5th Social Science Term 1 Unit 4 Atmosphere Tamil Medium Lesson Notes

5th Social Science Term 1 Unit 4: Atmosphere - வளிமண்டலம்
பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வளிமண்டலம் | 5th Social Science : Term 1 Unit 4 : Atmosphere

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 4 : வளிமண்டலம்

வளிமண்டலம்

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 4 : வளிமண்டலம்: பதில்களுடன் கேள்விகளை பயிற்சி செய்கிறது, தீர்வு, மதிப்பீடு

அலகு 4

வளிமண்டலம்

Atmosphere Unit Header

கற்றல் நோக்கங்கள்

மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக:-

(i) உயிர்க்கோளம் பற்றி அறிந்துகொள்வர்.
(ii) வளிமண்டலம் பற்றித் தெரிந்துகொள்வர்.
(iii) காற்று மற்றும் மேகங்களின் வகைகள் பற்றி தெரிந்துகொள்வர்.

உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் என்பது பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.

Biosphere Atmospheric Interaction
பாறைக்கோளம் - நிலம்
நீர்க்கோளம் - நீர்
வளிமண்டலம் – காற்று
உயிர்க்கோளம் - உயிர்க்கோனம்

வளிமண்டலம்

வளிமண்டலம் என்பது புவியைச் சுற்றியுள்ள காற்று சூழ்ந்த பகுதி ஆகும்.

வானிலை

வானிலை என்பது மிதவெப்ப நிலை, ஈரப்பதம், மேகமூட்டம், அழுத்தம் ஆகியவற்றின் குறுகிய கால நிலையாகும்.

காலநிலை

ஒரு பரந்த நிலப்பரப்பின் 30 ஆண்டுக்கால சராசரி வானிலையே காலநிலை ஆகும்.

செயல்பாடு நாம் எழுதுவோம்

ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கி எறிந்தால், அது கீழே வரும் போது அதிகரிக்கும் வேகத்தை கவனிக்க.

Activity Ball
சிந்தனை செய்

உலக சுற்றுச்சூழல் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

Environment Question

வளிமண்டல அடுக்குகள்

புவியீர்ப்பு விசையானது பூமிக்கு அருகில் இருக்கும்பொழுது அதிகரிக்கிறது, நாம் மேலே செல்லச் செல்ல குறைகிறது என்பதை அறிவோம். இதன் விளைவாக வளிமண்டலத்தின் ஐந்து அடுக்குகளான ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர், மற்றும் எக்சோஸ்பியர் போன்ற அடுக்குகளில் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது. அனைத்து வானிலை மாற்றங்களும் ட்ரோப்போஸ்பியர் பகுதியில் நிகழ்கின்றன. வானிலையைப் பற்றி படிக்கும் அறிவியல் வானிலையியல் (Meteorology) என்றழைக்கப்படுகிறது.

காலநிலை என்ற சொல் கிளைமா என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டது.

Atmospheric Layers Diagram

உலக வானிலை நாள் - மார்ச்-23
உலக ஓசோன் தினம் - செப்டம்பர்-16

(பாரன்ஹீட் செல்சியஸ் மற்றும் கெல்வின். ஆகியவை வெப்பநிலையை அளவிடப் பயன்படும் அளவுகள் ஆகும்.

ppppppppppppppppppppppppppppppppp

செயல்பாடு நாம் எழுதுவோம்

கீழ்க்காணும் வாயுக்களின் முக்கியத்துவத்தை எழுதுக.

ஆக்சிஜன் ----------------------------

கார்பன் டைஆக்சைடு ----------------

ஓசோன் -------------------------

சூரியக்கதிர்வீச்சு

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சூரியன் மட்டுமே ஒளி ஆதாரமாக விளங்குகிறது. நமது பூமியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை சூரியனிடமிருந்து வெப்பத்தை பெறுகின்றன. பூமியானது கதிர் வீசல் என்ற முறையில் சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றலை பெறுகிறது. இதற்கு சூரியக்கதிர்வீச்சு என்று பெயர்.

Solar Radiation

காலநிலைக் காரணிகள்

(i) வெப்பநிலை
(ii) அழுத்தம்
(iii) காற்று
(iv) மேகங்கள்
(v) மழைப்பொழிவு

(i) வெப்பநிலை

(i) நிலம் - கடத்துதல்
(ii) நீர் - ஆவியாதல்
(iii) வளிமண்டலம்-நிலக் கதிர்வீச்சு

சூரியனிலிருந்து வரும் கதிர்களை பிரதிபலிக்கும் திறன் பூமிக்கு உண்டு. வெப்பநிலை எங்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அட்சங்கள், உயரம், கடலிலிருந்து தூரம், மலைகளின் அமைவு ஆகியவை, ஒரு இடத்தின் வெப்பநிலையை நிர்ணயிக்கும் சில காரணிகள் ஆகும்.

நாம அறிந்து கொள்வோம்.

புவியின் மேற்பரப்பில் மேற்கிலிருந்து, கிழக்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் அட்சரேகை எனப்படும்.

புவியின் மேற்பரப்பில் வடக்கிலிருந்து, தெற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் தீர்க்கரேகை எனப்படும்

அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஒரு அமைவிடத்தை மிகத் துல்லியமாக கண்டறிய உதவுகின்றன.

Latitude and Longitude

காலை முதல் மாலை வரை வெப்பம் வேறுபடுவது ஏல?
அதற்குக் காரணம் சூரியக்கதிர்களே ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் விழுவதற்கேற்றவாறு பூமி பல்வேறு வெப்பமண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

(i) மகரரேகைக்கும், கடகரேகைக்கும் இடைப்பட்ட பகுதி வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
(ii) பூமியில் சூரியக் கதிர்கள் சாய்வாக விழும் பகுதிகளான 23 1/2° முதல் 66 1/2°வடக்கு அட்சமும் 23 1/2° முதல் 66 1/2° தெற்கு அட்சமும் மிதவெப்ப மண்டலமாகும்.
(iii) ஆண்டு முழுவதும் மிக மிகச் சாய்வாக சூரிய ஒளிப்படும் பகுதிகள் குளிர் மண்டலம் எனப்படுகிறது.

(ii) அழுத்தம்

வெப்பநிலை உயரும்பொழுது அழுத்தம் குறைகிறது. வெப்பநிலை குறையும்பொழுது அழுத்தம் அதிகரிக்கிறது.

கடல் மட்டத்தில் சராசரி காற்றின் அழுத்தம் 1013 mlb (millil bar) ஆகும்.

காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி பாரமானி (Barometre) ஆகும்.

Barometer

காற்றின் வேகத்தை அளவிட உதவும் கருவி காற்றுமானி (Anemometre) ஆகும்.

Anemometer

காற்றின் திசையை அளவிட உதவும் கருவி காற்று திசைக்காட்டி (wind vane) ஆகும்.

Wind Vane

(iii) காற்று

காற்றானது அதிக அழுத்தப் பகுதியில் இருந்து குறைந்த அழுத்த பகுதிக்கு கிடைமட்டமாக வீசுகிறது. காற்று ஒருபோதும் ஒரே திசையில் வீசுவதில்லை. இது இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் வேறுபடுகிறது. பூமியின் சுழற்சியே இதற்கு காரணம் ஆகும்.

காற்றாற்றல் என்பது புதுப்பிக்ககூடிய ஆற்றலின் ஒருவடிவமாகும். காற்றுக் கலன்கள் காற்றின் மூலம் கிடைக்கும் இயக்க ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.

Wind Energy

லூ காற்று

லூ என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வீசும் ஒரு வலிமையான, புழுதி படிந்த, வெப்பமான, வறண்ட கோடைக்காற்று ஆகும். இக்காற்று வட இந்தியாவில் குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் வலுவாக வீசும்.

Loo Wind

பல்வேறு வகையான காற்றுகள்

கோள் காற்று

பூமியின் சுழற்சிக்கேற்றவாறு ஆண்டுமுழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்று கோள்காற்று எனப்படும்.

பருவக்காற்றுகள்

மான்சூன் என்ற வார்த்தை மௌசிம்' என்ற அரேபியச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு பருவகாலம் என்று பொருள்.

இந்தியாவில் வீசும் பருவக்காற்றுகள்

(i) தென்மேற்கு பருவக்காற்று
(ii) வடகிழக்கு பருவக்காற்று
Monsoon Wind Path Monsoon Map

கடல் காற்று

கடல் காற்று மாலைப்பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.

Sea Breeze

நிலக் காற்று

நிலக் காற்று காலைப் பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுகிறது.

Land Breeze

உள்ளூர் காற்று

உள்ளூர் காற்று வானிலையைப் பாதிக்கிறது.

(i) வட மேற்கு இந்தியாவில் வீசும் வெப்பக்காற்று. எ.கா. லூ காற்று
(ii) வட கிழக்கு இந்தியாவில் வீசும் குளிர்காற்று. எ.கா. நார்வெஸ்டர்ஸ்

ஜெட் காற்றோட்டம்

வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும். காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்க காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

Jet Stream

புயல் (சூறாவளி)

வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் புயல் தோன்றுகிறது புயல் தனது நிலையையும் திசையையும் அவ்வப்போது மாற்றுகிறது. காற்றின் வேகமும் அவ்வப்போது மாறுபடுகிறது. இது பெரும் மழைப்பொழிவைத் தருகிறது.

Cyclone

(iv) மேகங்ககள்

நீர்த் திவலைகளின் தொகுப்பே மேகங்கள் ஆகும். உயரம் மற்றும் தோற்றம் அடிப்படையில் மேகங்கள் நான்கு பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

(i) கீற்றுமேகங்கள்
(ii) திரள்மேகங்கள்
(iii) படைமேகங்கள்
(iv) கார்மேகங்கள்

கீற்றுமேகம்

கீற்றுமேகம் வானத்தில் ஒரு வெள் சாம்பல் நிற மீனைப்போல காட்சியளிக்கிறது இவ்வகையான மேகங்கள் மழைப்பொழிவை தராது.

Cirrus Cloud

படைமேகம்

படைமேகம் சாம்பல் நிற விரிப்பு போன்ற தாற்றத்தை உடையது. இது சிறு தூறல்ழையைக் கொடுக்கிறது.

Stratus Cloud

திரள்மேகம்

வெண்பஞ்சு போல் காட்சியளிக்கும் திரள்மேகம் வெப்பச்சலனமழைப்பொழிவைத் தருகிறது. இவ்வகையான மேகங்கள் மழைப்பொழிவு, மின்னல் மற்றும் இடி ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்

Cumulus Cloud

கார்மேகம்

கார்மேகம் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இவ்வகையான மேகங்கள் பலத்த மழையைத் தருகிறது. இது செங்குத்து மேகங்கள் அல்லது மழை மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

Nimbus Cloud

(v) மழை

நீரானது நீராவியாகி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் நீர் சுருங்குதலால் (condensation) மழை ஏற்படுகிறது. மழை நீரை வீணாககாமல் சேமிக்க வேண்டும்.

கொங்கன் பகுதியின் மீது ஏற்படும் காற்று சுழற்சியின் காரணமாக மும்பை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் கன மழையை ஏற்படுத்தும்

Rainfall

வெப்பச்சலன மழை

கோடைக்காலத்தில் சூரியக் கதிர்கள் பூமியில் செங்குத்தாக விழுவதால் ஏரிகள், குளங்கள், கடல்கள், பெருங்கடல்கள், தாவரங்கள் (vegetations) ஆகியவற்றில் உள்ள நீர் ஆவியாகிறது. இதன் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைப்பொழிவு ஏற்படுகிறது. பெய்கிறது.

Convectional Rain

சூரிய ஒளி உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும், உயிரினங்களும் இயற்கை சூழல் என்று அழைக்கப்படுகின்றன.

மலைத்தடை மழை

பருவக்காற்று மலைச்சரிவின் ஒரு பக்கத்தில் மேலெழும்புகிறது. இதன் காரணமாக காற்றானது குளிர்ந்து அதிக மழைப்பொழிவை மலையின் அடுத்த பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படுகிறது. இது குறைவான மழையையே பெறுகிறது.

Orographic Rain

சூறாவளி மழைப்பொழிவு

வெப்பமான பகுதியிலுள்ள காற்றானது மலும் வெப்பப்படுத்தப்பட்டு மேலெழும்புகிறது. தனால் தாழ் அழுத்தப்பகுதி உருவாகி ருகாமையிலுள்ள உயரழுத்தப் குதிகளிலிருந்து காற்றினை ஈர்க்கின்றது. மேலெழும்பி குளிர்ந்து கனமழையைக் கொடுக்கிறது.

Cyclonic Rain

மழை நீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு என்பது, நீர்த்தேக்கங்கள் (Reservoir) அல்லது ஏரிகளில் மழைநீரைச் சேகரித்து சேமித்து வைக்கும் ஒரு உத்தி ஆகும் வீடுகளின் கூரைமேல் விழும் மழை நீை சேகரித்து பூமிக்குள் செல்ல வழிவகை செய்வது மழைநீர் சேமிப்பு முறையாகும்.

கலைச்சொற்கள்

நீர் நீராவியாக சுருங்குதல் : Condensation
நீர்த்தேக்கங்கள் : Reservoir
தாவரங்கள் : Vegetations

மீள்பார்வை

(i) உயிர்க்கோளம் என்பது பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.
(ii) ஒரு பரந்த நிலப்பரப்பின் 30 ஆண்டுகால சராசரி வானிலையே காலநிலை ஆகும்.
Tags : Term 1 Chapter 4 | 5th Social Science பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 1 Unit 4 : Atmosphere : Atmosphere Term 1 Chapter 4 | 5th Social Science in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 4 : வளிமண்டலம் : வளிமண்டலம் - பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.