5th Standard Social Science - Term 2 Unit 3: Continents of the World Question and Answers

5th Standard Social Science - Term 2 Unit 3: Continents of the World Q&A
உலகில் உள்ள கண்டங்கள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 2 Unit 3 : Continents of the world

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 3 : உலகில் உள்ள கண்டங்கள்

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 3 : உலகில் உள்ள கண்டங்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. உலகில் ------------------ கண்டங்கள் உள்ளன.
அ) ஐந்து
ஆ) எழு
இ) ஒன்பது
விடை : ஆ) எழு
2) மிகப்பெரிய கண்டம்---------------------------
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) வடஅமெரிக்கா
விடை : ஆ) ஆசியா
3) உலகின் நீளமான நதி --------------------
அ) காவிரி
ஆ) கங்கை
இ) நைல்
விடை : இ) நைல்
4) சுப்பீரியர் ஏரி (Lake.Superior) அமைந்துள்ள கண்டம் ----------------------
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) ஐரோப்பா
விடை : அ) வட அமெரிக்கா
5) பென்குவின்கள் காணப்படும் இடம் …………..
அ) ஆசியா
ஆ) அண்டார்டிகா
இ) ஆப்பிரிக்கா
விடை : ஆ) அண்டார்டிகா

II. பொருத்துக

சிந்திப்போம்: சரியான இணையைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.
1. ஆசியா
- வாடிகன் நகரம்
2. ஆப்ரிக்கா
- அமேசான் காடு
3. ஐரோப்பா
- சகாராப் பாலைவனம்
4. தென் அமெரிக்கா
- கங்காரு
5. ஆஸ்திரேலியா
- மிகப்பெரிய கண்டம்.
விடை : 1. ஆசியா - மிகப்பெரிய கண்டம்
2. ஆப்ரிக்கா - சகாராப் பாலைவனம்
3. ஐரோப்பா - வாடிகன் நகரம்
4. தென் அமெரிக்கா - அமேசான் காடு
5. ஆஸ்திரேலியா - கங்காரு

III. சரியா / தவறா எழுதுக.

1. ஆசியா உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். (விடை : தவறு)
2. உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று இந்தியாவில் உள்ளது (விடை : சரி)
3. பிரேசில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று. (விடை : சரி)
4. பெருந் தடுப்புப் பவளப்பாறை இந்தியாவில் உள்ளது. (விடை : தவறு)
5. அண்டார்டிகாவில் அரைவருடம் சூரிய ஒளி காணப்படும். (விடை : சரி)

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. கண்டங்களின் பெயர்களை எழுதவும். ஏழு கண்டங்களின் பெயர்கள் : ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா.
2. தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது? இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.
3. வடஅமெரிக்காவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எழுதுக.
(i) வடஅமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது.
(ii) மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி இக்கண்டத்தில்தான் உள்ளது.
(iii) மிசிசிப்பி - மிசௌரி நதி வடஅமெரிக்காவின் நீளமான நதிகளுள் ஒன்று.
(iv) அமெரிக்க ஐக்கிய நாடுகள் - வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும்.
4. பெருந்தடுப்புப் பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது? பெருந்தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் (The Great Barrier Reef) ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. ஏறக்குறைய 2500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது.
5. எக்கண்டம் உறைபனிக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது? அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

V. விரிவான விடையளிக்க.

1. ஏதேனும் இரு கண்டங்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
(i) உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும்.
(ii) பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில்தான் உள்ளது.
(iii) சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன. உலக கண்டங்களில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பினைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா ஆகும்.
(iv) உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும், உலகின் மிகப்பெரிய பாலைவனமான சகாரப் பாலைவனமும் ஆப்பிரிக்காவில்தான் உள்ளன.
(v) உலகிலேயே 50% மேல் தங்கம், வைரம் ஆகியவை கனிம வளம் மிக்க ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்துதான் கிடைக்கின்றன.
2. இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுக,
(i) இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும்.
(ii) இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச்சின்னங்களாவன,
(iii) புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் கங்கைகொண். சோழபுரம்.
3. ஆஸ்திரேலியாவைப் பற்றி விரிவாக எழுதவும்,
(i) ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் (Island) கண்டமாகும்.
(ii) தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும்.
(iii) பெருந்தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் (The Great Barrier Reef) ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று.
(iv) 2500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது.
(v) இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலியா டாஸ்மேனியா மற்றும் பலத் தீவுகளை உள்ளடக்கியது.

செயல்பாடு

செயல் திட்டம்

எவையேனும் ஐந்து நாடுகளின் கொடிகளை ஒட்டவும்.