4th Social Science Term 2 Unit 1 Philanthropists of Sangam Age Questions and Answers

4th Social Science Term 2 Unit 1 Philanthropists of Sangam Age Questions and Answers

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 1 : சங்க கால வள்ளல்கள்

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 1 : சங்க கால வள்ளல்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. ----------------------- மூவேந்தர்களுள் ஒருவர் ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை: இ) சேரன்
2. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்கள் ---------------- களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை: ஈ) மலைப்பகுதி
3. ------------------ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை: இ) சிவகங்கை
4. பேகன் -------------- மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழனி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை: அ) பழனி
5. அதியமான் ஒரு ----------------- யை ஒளவையாருக்குக் கொடுத்தார்
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை: ஆ) நெல்லிக்கனி

II. பொருத்துக

சரியான இணையைச் சிந்தித்து பொருத்துக:

1. ஆய்
தருமபுரி மாவட்டம்
2. அதியமான்
பொதிகை மலை
3. வல்வில் ஓரி
சிவகங்கை மாவட்டம்
4. பாரி
கொல்லிமலை
விடை:
1. ஆய் - பொதிகை மலை
2. அதியமான் - தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி - கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

1. பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை. விடை : தவறு

2. சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர். விடை : சரி

3. நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். விடை : சரி

4. நெடுமுடிக் காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார். விடை : தவறு

IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

1. சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக (i) சங்க இலக்கியங்கள் இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்களைக் கொண்டுள்ளன.
(ii) இவை சங்ககாலம் பற்றி அறிய முக்கிய ஆதாரமாகும்
2. பாரியை எதிர்த்து வெற்றியடைய இயலாதபோது மூவேந்தர்கள் என்ன செய்தனர்? (i) பறம்பு நாட்டின் மலையடிவாரங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களை மலையின் மேற்பகுதிக்குச் செல்லவிடாமல் செய்தனர்.
(ii) பாரி உணவு மற்றும் நீருக்காக மலையைவிட்டு வெளியே வந்து சரணடைவார் என மூவேந்தரும் நினைத்தனர்.
3. அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?

அதியமானுக்குப் பின்வரும் குறுநில மன்னர்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிப்பதற்காக, ஔவையார் நெடுங்காலம் வாழவேண்டும் என்று கருதி, அதியமான் ஔவையாரிடம் நெல்லிக்கனியை வழங்கினார்.

4. வல்வில் ஓரி எதனால் புகழடைந்தார்? (i) வல்வில் ஓரி ஒரு சிறந்த வில்லாளன்.
(ii) பண்பான ஆட்சியாளராகப் பாராட்டப்பட்டார். கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் மற்றும் இதரக் கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு ஏற்ப வெகுமதி அளித்தார். அதனால் புகழடைந்தார்.
செயல்திட்டம்

உனக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு வள்ளலின் படத்தைச் சேகரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டவும். நீங்கள் அவரை ஏன் விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கவும்.

குறுநில மன்னன் ஆய்

குறுநில மன்னன் ஆய் :

(i) பொதிகை மலையை ஆண்டவன்.
(ii) இவர் பாடல் பாடி இசைக்கும் பாணர் மற்றும் ஆடி மகிழ்விக்கும் கூத்தர் ஆகியயோருக்கு பொன், குதிரை மற்றும் யானை பரிசளித்துக் கௌரவித்தான்.