5th Social Science - Educational Rights (கல்வி உரிமைகள்) Term 3 Unit 3 Questions and Answers

5th Social Science: Educational Rights (கல்வி உரிமைகள்) Term 3 Unit 3 Questions and Answers

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்

வினா விடை | Educational Rights : Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1) ------------------ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படியாகும்.

(அ) கல்வி
(ஆ) ஆய்வு
(இ) அகழ்வாராய்ச்சி
விடை: அ) கல்வி

2) கல்வி ---------------- விட மேம்பட்டதாகும்.

(அ) எண் கணிதம்
(ஆ) எழுத்தறிவு
(இ) மேலே உள்ள அனைத்தும்
விடை: இ) மேலே உள்ள அனைத்தும்

3) 'கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு" என்பது -------------------- இன் பிரபலமான கூற்று ஆகும்.

(அ) மகாத்மா காந்தி
(ஆ) முனைவர். இராதாகிருஷ்ணன்
(இ) சுவாமி விவேகானந்தர்
விடை : இ) சுவாமி விவேகானந்தர்

4) ------------- குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

(அ) எழுத்தறிவு உரிமைச் சட்டம்
(ஆ) கல்வி உரிமைச் சட்டம்
(இ) பள்ளி உரிமைச் சட்டம்
விடை : ஆ) கல்வி உரிமைச் சட்டம்

5) கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ------------------ வடிவமைத்துள்ளது.

(அ) தேசிய கல்வி கொள்கை.
(ஆ) தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை
(இ) எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை
விடை: அ) தேசியக் கல்விக் கொள்கை

II. பொருத்துக.

மாணவர்கள் முதலில் இடப்பக்கம் உள்ள சொற்களுக்கு வலப்பக்கம் உள்ள பொருத்தமான விடைகளைச் சிந்தித்துப் பார்க்கவும்.

1. குருகுலம்
2009
2. கு.காமராசர்
2018
3. கல்வி உரிமைச் சட்டம்
ஞானத்தை உருவாக்குகிறது
4. கல்வி
பண்டைய இந்தியக் கல்வி முறை
5. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்
இலவச மதிய உணவு

விடை :

(i) குருகுலம் - பண்டைய இந்தியக் கல்வி முறை
(ii) கு.காமராசர் - இலவச மதிய உணவு
(iii) கல்வி உரிமைச் சட்டம் - 2009
(iv) கல்வி - ஞானத்தை உருவாக்குகிறது
(v) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் - 2018

III. சரியா தவறா?

1. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு. (விடை: சரி)
2. விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது. (விடை: சரி)
3. பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் விவரிக்கிறது. (விடை: சரி)
4. ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது. (விடை: தவறு)
5. முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்டத் திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும். (விடை: சரி)

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

(i) காரணத்தை ஆய்ந்து அறிதல்.
(ii) வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.
(iii) எது சரி, எது தவறு என்பதனை அறிதல்.
(iv) ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்தல்.

2. கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.

(i) 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்தல்.
(ii) பாகுபாடின்றி எளிதில் கிடைத்தல்.
(iii) கல்வி தேவை அடிப்படையிலானதாக இருத்தல் வேண்டும்.
(iv) குழந்தையை மையமானதாக இருத்தல் வேண்டும்.

3. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?

(i) 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.
(ii) கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.
(iii) ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.

4. தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக,

(i) இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019-ஆம் ஆண்டில், இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது.
(ii) இது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலானது.

5. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.

(i) தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
(ii) பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.
(iii) மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

V விரிவான விடையளிக்க.

1. இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக,

(i) இந்தியாவில் குருகுலக் கல்வியே நடைமுறையில் இருந்துள்ளது.
(ii) குரு என்பவர் ஆசிரியர், ஷிஷ்யா என்பவர் மாணவர்.
(iii) ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கச் சென்று கல்வி பயின்றுள்ளனர்.
(iv) மனதை விரிவுபடுத்துவதற்கு உதவியது.
(v) சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.
(vi) மேலும் இது ஞானத்தை வளர்க்கிறது.

2. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.

(i) ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு.
(ii) 6 முதல் 14 வயது வரையிலானது.
(iii) கல்வி உரிமைச் சட்டம் 2009 இதை விவரிக்கின்றது.

முக்கியக் கூறுகளாவன:
(i) தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த மாணவரும் பள்ளியிலிருந்து இடை நில்லாமை.
(ii) பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு.
(iii) ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
(iv) மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் நிதி பகிரப்படும்.

3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.

2018-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு, மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக் கல்வியை இணைத்து ஒரே திட்டமாக வழங்க முனைவது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டமாகும்.

இதன் குறிக்கோள்கள்:
(i) தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
(ii) கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.
(iii) மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

செயல்பாடு / செயல் திட்டம்

Educational Rights Activity
Tags : Educational Rights | Term 3 Chapter 3 | 5th Social Science கல்வி உரிமைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல். 5th Social Science : Term 3 Unit 3 : Educational Rights : Questions with Answers Educational Rights | Term 3 Chapter 3 | 5th Social Science in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers.