பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
உலகில் உள்ள கண்டங்கள்
5th Social Science : Term 2 Unit 3 : Continents of the world
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
அறிமுகம்
நாம் எங்கு வாழ்கிறோம்? நாம் அனைவரும் பூமியில் வாழ்கிறோம். பூமிதான் நமது வீடு. பூமியின் மொத்த நிலப்பரப்பும் ஏழு கண்டங்களாகப் பல்வேறு அளவுகளில் பிரிந்துள்ளன. இவற்றில் சில கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. மற்றவை இணையாமல் தனிப்பட்ட கண்டங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு கண்டமும் வெவ்வேறு எண்ணிக்கையிலான நாடுகளைக் கொண்டுள்ளன. உலகத்திலுள்ள ஏழு கண்டங்களாவன: ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா.
உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசியாவில்தான் உள்ளன. பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட சிகரம் ஆசியாவில்தான் உள்ளது. பண்டைய நாகரிகங்களான (Civilisation) சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன.
மனிதனால் கட்டப்பட்ட சீனப்பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்துகூடக் காண முடியும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்த ஏழு கண்டங்களும் இணைந்து இருந்தது. பெரிய நிலப்பரப்பாக இருந்த அந்நிலப்பரப்பு பாஞ்சியா என்று அழைக்கப்பட்டது. ஆனால், மெல்ல மெல்ல அந்நிலப்பரப்பு உடைந்து, ஏழு கண்டங்களாகப் பிரிந்தது.
ஆசியாவில் உள்ள மற்ற சில நாடுகள்: ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஸ்ரீலங்கா, நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து மற்றும் இந்தோனோசியா. தற்பொழுது நாம் ஆசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் நமது நாட்டைப் பற்றிக் கற்போம்.
நமது நாடு இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக இந்தியா அறியப்படுகிறது. ஏனெனில், மக்கள் வெவ்வேறு மதங்களையும், மொழிகளையும் கலாச்சாரங்களையும் கொண்டு ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது. இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டடுள்ளது. இந்த அழகான நினைவுச் சின்னமானது (Monument) உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச்சின்னங்களாவன, புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்.
உலகத்திலுள்ள ஏழு அதிசயங்களின் படங்களைத் தொகுத்து ஒட்டவும்.
உலக கண்டங்களில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பினைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா ஆகும். உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும், உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாராப் பாலைவனமும் ஆப்பிரிக்காவில்தான் உள்ளன. உலகிலேயே 50% மேல் தங்கம், வைரம் ஆகியவை கனிம வளம் மிக்க ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்துதான் கிடைக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகள்: சூடான், லிபியா, எகிப்து, கென்யா, ஜிம்பாப்பே, எத்தியோப்பியா மற்றும் கினியா.
நாம், நமது நதிகளை மாசுபடுத்துவது சரியா?
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அறியப்படாமல் இருந்ததாலும், மக்கள் வசிக்க ஏற்ற சூழ்நிலை இல்லாததாலும் ஆப்பிரிக்கா கண்டம் இருண்ட கண்டம் என அழைக்கப்பட காரணமாயிற்று.
மெக்காபடிவதும் by ளத்தில் அஷ்து ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து வடஅமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி “(Lake Superor) இக்கண்டத்தில்தான் உள்ளது. மிசிசிப்பி நதி வடஅமெரிக்காவின் நீளமான நதிகளுள் ஒன்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் வடஅமெரிக்கவின் ஒரு பகுதியாகும்.
உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம் வடஅமெரிக்கா ஆகும்.
வடஅமெரிக்காவில் உள்ள சில நாடுகள்: கனடா, மெக்ஸிகோ, நிக்காரகுவா, ஹோண்டுராஸ், கியூ பா, குவாத்தமாலா, பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா.
தென்அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் தென் அரைக்கோளத்திலும், சிறிய பகுதி வடஅரைக்கோளத்திலும் அமைந்துள்ளன. உலகின் மிகப் பரந்த மற்றும் இரண்டாவது நீளமான நதியான அமேசான் நதி தென் அமெரிக்காவில்தான் மக்களின் பெரும்பான புததிகள்-தன் அறக்கே தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாடு அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடர் மிக நீண்ட மலைத்தொடர்களுள் ஒன்று. இது ஒரு மடிப்பு மலை ஆகும். அகோன்காகு வா ஆண்டிஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். உலகின் மிக உயர்ந்த எரிமலைகளுள் ஒன்றான கொடோபாக்சி எரிமலை இக்கண்டத்தில் காணப்படுகிறது.
அமேசான் மழைக்காடுகள் என்பவை, தென்அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பெரிய மழைக்காடு ஆகும்.
தென்அமெரிக்காவில் உள்ள சில நாடுகள்: அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவெடார், பாரகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா.
நாட்டின் பெயர் மற்றும் அது எக்கண்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் கீழுள்ள அட்டவணையில் எழுதுக.
அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. அண்டார்டிகாவில் அரை வருடம் சூரிய வெளிச்சமும், அரை வருடம் இருளாகவும் இருக்கும். பென்குவின்கள் அண்டார்டிகாவில் காணப்படுகின்றன. அங்கு வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
ஐரோப்பாவும், ஆசியாவும் பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாக உள்ளன. யூரல் மலைத்தொடர்களும், காஸ்பியன் கடலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைப் பிரிக்கின்றன. உலகின் மிகச் சிறிய நகரமான வாடிகன் நகரம் ஐரோப்பாவில்தான் உள்ளது. வோல்கா நதி ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று ஆகும்.
ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து, ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில், பனிக்கட்டிகள் உருகி இங்கு நிறைய ஏரிகளை உருவாக்கியுள்ளன.
ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள்: பிரான்ஸ், ஸ்பெயின், ஐக்கிய அரசு, ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரியா, கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி.
இரஷ்யா நாடு கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் பரந்து விரிந்துள்ளது.
உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளி பகுதி ஐரோப்பாவின் ரொட்டிக் கூடை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்கு அதிக அளவு கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்த மாநிலம் இந்தியாவின் ரொட்டிக் கூடை என்று அழைக்கப்படுகிறது?
ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் (Island) கண்டமாகும். தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும். பெருந்தடுப்புப் பவளப்பாறைத் திட்டுகள் (The GreatBarrierReef) ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலியா டாஸ்மேனியா மற்றும் பலத் தீவுகளை உள்ளடக்கியது.