6th Standard Tamil Term 1 Chapter 2 Language Skills Book Back Questions and Answers

6th Standard Tamil Term 1 Chapter 2 Language Skills Questions and Answers
பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்! 6th Tamil Icon கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க
1. இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.
விடை:
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
2. பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.
விடை:
மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கன், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
விடை:
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.
2. இப்பத்தியில் உன்ன இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
விடை:
பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
விடை:
நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
விடை:
இயற்கை வளம்.
ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக.

(i) மாமழை
(ii) வான் சிறப்பு
(iii) முரல் மீன்
(iv) வலசைபோதல்
(v) பறவை இனங்கள்
(vi) சார்பு எழுத்துகள்
(vii) சாண்டியாகோ
(viii) தோற்கடிக்க முடியாது
(ix) காணிநிலம்

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
இயற்கையைக் காப்போம்
முன்னுரை:
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.
இயற்கை இன்பம்:
இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பனிபடர்ந்த மலைகள், பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும். பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள், நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல், பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.
இயற்கை இன்பத்தை இழக்கிறோம்:
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றது. மலைகளின் சரிவு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம். போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டது. இவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டன. வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.
இயற்கைச் சூழல்:
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாகக் கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.
முடிவுரை:
பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டு, மெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். அணுத்தீமை, நீர்நிலை அழிப்பு, சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டு, பசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.
மொழியோடு விளையாடு Activity திரட்டுக.
கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
(1) அரி
(2) அலை
(3) ஆர்கலி
(4) ஆழி
(5) திரை
(6) விரிநீர்
(7) முந்நீர்
(8) பரவை
(9) சமுத்திரம்
(10) அழவம்
(11) பெருநீர்
(12) பௌவம்
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.
2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ________ என்று பெயர். (பறவை / பரவை)
விடை: பரவை
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ________ ஆற்றினார். (உரை / உறை)
விடை: உரை
3. முத்து தம் ________ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
விடை: பணி
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ________. (அலைத்தாள் / அழைத்தாள்)
விடை: அழைத்தாள்
பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. 'புள்' என்பதன் வேறு பெயர்
2. பறவைகள் இடம்பெயர்தல்
3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்
Grid Image
வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார்
விடை: சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.
கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக. Word Search Grid
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று
மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை
முப்பது
3. திங்கள் என்பதன் பொருள்
நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை
செங்கால் நாரை
5. பாரதியார் ________ நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.
காணி நிலம்
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்.
தனிநிலை
கவிதை படைக்க.
கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
…………………………………
………………………………..
………………………………..
விடை :
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
ஆற்றில் வெள்ளம் பெருகிடும்
அணைகள் நிரம்பி வழிந்திடும்
நிலத்தடி நீரும் ஊறிடும்
பயிர்கள் செழிக்க உதவிடும்
இயற்கை எல்லாம் சிரித்திடும்
இன்பக் கடலில் ஆழ்த்திடும்
பட்ட மரங்கள் துளிர்த்திடும்
பாரே உன்னைப் போற்றிடும்.
நிற்க அதற்குத் தக Values என் பொறுப்புகள்...

அ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்
ஆ) இயற்கையைப் பாதுகாப்பேன்

கலைச் சொல் அறிவோம்

கண்டம் - Continent
தட்பவெப்பநிலை - Climate
வானிலை – Weather
வலசை - Migration
புகலிடம் - Sanctuary
புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

இணையத்தில் காண்க Internet

அழித்து வரும் உயிரினங்கள்பற்றி இணையத்தில் தேடி அறிந்து பட்டியவிடுக.

இணையச் செயல்பாடுகள்
பறவைகள் வலசைபோதல்

செயல்பாட்டில் கிடைக்கப்பெறும் படம்

Migration Map
படிகள்:

(i) கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'globcofoird migration' என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும்.
(ii) இணையச் செயலி இயங்கு நிலைக்கு வர, சற்று நேரம் ஆகும். அதுவரை காத்திருக்கவும். இணையச்செயலி தயார் நிலைக்கு வந்தவுடன் ஓர் உலக உருண்டையைக் காணலாம். அதன் மையத்தில் இருக்கும் 'Click to Start' என்பதைச் சொடுக்கவும். இப்போது திரையின் இடப் பக்கத்தில் பறவைகளின் பெயர்ப் பட்டியல் தெரியும். அதில் ஏதேனும் ஒரு பறவையைத் தெரிவு செய்து அதன் வலசை போகும் பாதையைத் தெரிந்து கொள்ளலாம்.
(iii) பூமி உருண்டையைச் சுழற்றுவதன் மூலம் வெவ்வேறு பறவைகளின் வலசை போதலை அறியலாம்.

செயல்பாட்டிற்கான உரலி: Intp://globeofhirimigration.com/

Tags : Term 1 Chapter 2 | 6th Tamil பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ். 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum : Tamil Language Exercise - Questions and Answers Term 1 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers.