5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பருவம் 3 அலகு 2 : வேளாண்மை (Agriculture)
புத்தக வினாக்கள் மற்றும் விடைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) ------------ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
விடை: ஆ) வேளாண்மை
2) ---------------- என்பவர் உணவு அல்லது மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
விடை: இ) விவசாயி
3. -------------- வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
விடை: ஆ) கலப்புப் பொருளாதார
4) -------------- நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
விடை: அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
5) தமிழகத்தில் உள்ள ------------. மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை: அ) கோயம்புத்தூர்
II. பொருத்துக
மாணவர்கள் முதலில் இடது பக்கம் உள்ள குறிப்புகளுக்கு வலது பக்கம் உள்ள சரியான இணையைச் சிந்தித்துப் பார்க்கவும்:
1. தோட்ட வேளாண்மை
- விலங்குகளை வளர்ப்பது
2. கலப்புப் பொருளாதார வேளாண்மை
- பழைமையான முறை
3. வணிக வேளாண்மை
- ஒற்றைப் பண பயிர்
4. கிணற்று நீர்ப்பாசனம்
- குடும்ப நுகர்வு
5. தன்னிறைவு வேளாண்மை
- விற்பனை நோக்கம்
சரியான விடை :
- தோட்ட வேளாண்மை - ஒற்றைப் பண பயிர்
- கலப்புப் பொருளாதார வேளாண்மை - விலங்குகளை வளர்ப்பது
- வணிக வேளாண்மை - விற்பனை நோக்கம்
- கிணற்று நீர்ப்பாசனம் - பழைமையான முறை
- தன்னிறைவு வேளாண்மை - குடும்ப நுகர்வு
III. சரியா தவறா?
1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். (விடை: சரி)
2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன. (விடை : தவறு)
3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். (விடை: சரி)
4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும். (விடை : தவறு)
5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். (விடை: சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க
1. வேளாண்மை என்றால் என்ன?
விடை:
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.
2. விவசாயிகளைப் பற்றி எழுதுக.
விடை:
(i) விவசாயி என்பவர், உணவு அல்லது மூலப் பொருட்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார்.
(ii) இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெழும்பு ஆவார்.
(ii) இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெழும்பு ஆவார்.
3. வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
விடை:
(i) தன்னிறைவு வேளாண்மை.
(ii) வணிக வேளாண்மை.
(iii) தோட்ட வேளாண்மை.
(iv) கலப்புப் பொருளாதார வேளாண்மை.
(ii) வணிக வேளாண்மை.
(iii) தோட்ட வேளாண்மை.
(iv) கலப்புப் பொருளாதார வேளாண்மை.
4. கிணற்று நீர்ப்பாசனம் என்றால் என்ன?
விடை:
(i) கிண்ற்றில் கிடைக்கும் ஊற்றுநீர் மூலம் விவசாயம் செய்வதையே கிணற்றுநீர் பாசனம் என்கிறோம்.
(ii) இது பழமையான முறையாகும்.
(ii) இது பழமையான முறையாகும்.
5. மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்கானித்து வருகிறது.
V. விரிவான விடையளிக்க
1. கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
விடை:
(i) கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமில்லாமல் விலங்குகளையும் வளர்ப்பதாகும்.
(ii) இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.
(iii) தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும்.
(iv) எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.
(ii) இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.
(iii) தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும்.
(iv) எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.
2. ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விவரி.
விடை:
கால்வாய் நீர்ப்பாசனம்:
(i) இந்தியாவில் உள்ள சில வற்றாத கால்வாய்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனம் கால்வாய் பாசனமாகும்.
(ii) உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீஹார் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்:
(i) சொட்டு நீர்ப்பாசனம் என்பது தாவரங்களின் வேர்களில், நீர் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்படுவதாகும். இது நுண் பாசன முறையாகும்.
(ii) இதனால் நீர் ஆவியாதல் குறைகிறது.

3. தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
விடை:
(i) நெல் தமிழகத்தின் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி முக்கிய உணவுப் பொருளாகும்.
(ii) அரிசி, மக்காச்சோளம். கம்பு, சோளம். கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
(iii) பணப் பயிர்களான பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள், காபி, இரப்பர், தேயிலை, தேங்காய் எள் மற்றும் மிளகாய் போன்றவை பயிரிடப்படுகின்றன.
(iv) மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ மற்றும் ரோஜா போன்ற மலர்களும் பயிரிடப்படுகின்றன.

செயல்பாடு / செயல் திட்டம்
(i) அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில தானியங்களைச் சேகரிக்க.
(ii) அவற்றைச் சிறிய பொட்டலங்களில் இடுக.
(iii) ஓர் அட்டவணையில் அனைத்து பொட்டலங்களையும் பொருத்துக.