5th Standard Social Science Term 2 Unit 2 Hydrosphere Question and Answers

5th Standard Social Science Term 2 Unit 2 Hydrosphere Question and Answers

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்க்கோளம்

5th Social Science : Term 2 Unit 2 : Hydrosphere | வினா விடை

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1) நீர்க்கோளம் என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த ------------------- அளவைக் குறிக்கும்.
அ) காற்று ஆ) நீர் இ) நிலம் ஈ) தாவரங்கள்
விடை : ஆ) நீர்
2) பொருந்தாதவற்றைக் கண்டுபிடி
அ) கங்கை ஆ) அட்லாண்டிக் இ) ஆர்டிக் ஈ) பசிபிக்
விடை : அ) கங்கை
3) நீர்ப்பரப்பின் அனைத்துப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டிருந்தால் ------------------ என அழைக்கப்படுகிறது.
அ) ஆறு ஆ) வளைகுடா இ) ஏரி ஈ) விரிகுடா
விடை : இ) ஏரி
4) ஆவியாதல் என்பது, நீர் சுழற்சியின் ----------------- படிநிலை.
அ) முதல் ஆ) இரண்டாம் இ) மூன்றாம் ஈ) நான்காம்
விடை : அ) முதல்
5) ஒரு நீர்ப்பரப்பின் ஒரு பகுதியை நிலம் சூழ்ந்திருந்து, மற்றப் பகுதிகள்: கடலை நோக்கி இருந்தால் ------------------- எனப்படும்.
அ) கடல் ஆ) நீர்ச்சந்தி இ) விரிகுடா ஈ) குளம்
விடை : இ) விரிகுடா

II. பொருத்துக.

சிந்திப்பதற்கான பயிற்சி: இடது பக்கம் உள்ள வினாக்களுக்கு வலது பக்கம் உள்ள சரியான இணையை யோசித்து பிறகு விடையைப் பார்க்கவும்.
1. நன்னீர்
2. உப்பங்கழி
3. இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கிறது
4. உள்நாட்டு உப்பு ஏரி
5. ஆவிசுருங்குதல்
- சம்பார் ஏரி
- பாக்நீர்ச்சந்தி
- மேகங்கள் உருவாதல்
- ஒடிசாவில் உள்ள சிலிகா
- தால் ஏரி
விடை :
1. நன்னீர் - தால் ஏரி
2. உப்பங்கழி - ஒடிசாவில் உள்ள சிலிகா
3. இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கிறது. - பாக்நீர்ச்சந்தி
4. உள்நாட்டு உப்பு ஏரி - சம்பார் ஏரி
5. ஆவிசுருங்குதல் - மேகங்கள் உருவாதல்

III. சரியா / தவறா எழுதுக.

1. பூமியில் 97% நீர் உப்பாக உள்ளது. (விடை: சரி)
2. நமது அன்றாடத் தேவைகளுக்கு நீர் தேவை இல்லை. (விடை: தவறு)
3. கடல்நீர் இனிப்பாக இருக்கும். (விடை: தவறு)
4. நாம் பாத்திரங்களைக் கழுவி முடிக்கும் வரையில் குழாயைத் திறந்து வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். (விடை: தவறு)
5. நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும். (விடை: சரி)

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. நீர்க்கோளம் வரையறு.

(i) நீர்க்கோளம் என்பது, நமது கோளில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும்.

(ii) பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் கலந்துள்ள நீர் ஆகிய அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.

(iii) ஒரு கோளின் நீர்க்கோளமானது நீர், நீராவி அல்லது திடநிலையில் பனிக்கட்டி வடிவில் இருக்கும்.

(iv) நீர்க்கோளமானது ஏறக்குறைய 71% பூமியில் சூழந்துள்ளது. இதில் நீர் நீர்மவடிவிலும், உறைந்த வடிவிலும் காணப்படுகிறது.

(v) 97% உப்பு நீராகவும் மீதமுள்ள 3% நீர் நிலத்தடியிலும் காணப்படுகிறது.

2. நீர்க்கோளம் முக்கியமானது. ஏன்?

(i) நமது அன்றாட வாழ்வில் நீரின் தேவை மிகுதியாக உள்ளது. பருக, குளிக்க, சமைக்க போன்ற பல அன்றாட நடவடிக்கைகளுக்கு நீர் தேவைப்படுகிறது.

(ii) விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர்வாழ நீர் தேவை.

(iii) நீர் இல்லாவிடில், நீர் ஆவியாகி மேகங்களாக உருவாக முடியாது. அதனால் மழை இருக்காது.

3. பல்வேறு வகையான நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.

நீர்ப்பரப்புகளின் வகைகள் பின்வருமாறு:

பெருங்கடல்கள், கடல், ஆறுகள், ஏரிகள், வளைகுடா, விரிகுடா, உப்பங்கழி, நீர்ச்சந்தி, அருவி

V. விரிவான விடையளிக்க.

1. நீர் சுழற்சியின் படிநிலைகள் யாவை?

முதல் நிலை : ஆவியாதல்

சூரிய ஒளி, நீர்ப்பரப்புகளான பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள் போன்றவற்றின் மேல் விழுவதால், நீர் மெதுவாக ஆவியாகிக் காற்றில் கலக்கிறது.

இரண்டாம் நிலை : ஆவி சுருங்குதல்

நீர் ஆவியாகி மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை, அவற்றைத் குளிர்வித்து மீண்டும் நீர்மமாக மாற்றுகிறது. இதுவே ஆவிசுருங்குதல் எனப்படுகிறது. காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் மேகங்கள் உருவாகின்றன.

மூன்றாம் நிலை : மழைப்பொழிவு :

காற்றின் இயக்கத்தால் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அவை மழைபொழியும் மேகங்களாக மாறி, மழையாக மீண்டும் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. மழைப்பொழிவானது தட்ப வெப்ப நிலையைப் பொருத்து மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ, பனிப்பொழிவாகவோ, பனித்துளியாகவோ இருக்கக்கூடும்.

நான்காம் நிலை (வழிந்தோடுதல் மற்றும் உறிஞ்சப்படுதல்) :

நீரானது பெருங்கடல்கள், ஆறுகள் அல்லது நிலமேற்பரப்பில் வழிந்தோடுகிறது அல்லது மண்ணால் உறிஞ்சப்படுகிறது. இச்சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

2. நீரைச் சேகரிக்க உதவும் வழிமுறைகளுள் சிலவற்றைக் கூறுக.

(i) தூவாலை குழாயைப் (Shower) பயன்படுத்திக் குளிப்பதைக் குறைத்துக்கொண்டு வாளியில் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

(ii) பாத்திரங்களைக் கழுவியபின், குழாய்கள் மூடப்பட்டுள்ளனவா என்பதனைக் கவனிக்க வேண்டும்.

செயல்பாடு (செயல் திட்டம்)

நீர்நிலைகளின் படங்களைச் சேகரித்து, ஒவ்வொன்றையும் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதுக.

Tags : Hydrosphere | Term 2 Chapter 2 | 5th Social Science நீர்க்கோளம் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 2 Unit 2 : Hydrosphere : Questions with Answers