6. புலி என்ன செய்தது? விடை : புலி உறுமியது

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு.

1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது? விடை : இனிமை
2. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக. விடை : கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன? விடை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது? விடை : யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. பிரித்து எழுதுக. தமிழிலக்கணம் – விடை : தமிழ் + இலக்கணம்

5. எடுத்துக்காட்டில் உள்ளதுபோல் மாற்றி எழுதுக.

(i) ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது. -> கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
(ii) ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது. -> விடை: முதல் பாடவேளை தமிழ் வகுப்பு நடந்தது.
(iii) நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன். -> விடை: நான் ஓவிய ஏட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்.

6. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.

(உண்மை, பயிற்சி, பொறுமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)

பொறுமை உடையவன் மாணவன்.
கல்வி கற்பவன் மாணவன்.
பயிற்சி பெறுபவன் மாணவன்.
உண்மை பேசுபவன் மாணவன்.
பொறாமை அற்றவன் மாணவன்.
கல்லாமை தவிர்ப்பவன் மாணவன்.
முயற்சி செய்பவன் மாணவன்.
ஊக்கம் கொள்பவன் மாணவன்.

மொழியோடு விளையாடு

மொழியோடு விளையாடு

1. பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச்சொற்களை எடுத்து எழுதுக

வருணனைச்சொற்கள் விடை

2. குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்கு விடையைக் கண்டுபிடி.

குறுக்கெழுத்து புதிர்
கீழிருந்து மேல்:
1. தொல்காப்பியம்
2. பாரதியார்
3. பாரதிதாசன்
மேலிருந்து கீழ்:
1. கனகசபை
2. பாப்பா பாட்டு
3. நாடகம்
இடமிருந்து வலம்:
1. இளநீர்
2. தமிழ்
3. இனிமை

3. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி.

1. உருண்டோடும் பெரிய தேரைக் காப்பது அதன் சிறிய -> அச்சாணி
2. இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது -> காந்தம்
3. அம்மா - வேறு சொல் -> அன்னை
4. ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர் -> ஒளவையார்
5. எதிர்ச் சொல் தருக. மேடு -> பள்ளம்
6. காகம் தனக்குக் கிடைத்த உணவைப் பிற காகங்களோடு --------- உண்ணும். -> பகிர்ந்து
7. உன் விடைகளின் மூன்றாவது எழுத்துகளை வரிசைப்படுத்தினால் -> சாதனையாளர்

4. சொல்லிலிருந்து புதிய சொற்கள் உருவாக்குக.

எ.கா. காஞ்சிபுரம் - கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்

5. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.

(அகிலா, பாடம், படித்தாள், நான், படித்தேன், சென்றாள், சென்றேன், வந்தாள், பள்ளிக்கு, வீட்டிற்கு)
1. அகிலா பாடம் படித்தாள்
2. நான் பாடம் படித்தேன்
3. அகிலா வீட்டிற்குச் சென்றாள்
4. நான் வீட்டிற்குச் சென்றேன்
5. அகிலா பள்ளிக்கு வந்தாள்

நிற்க அதற்குத் தக...

நிற்க அதற்குத் தக
(i) நான் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவேன்
(ii) தாய்மொழியைப் போற்றுவேன்

அறிந்து கொள்வோம்

எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள்:
ண – 'டண்ணகரம்' | ந - 'தந்நகரம்' | ன - 'றன்னகரம்'
ர - இடையின 'ரகரம்' | ற - வல்லின 'றகரம்'
ல - மேல்நோக்கு 'லகரம்' | ள – 'பொது ளகரம்' | ழ – 'சிறப்பு ழகரம்'

செயல் திட்டம்

செயல் திட்டம்

1. மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.

விடை: எங்கள் தமிழ் (நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்)
அருள்நெறி அறிவைத் தரலாகும், அதுவே தமிழன் குரலாகும்...

3. பிடித்த கதை ஒன்றினை எழுதி அதில் இடம்பெற்றுள்ள மரபுச்சொற்களை அடிக்கோடிடுக.

ஒரு நாள் காட்டில் வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து வைத்து விட்டு, பறவை சிலவற்றின் மீது அம்பு எய்து கொண்டிருந்தான். வலையில் புறா ஒன்று மாட்டிகொண்டதால், அந்தப் புறா குனுகியது. அங்கிருந்த மயிலும் அகவியது.

5. 'உலகம்' என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.

● புவி ● அகிலம் ● செகம் ● புவனம் ● அண்டம் ● உலகு

7. பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

பாரதிதாசன் படைப்புகள்

கற்பவை கற்றபின்

கற்பவை கற்றபின்
1. மரபு பற்றி நீ அறிந்து கொண்டதை உனது சொந்த நடையில் கூறு.
விடை : மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினை மரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் உள்ளன.
2. நாம் ஏன் மரபினைப் பின்பற்ற வேண்டும்? பின்பற்றவில்லையெனில் மொழி என்னவாகும்?
விடை : இம்மரபுச் சொற்களைப் பின்பற்றவில்லையெனில் மொழி சிதைந்து விடும்.
Tags : Term 1 Chapter 1 | 5th Tamil பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ். 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli : Grammar: Marabu sorkgal: Questions and Answers.