6th Standard Tamil: Tamil Kummi Questions and Answers (Term 1 Chapter 1)

6th Tamil: Tamil Kummi - Perunchithiranar Questions and Answers

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பெருஞ்சித்திரனார் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பெருஞ்சித்திரனார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் ----- அடையலாம்
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
[விடை : ஆ) மேன்மை]
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ---------- சுருங்கிவிட்டது
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
[விடை : இ) வானம்]
3. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
[விடை : ஈ) செம்மை + தமிழ்]
4. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பொய் + அகற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஆ) பொய் + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
[விடை : அ) பொய் + அகற்றும்]
5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
[விடை : அ) பாட்டிருக்கும்]
6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
[விடை : அ) எட்டுத்திசை]

நயம் உணர்ந்து எழுதுக.

1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக. விடை :
சீர்மோனை :
கொட்டுங்கடி – கோதையரே
ட்டுத்திசை – ட்டிடவே
ழி – ஊற்று
ஆழிப் – அழியாமல்
பொய் – பூண்டவரின்
மெய்புகட்டும் – மேதினி
2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோவ் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக. விடை
அடிஎதுகை :
கொட்டுங்கடி – எட்டு
ழி – ஆழி
பொய் – மெய்
சீர் எதுகை :
ட்டுங்கடி – எட்டிடவே
ழி – அழியாமலே
3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக. விடை
இயைபு :
கொட்டுங்கடி – கொட்டுங்கடி,
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும்.

குறுவினா

1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை? விடை :
(i) பொய்மை அகற்றும், மனதில் உள்ள அறியாமை என்ற இருளை நீக்கும்.
(ii) அன்பு உடையவருக்கு இன்பம் தரும். பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைக் கற்பித்து அறத்தின் உயர்வை உணர்த்தும். இவ்வுலக மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டும்.
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்? விடை
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன? விடை
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினால் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி.
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக. விடை
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

சிந்தனை வினா

தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்? விடை
பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.

கற்பவை கற்றபின்

Activity Icon
1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க. விடை

தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழவழி காட்டிருக்கும்!
- பெருஞ்சித்திரனார்
2. பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க.
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
- வாணிதாசன்