5th Social Science: Educational Rights (Term 3 Unit 3) - Samacheer Kalvi

5th Social Science: Educational Rights - Term 3 Unit 3
பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - கல்வி உரிமைகள் | 5th Social Science : Term 3 Unit 3 : Educational Rights

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்

கல்வி உரிமைகள்

கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக, ❖ கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிப்பர். ❖ பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் பற்றி விவரிப்பர். ❖ கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகளைப் பட்டியலிடுவர்.

அலகு 3

கல்வி உரிமைகள்

Educational Rights Header

கற்றல் நோக்கங்கள்

மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,

(i) கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிப்பர்.
(ii) பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் பற்றி விவரிப்பர்.
(iii) கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகளைப் பட்டியலிடுவர்.
Learning Objectives Icon

அறிமுகம்

மக்களுக்கும், தேசத்திற்கும் கல்வி மிகவும் முக்கியமானது. குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படி கல்வியாகும். கல்வி ஒருவரின் அறிவு, திறன்கள், மதிப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

Education Introduction

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி என்பது, ஒருவர் பெற்ற எழுத்தறிவை மட்டும் குறிப்பதன்று; இது எழுத்தறிவைவிட மேம்பட்டதாகும். கல்வியின் மூலம்,

(i) காரணத்தை ஆய்ந்து அறிதல்.
(ii) வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.
(iii) எது சரி, எது தவறு என்பதனை அறிதல்.
(iv) ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ்தல்.
"கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் பெறுவது அல்ல. எழுத்தறிவு பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல." "உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்வதே கல்வியின் உன்னத நோக்கம்."
-மகாத்மா காந்தி
Mahatma Gandhi

ஒருவர் பரந்த மனப்பான்மையைப் பெற கல்வி உதவுகிறது. இது மூடநம்பிக்கைகளை (Superstitions) நீக்குகிறது. சமூகம், சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது. இது ஞானத்தை வளர்க்கிறது.

நாம் அறிந்து கொள்வோம்
"அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே' என்று தொடங்கிய தனது சொற்பொழிவால் சுவாமி விவேகானந்தர் பரவலாக அனைவராலும் அறியப்படுகின்றார்.
"கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு."
-சுவாமி விவேகானந்தர்
Swami Vivekananda
நாம் அறிந்து கொள்வோம்.
குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரியர்) மற்றும் ஷிஷ்யா (மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.
Gurukulam Education

கல்வி உரிமைகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்கு (Ensure) கல்வி உரிமைச் சட்டம் (RTE) உள்ளூர் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெவ்வேறு பொறுப்புகளை அளித்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

கல்வி அனைவருக்கும் பாகுபாடின்றி எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கல்வி தேவை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். இது குழந்தையின் ஆளுமையை வடிவமைக்க வேண்டும் கல்வி முறையின்படி கல்வியானது குழந்தையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

செயல்பாடு நாம் செய்வோம்.

புதிருக்கு விடை காண்க.

குறிப்புகள்

Riddle Clue
1. நான் அழுக்காக இருக்கும் பொழுது வெண்மையாகவும், தூய்மையாக இருக்கும் பொழுது கருப்பாகவும் இருப்பேன். நான் யார்?
2. நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும் போது குட்டையாகவும் இருப்பேன். நான் யார்?
3. உலர்ந்திருக்கும்பொழுது நான் ஈரமாக்கப்படுவேன். நான் யார்?
4. எனக்குக் கழுத்து உண்டு. ஆனால், தலை இல்லை. நான் யார்?
சட்டமன்றப் பிரிவு மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகும். கல்வி, பொதுப் பட்டியல் பிரிவின் கீழ் வருகிறது.

கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகள்

(i) தொடக்கக் கல்வி நிறைவடையும்வரை, எந்த மாணவரும் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவதில்லை.
(ii) அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
(iii) கல்வியின் தரத்தில் முன்னேற்றம்.
(iv) ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
(v) மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிதி பகிரப்படும்.

தேசிய கல்வி கொள்கை

இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி முறைகளையும் உள்ளடக்கியது.

நாம் அறிந்து கொள்வோம்.
முதல் தேசிய கல்வி கொள்கை 1968 இல் செயல்படுத்தப்பட்டது, இரண்டாவதாக 1986 இல் செயல்படுத்தப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் முறை நமது நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு.

Educational Rights Rights Protection

கல்வித் திட்டங்கள்

முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்ட இலவச மதிய உணவு திட்டம் இன்றியமையாத கல்வித் திட்டமாக விளங்குகின்றது.

இந்தியக் கல்வி முறை முக்கியமாக நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

(i) தொடக்க நிலை
(ii) நடுநிலை
(iii) உயர்நிலை
(iv) மேல்நிலை

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), கல்வி உரிமைச் சட்டம் (RTE) போன்றவற்றால் கல்வியில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம்

(i) தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.
(ii) 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச்செய்தல்.
(iii) கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய முந்தைய (Erstwhile) மூன்று திட்டங்களை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (SS) ஏற்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம்

(i) குறைந்தபட்ச கல்வியின் அளவைப் பத்தாம் வகுப்புக்கு உயர்த்துதல்.

பின்னர் 2018ஆம் ஆண்டில், இந்திய அரசு மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பள்ளிக் கல்வியை இணைத்து ஒரே திட்டமாக வழங்க விரும்பியது. இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (SS) என்று அழைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (SS) குறிக்கோள்கள்

(i) தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
(ii) கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.
(iii) பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.
(iv) மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

நாம் அறிந்து, கொள்வோம்.
பெருந்தலைவர் கு.காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாள் (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது
Kamarajar Education Development Day

கலைச்சொற்கள்

1. Ensure : உறுதிப்படுத்துதல்
2. Erstwhile : முந்தைய
3. Superstitions : மூடநம்பிக்கைகள்.

மீள்பார்வை

(i) ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி மிகவும் முக்கியமானது.
(ii) ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற உரிமை உண்டு.
(iii) கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
(iv) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.
(v) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (SS) குறிக்கோள் தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல் ஆகும்.
Tags : Term 3 Chapter 3 | 5th Social Science பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல். 5th Social Science : Term 3 Unit 3 : Educational Rights : Educational Rights Term 3 Chapter 3 | 5th Social Science in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள் : கல்வி உரிமைகள் - பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.