பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்
இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்
(i) க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகள்.
(ii) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டும்.
‘ங’ வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டும்.
வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகள்.
‘ய’ வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகள்.
‘வ’ வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகள்.
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை .
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்க.
உங்களை ஓர் அறிவியல் அறிஞராகக் கற்பனை செய்து கொண்டு எவ்வகைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவீர்கள் என்பது குறித்துப் பேசுக.
(i) நான் அறிவியல் அறிஞரானால் நாட்டு மக்களுக்குப் பயன்தரும் ஆராய்ச்சிகளைச் செய்வேன். அறிவியல் பிரிவில் விலங்கியலைப் பாடமாக எடுத்துப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி செய்வேன்.
(ii) முதலில் மக்களின் மனதில் எழும் கோபம், தீயகுணங்கள் அதாவது எதிர்மறையான எண்ணங்கள், பிறரை அழிக்கும் வஞ்சக எண்ணம். இவற்றையெல்லாம் தூண்டும் உட்சுரப்பு நீர் (Harmone) எதுவெனக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வேன்.
(iii) ஏழை முதல் பணக்காரன் வரை இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் பணம் ஒன்றே முதன்மையானது என்ற எண்ணத்தில் உலா வருகிறார்கள். அவரவர் நிலைக்கேற்றபடி அவர்களின் தேவை வேறுபடுகிறது.
(iv) இவர்களின் தேவையை நிறைவேற்ற மனம் போன போக்கில் பல நேர்மையற்ற செயல்களைச் செய்கின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு என் ஆராய்ச்சி கட்டாயம் பயன்படும்.
(v) இக்கண்டுபிடிப்பால் மாணவர்கள் தங்களின் இளமைப் பருவத்திலிருந்தே பெற்றோரை மதித்தல், ஒழுக்கச் சீலராய் வாழ்தல், தங்கள் மனதை அமைதியான நிலையில் வைத்தல், போட்டி, பொறாமை இன்றி வாழ்தல் ஆகிய நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வர். அவர்களால் ஒரு நல்ல சமுதாயமே உருவாகும் என நம்புகிறேன்.
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
(i) ஈடுபாடு (ii) நுண் பொருள் (iii) உற்றவன் (iv) பெருங்கடல் (v) துருவப் பகுதி (vi) குறிக்கோள் (vii) தொழில்நுட்பம் (viii) நுண்ணுணர்வு (ix) போலியோ (x) மூலக்கூறுகள்
மக்களுக்குப் பயன்படும் பொருள்களுள் மிகவும் இன்றியமையாதவை அறிவியல் சாதனங்கள். அறிவியலின் துணைகொண்டு தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, தொழிலில் அறிவியல் என்று பல வளங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
அன்றாட வாழ்வில் அறிவியல் :
அறிவியல்’ என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகமே அடங்கிவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நிறைந்துள்ளது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரங்கள், சமையல் செய்யப் பயன்படும் வாயு அடுப்பு, மின்சார அடுப்பு, பல வகையான மின் விளக்குகள், குளிரூட்டும் இயந்திரம், குளிர்காலத்தில் வெம்மையைக் கொடுக்கும் இயந்திரங்கள், தூசு நீக்கி, ஈரம் அகற்றி, ஒட்டடை போக்கி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பயன்பாடுகள் :
மாணவர்கள் கல்வி கற்கப் பயன்படுகின்ற நூல்கள் அனைத்தும் அறிவியல் சாதனமான அச்சுப் பொறிகளின் உதவியால் கிடைக்கின்றன. தகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி ஆகியவை பல வகைகளில் மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. செல்பேசி, தொலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல் போன்றவற்றின் பயன்கள் எண்ணிலடங்காதவை.
மருத்துவத்துறை :
நோயறியும் கருவிகளும், வந்த நோயைப் போக்கவும் பல மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய புதிய நோய்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அவற்றைப் போக்க பலவிதமான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானங்கள் பெருகியுள்ளன. உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்குச் சரியான நேரத்தில் பொருத்தி நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
தொழில்துறை :
தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் இயந்திரங்கள் உருவாக்குவதற்கும் அறிவியல் மிகவும் பயன்படுகிறது. உற்பத்திப் பொருள்களைப் பெருக்குவதற்கும், நேரத்திற்கு அவற்றை நுகர்வோர்க்கு அனுப்புவதற்கும் பயன்படுகிறது. வேளாண் துறைகளில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.
போக்குவரத்து சாதனங்கள் :
மிதிவண்டி, இரு சக்கர வண்டி, மகிழுந்து, பேருந்து, சரக்குந்து என சாலை வழி வாகனங்களும் நீர் வழிப்பயணத்திற்குப் பயணம் செய்ய கப்பல்களும், வான்வழிப் பயணத்திற்குப் பயணம் செய்ய வானூர்த்திகளும் மிகுந்த அளவில் பயன் தருகின்றன. வானில் ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் யாவுமே அறிவியலின் கண்டுபிடிப்புகளாகும்.
முடிவுரை :
இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து ஆராய்ந்து அதில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே அறிவியல். அறிவியலின் வியத்தகு சாதனங்களைப் போற்றுவோம். அவற்றை நன்மைக்காவே பயன்படுத்துவோம்.
பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க.
எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்
(எ.கா.) நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)
நான் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.
(i) எதையும் அறிந்து கொள்ள விரும்பு.
(ii) எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு.
(iii) எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு.
(i) நான் ஊருக்குச் சென்றேன்.
(ii) நான் நேற்று ஊருக்குச் சென்றேன்.
(iii) நான் பேருந்தில் நேற்று ஊருக்குச் சென்றேன்.
(எ.கா.) அறி - அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
(எ.கா.) கம்பு
கம்பு, வம்பு, நம்பு, நம்பி, கம்பி, தம்பி
1. அப்துல்கலாமின் சுயசரிதை
3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி
10. எந்திரமனிதனுக்குக் குடியுரிமை வழங்கிய முதல் நாடு
வலமிருந்து இடம்
2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்.
6. சதுரங்கப் ---------- யில் டீப்புளூ வெற்றி பெற்றது.
8. மருந்து என்னும் பொருள் தரும் சொல்.
மேலிருந்து கீழ்
1. 'ரோபோ' என்னும் சொல்லின் பொருள்
2. அகர வரிசையில் அமையும் இலக்கியம்
7. 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டம் பெற்ற எந்திரமனிதன்.
கீழிருந்து மேல்
4. இந்தியா செலுத்திய ஏவுகணை.
5. தானாகச் செயல்படும் எந்திரம்.
9. அப்துல்கலாம் வகித்த -------- குடியரசுத் தலைவர்.
இடமிருந்து வலம் :
1. அக்னிச் சிறகுகள்
3. எந்திர மனிதன்
10. சவுதி அரேபியா
மேலிருந்து கீழ் :
1. அடிமை
2. ஆத்திசூடி
7. சோபியா
வலமிருந்து இடம் :
2. ஆய்வு
6. போட்டி
8. ஔடதம்
கீழிருந்து மேல் :
4. அக்னி
5. தானியங்கி
9. பதவி
மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து பழுதாகிப் பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
• அழ ஆரம்பித்து விடுவேன்.
• யாரிடமாவது உதவி கேட்பேன்.
• அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.
• ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.
அறிவியல் கருவிகளை நன்மைக்கு மட்டும் பயன்படுத்துவேன்
பலவகை எந்திர மனிதர்களின் படங்களை இணையத்தில் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Google Handwriting Input எனும் விசைப்பலகையைப் பயன்படுத்துதல்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறும் படம்
செயல்பாட்டிற்கான உரலி
Google Handwriting: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps
தமிழ் 99: https://play.google.com/store/apps/details?id=in.androidtweak.input method.indic&hl=en
செல்லினம்: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en
ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.