Philanthropists of Sangam Age - 4th Standard Social Science Term 2 Unit 1

சங்க கால வள்ளல்கள் - 4th Social Science Term 2 Unit 1

பருவம் 2 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சங்க கால வள்ளல்கள் | 4th Social Science : Term 2 Unit 1 : Philanthropists of Sangam Age

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 1 : சங்க கால வள்ளல்கள்

சங்க கால வள்ளல்கள்
கற்றல் நோக்கங்கள்
(i) சங்க கால வள்ளல்களின் பெயர்களை அறிந்து கொள்ளல்.
(ii) சங்க கால வள்ளல்கள் ஆட்சி செய்த பகுதிகளின் பெயர்களை அறிந்து கொள்ளல்.
(iii) இரக்க குணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளல்.
(iv) சங்க கால வள்ளல்கள் அவர்களுடைய பகுதிகளை எவ்வாறு ஆட்சி செய்தனர் என்பதனை விவரித்தல்.

அலகு 1

சங்க கால வள்ளல்கள்

Banner Image

கற்றல் நோக்கங்கள்

❖ சங்க கால வள்ளல்களின் பெயர்களை அறிந்து கொள்ளல்.

❖ சங்க கால வள்ளல்கள் ஆட்சி செய்த பகுதிகளின் பெயர்களை அறிந்து கொள்ளல்.

❖ இரக்க குணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளல்.

❖ சங்க கால வள்ளல்கள் அவர்களுடைய பகுதிகளை எவ்வாறு ஆட்சி செய்தனர் என்பதனை விவரித்தல்.

Grandpa
கோடை விடுமுறையில், கீதா தன்னுடைய தாத்தாவுடன் தமிழகத்தில் உள்ள மலைவாழிடமான கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தாள். செங்குத்தான மலைப்பகுதிக்கு, பேருந்தில் செல்வது கீதாவிற்கு இதுவே முதல்முறை ஆகும்.
Geetha
சென்னையைவிட இந்த மலைப்பகுதியில் மட்டும் ஏன் அதிக மரங்கள் காணப்படுகின்றன?
Grandpa
பொதுவாக மலைகள் அதிக மரங்களைக் கொண்டிருக்கும். அவற்றைப் பாதுகாப்பது மக்களின் முக்கிய கடமையாகும்.
Geetha
தாத்தா,பேருந்துகளும், மகிழுந்துகளும் [கார்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இத்தகைய மலைகளுக்கு மக்கள் எப்படி வந்தனர்?
Grandpa
மலைகளில் ஏறுவதற்கு, குதிரைகளையும் கழுதைகளையும் மக்கள் பயன்படுத்தினர்.
Geetha
இந்த மலைப்பகுதிகளை யார் ஆட்சி செய்தனர்?
Grandpa
சங்க காலத்தில் வள்ளல்கள் பலர் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்கள், ஏழு வள்ளல்கள் ஆவர்.
Geetha
ஏழு வள்ளல்களா? ஏன் அவர்கள் மட்டும் அவ்வளவு. புகழ்பெற்று இருந்தனர்? அவர்கள் யார் யார்?
உங்களுக்குத் தெரியுமா?

பல்வேறு இலக்கியநயம் வாய்ந்த செவ்வியல் (classical) பாடல்களைக் கொண்டுள்ள சங்க இலக்கியங்களே, சங்க காலம் பற்றி அறிவதற்கான முக்கிய ஆதாரமாகும்.

Grandpa
பேகன், பாரி, நெடுமுடிக் காரி, ஆய், அதியமான், நள்ளி மற்றும் வல்வில் ஓரி ஆகியோரே அந்த கடையெழு வள்ளல்கள் ஆவர். அவர்கள் சங்க காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர். அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும் அன்பானவர்களாகவும் இயற்கையின் மீதும் மக்களின் மீதும் பற்று கொண்டவர்களாகவும் இருந்தனர்.
Grandpa
அந்த வள்ளல்களும் மக்களும் இயற்கையை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது பற்றியும் இயற்கை அவர்களை எவ்வாறு பாதுகாத்தது என்பது பற்றியும் சில கதைகளை நான் சொல்லட்டுமா?
Geetha
கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

விடையளிக்க முயற்சி செய்க.

1) மூன்று வள்ளல்களின் பெயர்களைக் கூறுக.
2) கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
Story Illustration
Grandpa
முதல் கதையைக் கேட்பதற்கு நீ தயாராக இருக்கிறாயா?
Geetha
ஆம்!
Grandpa
சரி, இது பேகனைப் பற்றிய கதை பேகன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையை ஆட்சி செய்தார். அந்த மலையைத்தான், நாம் இப்பொழுது பார்க்கிறோம். இது மிகச் சிறிய மலைத் தொடராகும். இங்குக் குளிராக இருக்கிறது. அல்லவா?
Geetha
ஆம் தாத்தா, அதனால்தான் அம்மா நமக்கு கம்பளி ஆடையை பெட்டியில் வைத்துள்ளார்கள்.
Grandpa
சரி பேகன் ஒரு நாள் தமது நடைப்பயணத்தின் போது, வழியில் ஒரு மயில் நடுங்குவதைக் கண்டார் குளிர் காரணமாக, மயில் நடுங்கிக் கொண்டிருப்பதாக அவர் கருதினார். அதனால், அந்த மயிலின் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.
Geetha
மயில் எப்படிப் போர்வையைப் பயன்படுத்தும்?
Grandpa
ஒருவேளை பயன்படுத்தாமல்கூட இருக்கலாம். ஆனால், பேகன் மயிலைத் தமது சொந்தக் குழந்தையைப் போலவே கருதினார் என்பதுதான் இதன் கருத்து. இப்போதெல்லாம் எத்தனைபேர் விலங்குகளிடம் இத்தகைய கருணையைக் காட்டுகின்றனர்?
Geetha
தாத்தா ஒரு நாள், சிறுவன் ஒருவன் நாயின் மீது கற்கள் வீசுவதை நான் பார்த்தேன். அவன் செய்வதை நான் தடுத்து நிறுத்தினேன். பேகனைப் பற்றி அவன் அறிந்திருந்தால், அவன் விலங்குகளை நேசிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பான்.
Grandpa
உண்மை. இது மரங்கள் மற்றும் விலங்குகளிடம் கருணை கொள்வது மட்டுமல்ல, மக்களை மதிப்பிடுவதும் ஆகும் நாம் அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்தவேண்டும்.

விடையளிக்க முயற்சி செய்க.

1) பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
2) பேகன், தமது நடைப்பயணத்தின் போது எதைக் கண்டார்?
3) நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?

பாரி

Grandpa
சரி. அடுத்த கதை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அறிவுக் கூர்மையும், கருணை உள்ளமும் உடைய பாரி வள்ளல், பறம்பு நாட்டை ஆட்சி செய்தார். பறம்பு மலையில் அமைந்துள்ளது இப்பறம்பு மலைத்தொடர் தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி, கேரளாவிலுள்ள பாலக்காடு வரை நீண்டுள்ளது. மூவேந்தர்களாகிய சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் பறம்பு நாட்டை அவர்கள் முடியரசின் ஒரு பகுதியாக்க விரும்பினர்.

மலைகளுக்குள் அமைந்த அடர்ந்த காடுகளிலிருந்த பாரியின் படைகளை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. அதனால் பறம்பு நாட்டின் மலையடிவாரங்களிலிருந்து தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களை மலையின் மேற்பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். உணவு மற்றும் நீருக்காக மலையைவிட்டு வெளியில் வரும்போது பாரி சரணடைவார் என மூவேந்தர்கள் நினைக்கனர்.

Geetha
தாத்தா, பாரி சரணடைந்தாரா?
Grandpa
இல்லை, பாரி சரணடையவில்லை. சில மாதங்கள் சென்றன, பலாப்பழம், உண்ணக்கூடிய மூங்கில் மற்றும் கொட்டைகளை அந்தக் காடுகள் அதிக அளவில் அம்மக்களுக்கு வழங்கின. அந்த மலையில் இருந்த ஏராளமான நீரோடைகள் சுத்தமான நீரை அவர்களுக்கு வழங்கின. அதனால், பறம்பு மலையில் உள்ள காடுகள், மிகவும் வளமிக்கதாக இருப்பதை மூவேந்தர்களும் பின்னர்தான் உணர்ந்தனர்.
Geetha
அதனால்தான் அம்மலையில் இருந்தவர்களுக்கு உணவோ, தண்ணீரோ மற்ற இடங்களிலிருந்து தேவைப்படவில்லை.
Grandpa
ஆம். பாரியும் அவனுடைய மக்களும் இயற்கையைப் பாதுகாத்ததைப் போலவே அந்தக்காடுகளும் அவர்களைப் பாதுகாதீதன. அவரின் பெருந்தன்மையைக் கூறக்கூடிய ஒரு பிரபலமான கதைகூட உள்ளது. ஒரு நாள், பாரி தம் தேரில் செல்லும்போது வழியில் முல்லைக்கொடி ஒன்றைக் கண்டார். அந்தக் கொடி பற்றிப்படர்வதற்கேற்ப ஒரு மரம் கூட சங்க இல்லை என்பதை அவர் உணர்ந்தார். அக்கொடி படர ஆதரவாகத் தம்முடைய தேரினை வழங்கினார்.
Geetha
இக்கதை மிகவும் அருமையாக உள்ளது. எங்கள் பள்ளியில் நாங்கள் சில மரங்களை நட்டோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாரி வளர்த்ததைப் போலவே, அந்த மரங்கள் நன்றாக வளர்கின்றனவா என்பதை நானும் உறுதி செய்வேன்.
Grandpa
மேலும், வள்ளல்கள் சிலரின் கதைகளை நீ கேட்க விரும்புகிறாயா?
Geetha
ஆம்!

விடையளிக்க முயற்சி செய்க.

1) பாரி ஆட்சி செய்த பகுதி எது?
2) மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்லவிடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
3) முல்லைக் கொடிக்கு ஆதரவாக, பாரி எதைக் கொடுத்தார்?

அதியமான்

Adhiyaman and Avvaiyar
Grandpa
அதியமான் என்றழைக்கப்பட்ட மற்றொரு வள்ளல் இருந்தார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகடூர் என்ற மலைப்பாங்கான பகுதியை அவர் ஆட்சி செய்தார் ஒரு நாள் அவருக்கு அரியவகை நெல்லிக்கனி ஒன்று வழங்கட்டட்டது அந்த அரிய வகை பழத்தைச் சாப்பிட்டவர் எவரும் சாகாவரம் பெறுவர் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் என்ன செய்தார் என்று உனக்குத் தெரியுமா? பழம்பெரும் புலவரான ஒளவையாருக்கு அப்பழத்தை வழங்கினார்.
Geetha
அப்படியா?
Grandpa
ஆமாம். ஆனால், ஒளவையார் அதிர்ச்சியடைந்து, தனக்கு நெல்லிக்கனியை வழங்கக்காரணம் என்ன என்று அதியமானிடம் கேட்டார் மேலும், அதியமான் குறுநில மன்னராக இருப்பதால் அப்பழத்தை அவர்தாம் சாப்பிட வேண்டும் என்று ஒளவை கூறினார். ஆனால் அதியமானோ, தமக்குப் பின் குறுநில மன்னர்கள் பலரி வருவர். ஆனால், வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ் வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய உங்களைப் போன்ற புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள் என்று ஒளவையாரிடம் கூறினார்.
Geetha
ஆமாம் தாத்தா. நாம் எப்பொழுதும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை மதிக்க வேண்டும்.

விடையளிக்க முயற்சி செய்க.

1) அதியமானுக்குப் பரிசாக என்ன கிடைத்தது?
2) ஔவையார் என்பவர் யார்?
3) ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியைக் கொடுக்கக் காரணம் என்ன?

செயல்பாடு

வள்ளல்கள் கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.

1) பாரி --------------------------------
2) பேகன் -------------------------------------------------
3) அதியமான் -------------------------------------------

வல்வில் ஓரி

Valvil Ori
Grandpa
நான் உனக்கு மற்றொரு வள்ளலான வல்வில் ஒரியைப் பற்றிக் கூறுகிறேன். ஓரி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.
Geetha
வல்வில் என்றால் என்ன பொருள்?
Grandpa
வல்வில் என்றால் வலிமையான வில்லையுடையவன்/ வில்லாற்றல் மிக்கவன் என்பது பொருள். ஓரி, சிறந்த வில்லாளன் என்பதனால் அப்பெயரைப் பெற்றார்.
Geetha
அற்புதம்! அவர் மக்களுக்காக என்ன செய்தார்?
Grandpa
ஓரி தமது வில் ஆற்றலால் மட்டும் மக்களால் அறியப்படவில்லை; பண்பான ஓர் ஆட்சியாளராகவும் பாராட்டப்பட்டார். அவர் கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இதர கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார்.
Geetha
தாத்தா, எனக்கு வல்வில் ஓரியைப் பிடித்திருக்கிறது மற்ற மூன்று வள்ளல்களைப் பற்றியும் சொல்லுங்கள்.
Grandpa
மதுரையின் தெற்கே அமைந்துள்ள பொதிகை மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆய் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்தார். திருக்கோவிலூரில் உள்ள தொண்டை மண்டலப் பகுதியை நெடுமுடிக் காரி என்பவர் ஆட்சி செய்தார். சேர அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட தோட்டிமலைப் பகுதியை நள்ளி என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்தார். கடையெழு வள்ளல்கள் அவர்களுடைய அனைவரும் பண்புகளின் அடிப்படையிலேயே அனைவராலும் அறியப்பட்டனர். அதனால்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் நம்மால் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
Philanthropists Group
Geetha
ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதைகளைக் கூறியமைக்கு மிக்க நன்றி தாத்தா. இக்கதைகளை நான் என்னுடைய நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்..

செயல்பாடு பின்வருவனவற்றைப் பொருத்துக,

1. பாரி - விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் - கைவினைக்கலைஞர்களைப் பெருமைப்படுத்துதல்
3. அதியமான் - இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் ஓரி - - மக்களை மதித்தல்

விடையளிக்க முயற்சி செய்க.

1) வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தநார்?
2) "வல்வில்" என்பதன் பொருள் என்ன?
Landscape
சொற்களஞ்சியம்
1. சங்க காலம் - பண்டைய தமிழக வரலாற்றின் ஒரு காலகட்டம்
2. வள்ளல் - பிறரது நலனைப் மேம்படுத்துவதில் ஆர்வம் உடையவர்கள்
3. செங்குத்தான மலை - மிக உயரமான மலை
4. சாகாவரம் - என்றென்றும் வாழ்தல்
5. கவிஞர் - பாடல்களை எழுதுபவர்
6. கைவினைக் கலைஞர்- திறன் சார்ந்த தொழில் செய்பவர்
நினைவு கூர்க

❖ சங்க காலத்தில் வள்ளல்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஏழு வள்ளல்கள் புகழ்பெற்று இருந்தனர்.

❖ மூவேந்தர்கள் என்பவர்கள் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ஆவர்.

❖ மக்களுடனும் இயற்கையுடனும் கருணை காட்டுபவர்கள் வள்ளல்களாக அறியப்படுகின்றனர்.

❖ கடையெழு வள்ளல்கள் என்பவர்கள் பேகன், பாரி, நெடுமுடிக் காரி, ஆய், அதியமான், நள்ளி மற்றும் வல்வில் ஓரி ஆவர்.

Tags : Term 2 Chapter 1 | 4th Social Science பருவம் 2 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.

4th Social Science : Term 2 Unit 1 : Philanthropists of Sangam Age : Philanthropists of Sangam Age Term 2 Chapter 1 | 4th Social Science in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 1 : சங்க கால வள்ளல்கள் : சங்க கால வள்ளல்கள் - பருவம் 2 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.